பயன்படுத்தப்பட்ட பைக்கான இன்சூரன்ஸ் பாலிசி

உங்கள் டிஜிட் பாலிசியை புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்குவதற்கு முன்பு நீங்கள் சரிபார்க்க வேண்டிய விஷயங்கள்

நீங்கள் உங்களுக்கென்று பைக் வாங்க வேண்டும் ஆனால் அதற்கு அதிகம் செலவழிக்க கூடாது என்று சூழ்நிலை வரும் போது, பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்குவது ஒரு சிறந்த தேர்வு. உங்கள் மனதை நிலைப்படுத்தி நீங்கள் விரும்பும் பைக்கில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாலையில் பல மைல் தூரம் ஒட்டி சாகசம் செய்து மகிழ்வதற்கு ஏற்றதொரு பைக்கை உங்களுக்காக வாங்குங்கள்.

என்ன பார்க்க வேண்டும், எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கிறதா? கவலை வேண்டாம், நாங்கள் உங்களை வழிநடத்துகிறோம்.

நீங்கள் பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்குவதற்கு முன்பு நீங்கள் சரிபார்க்க செய்யவேண்டிய செக்லிஸ்ட்

நீங்கள் ஓட்ட திட்டமிடும் முறைக்கு ஏற்ற பொருத்தமான பைக்கை வாங்க பாருங்கள்- உங்களை நீங்களே பைக்கை எப்படி மற்றும் என்ன நோக்கத்திற்காக பயன்படுத்துவீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள, அதன் பின்னர் உங்கள் தேடலை அதற்கேற்றவாறு அமைத்திடுங்கள்.

ஆராய்ச்சி அவசியம் - பைக்குகள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்தையும் குறிப்பாக நீங்கள் எந்த வகை பைக்கைத் தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ, அதைப் பற்றி அறிந்துக்கொள்ள ஆன்லைனில் நிபுணர்களிடம் பேசுங்கள்

பைக்கை சோதித்தால் - அதில் அடித்திருக்கும் பெயிண்ட், ஸ்க்ராட்சஸ், ஏதேனும் ப்ளூயிட் லீக்கேஜ், டயர்கள் அல்லது ஏதேனும்  தேய்மானம் மற்றும் கீறல் ஆகியவை உள்ளனவா என்பதைப் பார்க்கவும். அதன் பொதுவான வெளிப்புறத் தோற்றத்தைப் பார்க்கவும். ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை தெளிவாக பார்க்கவும். ஸ்க்ராட்சஸ் மிக ஆழமாக இல்லாமல் இருந்தால் அதைப் பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம்.

பிரேக்குகள்- ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான பைக்குகளுக்கு ட்ரம் பிரேக்குகள் இருக்கும். எனவே, பிரேக்குகளை நன்கு சோதித்து நீங்கள் அதை வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது மாற்ற விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்கவும். சர்வீஸ்-உம் பரிந்துரை செய்யப்படலாம்.

சர்வீஸ் ரெக்கார்ட் - மேற்கூறிய பைக் எத்தனை முறை சர்வீஸ்க்கு போயிருக்கிறது மற்றும் என்ன நோக்கத்திற்காக போயிருக்கிறது என்பதை முந்தைய உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும். .

ஏதேனும் பிழை இருந்தால் பைக்கின் VIN எண்ணை ஸ்கேன் செய்யவும் - ஒரு வண்டியின் அடையாள எண் என்பது வண்டியை சட்டபூர்வமாக அடையாளம் காணுவதற்கான ஒரு தனித்துவம் வாய்ந்த சீரியல் எண்ணாகும். பெரும்பாலான வண்டிகளில், ஹெட்லைட்டிற்கு பின்பு ஸ்டியரிங்கின் கழுத்து பகுதியில் VIN எண் பதிவிடப்பட்டிருப்பதை நீங்கள் கண்டறியலாம். இந்த எண் அபிஷியல் டைட்டிலுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

விளக்குகள் - ஹெட்லைட் பல்ப், இண்டிகேட்டர்ஸ் மற்றும் டெயில் லயிட்ஸ் அனைத்தும் எரியும் நிலையில் இருத்தல் வேண்டும் அது மட்டுமின்றி போதியளவு பிரகாசமாகவும் நன்கு எரியும் நிலையில் இருத்தல் வேண்டும். அப்படியில்லையெனில், பல்புகளை மாற்றுங்கள்.

