ஏந்திகள்வழி பரவும் நோய்கள் ஆகிய இரண்டிற்கும் இன்சூர் செய்வது ஏன் அவசியமாக கருதப்படுகிறது ?

1
 கோவிட்-19 என்று வரும்போது மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்றும் இருக்கிறது. (1)
2
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படும் அனைத்து விதமான தொற்று நோய்களிலும், ஏந்திகள்வழி பரவும் நோய்கள் மட்டுமே 17% ஆக உள்ளது. அது மட்டுமின்றி, அந்நோய்கள் 700,000 இறப்புகளுக்கு வழிவகுக்கிறது! (2)
3
இந்தியாவிலிருக்கும் ஏராளாமான மக்கள் தொகையினாலும், தட்பவெப்ப நிலையின் காரணமாகவும் மலேரியா நீண்ட காலமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. 2018இல் மட்டும் 429,928 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி 96 பேர் மலேரியாவினால் உயிரிழந்துள்ளனர்! (3)

கோவிட்-19 மற்றும் ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்காக டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன் ஏன் சிறந்தது?

  • ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இன்டிவிஜுவல் கவர்/தனிப்பட்ட காப்பீடு:அனைவருக்குமே போதுமான பாதுகாப்பு தேவை, அதனால்தான் உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் இந்த பாலிசியை உங்களால் வாங்க முடியும்
  • அறை வாடகைக்கு ஆகும் செலவுக்கு வரம்பு இல்லை: அனைவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் உள்ளன, எங்களால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான்,  அறை வாடகை (ரூம் ரென்ட்) அல்லது ஐசியு அறை வாடகைக்கு ஆகும் செலவிற்கு வரம்பு இல்லை. நீங்கள் விரும்பும் எந்த அறையை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.
  • உங்கள் இன்சூரன்ஸ் தொகையை தனிப்பயனாக்கவும்: ஒவ்வொருவரின் தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதனால்தான், நாங்கள் உங்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில், நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகையை சுயமாகத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தையும் உங்களுக்கு வழங்குகிறோம்!
  • குறைந்தபட்ச காத்திருப்பு காலம்: பாலிசி  தொடங்கிய தேதியிலிருந்து, இந்த பாலிசிக்கு காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) குறைந்தபட்சமாக 15 நாட்கள் மட்டுமே.
  • எளிமையானது, மற்றும் டிஜிட்டல் ஃபிரண்ட்லி: இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது முதல் அதற்கான கிளைம்-ஐ கோருவது வரையிலான அனைத்து செயல்முறைகளும் எளிதானது. மேலும், அவற்றை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் செய்யலாம்.

இந்த பாலிசியின் கீழ் உள்ளடங்கியுள்ளவை யாவை?

இதில் உள்ளடங்காதவை யாவை?

இந்த பாலிசி எந்த ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்குக் காப்பீடு அளிக்கிறது?

மலேரியா

மலேரியா காய்ச்சல் புரோட்டோசோவாவினால்  ஏற்படுகிறது - இது பெண் அனோபிலிஸ் கொசுவின் பிளாஸ்மோடியம் மூலம் பரவுவதால், காய்ச்சல், பலவீனம், குளிர், தலைவலி, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றை விளைவிக்கிறது.

டெங்கு

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கடி மூலம் பரவும் வைரஸால் ஏற்படுகிறது, இதன் விளைவாக காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, தோல் தடிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான உள் இரத்தப்போக்கு போன்றவை ஏற்படுகிறது.

ஜிக்கா வைரஸ்

ஜிக்கா வைரஸ் கொசுக்கடி மூலம் ஏற்படும் வைரஸினால் ஏற்படுகிறது, இது காய்ச்சல், தோல் தடிப்பு, தசை வலி மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கிறது. ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், வயிற்றில் உள்ள தங்கள் சிசுவிற்கு இவ்வைரஸை பரப்புகின்றனர். அதனால், சிசுவிற்கு மைக்ரோசெஃபாலி ஏற்பட வாய்ப்புள்ளது.

யானைக்கால் நோய்

நிணநீர் மண்டலம் மைக்ரோ பைலேரியா ஒட்டுண்ணியால் முடக்கப்படும் போது யானைக்கால் நோய் ஏற்படுகிறது. இதனால்,  கைகால்களில் நிரந்தர உருமாற்றங்கள் ஏற்படும்.

கலா அசார்

லேயிஷ்மேனியா டோனோவானி என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் நாள்பட்ட மற்றும் அபாயகரமான நோய்த்தொற்றே கலா அசார் என்னும் கருப்பு காய்ச்சல் ஆகும். இந்நோயினால் உள்ளுறுப்புகள் அதாவது விஸ்செரா என்றழைக்கப்படும் உள் உறுப்புகள் (குறிப்பாக கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகள்) பாதிப்படைகிறது.

சிக்குன்குனியா

சிக்குன்குனியா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் வைரஸினால் ஏற்படும் நோய் ஆகும். இந்நோய், காய்ச்சல், பலவீனம் மற்றும் கடுமையான மூட்டு வலிகளுக்கு வழிவகுக்கிறது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது வைரஸ் காரணமாக ஏற்படுகின்ற மூளை அழற்சி ஆகும். இந்நோயினால் மு, காய்ச்சல், வாந்தி, வலிப்பு மற்றும் மரணம் போன்றவை ஏற்படுகிறது.

இந்த பாலிசியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஏந்திகள்வழி பரவும் நோய்கள் மற்றும் கோவிட்க்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்