ஹூண்டாய் i10 சீரிஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை தரம், செயல்திறன் மற்றும் ஸ்டைல் மூலம் மறுவரையறை செய்தது. அமர்க்களமான டிசைன்கள் மற்றும் அட்டகாசமான கலர்கள் இந்தியர்களின் கண்களைக் கவர்ந்திழுகின்றது, அதிலும் அதன் டைனமிக் டிசைன் வேற லெவலில் கிடைக்கிறது.
i10 வேரியண்ட்டில் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ப்ளூலிங்க் கனெக்டட் கார் சர்வீசஸ் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் சப்போர்ட்டுடன் 8 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, ஹூண்டாய் அதன் புதுமையான ஸ்மார்ட்சென்ஸ் மற்றும் அட்வான்ஸ்ட்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை பொருத்தியுள்ளது.
ஹூண்டாய் i10 கார் 2 பெட்ரோல் மற்றும் 1 எல்.பி.ஜி எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 1086 cc மற்றும் 1197 cc பவரையும், எல்.பி.ஜி மோட்டார் அதிகபட்சமாக 1086 cc பவரையும் வெளிப்படுத்தும். அனைத்து வெர்ஷன்களும் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் நிறுவப்பட்டுள்ளன. எரிபொருள் வகையின் அடிப்படையில், i10 வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 16.95 முதல் 20.36 கிமீ மைலேஜ் தரும். ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் ஸ்போர்ட்டியர் டிரைவிங் அனுபவத்தை வழங்கும் ஆப்ஷனல் 100PS எஞ்சினுடன் வருகின்றது.
இப்போது, இந்த மாடல்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஓட்டினால், ஹூண்டாய் i10 கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது நிதிச் சுமையைத் தவிர்க்க ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும்.
மேலும், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்திய சாலைகளில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது கட்டாயமாகும்.