இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஹூண்டாய் கம்பெனியின் தொடர்ச்சியான வெற்றிக்கு அதன் முதன்மை ஹேட்ச்பேக் - சான்ட்ரோவின் புகழ் முக்கிய காரணமாகும்.
முதல் சான்ட்ரோ மாடல் 1998 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, அதன் பின்னர் இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக காம்பேக்ட் 5 சீட்டர் ஃபேமிலி கார் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த காரின் மூன்றாவது தலைமுறை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2019 ஆம் ஆண்டின் சிறந்த 3 நகர்ப்புற உலக கார்களில் ஒன்றாக பாராட்டப்படுகிறது(1).
எனவே, தினசரி பயணங்களுக்காக ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்பும் எவருக்கும், ஹூண்டாய் சான்ட்ரோ சந்தேகத்திற்கு இடமின்றி கருத்தில் கொள்ளத்தக்க தேர்வாக இருக்கும்.
இப்போது சான்ட்ரோவை வாங்கும் முடிவில் நீங்கள் இருப்பதால், சாலையில் இருக்கும்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத சம்பவங்களால் காருக்கு ஏற்படும் டேமேஜ்களிலிருந்து வாகனத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கக்கூடிய சாத்தியமான கார் இன்சூரன்ஸ் விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக, ஒருவர் தேர்வு செய்யக்கூடிய இரண்டு வகையான சான்ட்ரோ கார் இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன - தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி.
அதன் பெயர் குறிப்பிடுவது போல, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் சான்ட்ரோவால் தேர்டு பார்ட்டி வாகனம், தனிநபர் அல்லது ப்ராபர்டிக்கு ஏற்படும் டேமேஜ்களை உள்ளடக்கியது. இது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் கட்டாயமாக்கப்பட்ட ஒரு பாலிசியாகும் - பாலிசி இல்லாமல் வாகனம் ஓட்டுவது ரூ.2000 (மீண்டும் மீண்டும் குற்றத்திற்கு ரூ.4000) போக்குவரத்து அபராதம் விதிக்கப்படலாம். மறுபுறம், ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி ஒரு விபத்தில் உங்கள் சான்ட்ரோவால் ஏற்படும் சேதங்களுக்கு அவுட் அண்ட் அவுட் கவரேஜை வழங்குகிறது.
எனவே, சாலையில் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து உங்கள் காரைப் பாதுகாக்க ஒரு காம்ப்ரிஹென்சிவ் சான்ட்ரோ இன்சூரன்ஸ் பாலிசி மிகவும் சிறந்த தேர்வாகும்.
இது தொடர்பாக, சான்ட்ரோ கார் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் பெனிஃபிட்கள் ஒரு இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து மற்றொரு இன்சூரன்ஸ் வழங்குநருக்கு மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்.