ஆவணங்களை சரிபார்க்கவும் - RC புக், பைக் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்சின் காலாவதி தேதி, மாசுபாட்டு சான்றிதழ், ஒரிஜினல் இன்வாய்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி (ஏதேனும் இருந்தால்)

டெஸ்ட் டிரைவ் - வேகம், மைலேஜ் மற்றும் அதன் செயல்திறன் உங்களுக்குத் பிடித்திருக்கிறதா என்பதை சரிபார்க்க விரைவான ஒரு ரைட் செல்லுங்கள்.

உங்கள் லோக்கல் மெக்கானிக்கிடம் பேசி விரிவான மதிப்பாய்விற்கு திட்டமிடவும். நீங்கள் ஒரு தனியாரிடமிருந்து செகண்ட்-ஹேண்ட் பைக்கை வாங்க முடிவுசெய்துவிட்டாலும், நீங்கள் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு ஒரு மூன்றாம் தரப்பினரால் அதை நன்கு ஆராய்வது சாலச்சிறந்தது. 

நீங்கள் பயன்படுத்தப்பட்ட பைக்கை வாங்கியப்பிறகு, உங்களுக்கு மெக்கானிக்கல் பணி அவ்வளவாக தெரியவில்லையெனில் அதை அருகாமையில் இருக்கும் பைக் ஷாப்பிற்கு எடுத்து சென்று சோதிப்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இதெல்லாம் முடிந்த பிறகு, எல்லா பேப்பர் ஒர்க்குகளையும் முடிப்பதற்கான நேரமிது, இதில் குறிப்பாக உரிமை மற்றும் இன்சூரன்ஸை  உங்கள் பெயரின் கீழ் மாற்றுவது அடங்கும்.

பைக் உரிமையை எவ்வாறு மாற்றுவது?

உரிமையை மாற்றுவது மிக முக்கியம், மேலும் அதை நீங்கள் பின்வருமாறு தான் செய்ய வேண்டும்:

படி 1- பைக் உரிமையாளர் ஆரம்பத்தில் பதிவு செய்த அதே RTOவிடம் நீங்கள் பைக் உரிமைக்கான மாற்றத்திற்கும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

படி 2- ஆர்சி, இன்சூரன்ஸ், எமிஷன் டெஸ்ட், வரி செலுத்தப்பட்ட ரசீதுகள், விற்பனையாளரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்ட முகவரிச் சான்று மூன்று போன்றவற்றை ஒரிஜினல் ஆவணத்துடன் ஃபார்ம் 29 மற்றும் பார்ம் 30 போன்றவைகளையும் டிரான்ஸ்போர்ட் ஆபிஸ் டைரக்டரேட்டில் சமர்ப்பிக்கவேண்டும் .

படி 3 - ரெஜிஸ்டரிங் அதிகாரியால் அனைத்து சார்பார்ப்புகளுக்கும் செய்யப்பட்ட பின்னர், உரிமை மற்றும் பைக்கின் இன்சூரன்ஸ் உங்களுக்கு 14 நாட்களுக்குள் மாற்றப்படும். 

எளிமையாக இருக்கிறது இல்லையா? மேலும், இங்கு உங்களுக்கு தேவைப்படும் ஆவணகள் பின்வருமாறு:

  • ஃபார்ம் 29 என்பது செல்லர்களின் கையொப்பத்துடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: 2 காப்பிகள்
  • இரண்டு தரப்பினரும் ஃபார்ம் 30 இல் சேசிஸ் அச்சுடன் கையொப்பமிட வேண்டும்: 1 காப்பி
  • ஒருவேளை பைக் மற்றொரு பகுதியிலிருந்தோ அல்லது RTO விலிருந்து வாங்கப்பட்டிருந்தால், அவரோ அல்லது அவளோ என்ஓசி-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஒருவேளை பைக்கை செல்லர் கடனில் வாங்கியிருந்தால், வங்கியிலிருந்து என்ஓசி பெற்றிருப்பது அவசியம்.
  • ஒரிஜினல் ஆர்சி
  • இன்சூரன்ஸ் காபி
  • எமிஷன் டெஸ்ட்
  • வரி செலுத்தப்பட்ட ரசீதுகள்
  • செல்லரின் முகவரி சான்றிதழ்
  • 3 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள்

1989 சென்ட்ரல் மோட்டார் வெஹிக்களின் விதி 81 படி, மேல் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணத்துடன் ரிஜிஸ்ட்ரேஷன் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எவ்வாறு பைக் இன்சூரன்ஸை மாற்றுவது?

வாங்கும் பைக்கின் இன்சூரன்ஸை மாற்றுவதும் மிகவும் முக்கியம் ஆகும். பைக்கின் உரிமையை மாற்றும் போது நீங்கள் அனைத்து செயல்களையும் முழுமையாக பூர்த்தி செய்துவிட்டீர்களா என்பதை உறுதி செய்துகொள்வது மிக அவசியம். இது பைக் இன்சூரன்ஸை மாற்றுவதற்கான செயல்பாடு எளிதாக இருப்பதை உறுதி செய்கிறது.

நீங்கள் பைக் இன்சூரன்ஸை மாற்றுவதற்கு செய்ய வேண்டிய அனைத்தும் பின்வருமாறு:

  • உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இன்சூரன்ஸ் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பைக் உரிமையாளருக்கான மாற்றம் நடந்து 15 நாட்களுக்குள் உரிமையாளர் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இன்சூரன்ஸ் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • ரெஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ், உரிமை மாற்றத்திற்கான தேதி, ஒரிஜினல் இன்சூரன்ஸ் பாலிசிக்கான விவரங்கள், வாகன விவரங்கள், டீலர்களின் பெயர் மற்றும் செலுத்தப்பட்ட பிரீமியம் போன்ற தேவையான ஆவணங்களை எடுத்துச்செல்லவும்.
  • உரிமையாளரின் தனிப்பட்ட விவரங்களுடன், வாங்குபவர் PAN கார்டு அல்லது ஆதார், ஓட்டுனர் உரிமம் போன்ற அவர்களது தனிப்பட்ட ஐடி-ஐயும் இன்சூரன்ஸ் மாற்றத்திற்கான ரெக்கார்டிக்காக சமர்ப்பிக்க வேண்டும். இன்சூரர் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர், பாலிசியில் உள்ள பெயர் புதிய உரிமையாளரின் பெயருக்கு மாற்றப்படும்.
  • மாற்றத்தின் போது பைக்கின் உரிமையாளர் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸையும் சமர்ப்பிக்க வேண்டும் ஏனெனில் அது பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கணக்கிட உதவும்.
  • பைக்கின் உரிமையாளர் நோ-கிளைம் போனஸின் பலன்களை பிரீமியம் தொகையில் அனுபவிக்கலாம். பைக்கின் உரிமையாளர் தனது புதிய வாகனத்திற்கான காப்பீட்டை வாங்கும் போது, ​​NCB சான்றிதழைச் சமர்ப்பித்தால், தற்போதைய பைக்கின் பிரீமியம் தொகையில் நோ-கிளைம் போனஸ் வடிவில் தள்ளுபடி போன்ற பலன்களை அனுபவிக்க முடியும்.

நீங்கள் வாங்கிய பயன்படுத்தப்பட்ட பைக்கிற்கு புதிய இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கவும்.

ஒருவேளை உங்கள் செகண்ட் ஹேண்ட் பைக், பைக் இன்சூரன்ஸ் உடன் வரவில்லை எனில், சட்டத்தினால் இன்சூரன்ஸ்  கட்டாயமயமாக்கப்பட்டதால் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப இன்சூரன்ஸ் ஒன்றை வாங்க வேண்டியிருக்கும். செகண்ட் ஹேண்ட் பைக்கிற்கு பெரும்பாலும் விரும்பப்படும் பாலிசி காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி ஆகும், இது தனிப்பயணக்கப்பட்ட ஆட்-ஆன்களுடனான அதிகபட்ச கவரேஜை வழங்கி உங்களுக்கு பயனளிக்கும். நீங்கள் உங்கள் பைக்கை ஆன்லைனில் இன்சூர் செய்யலாம் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் எல்லா தேவையான ஆவணங்களுடனும் செல்லலாம், மேலும் பல வகை பாலிசிகளில் இருந்து உங்கள் பைக்கிற்கு மிக சிறப்பாக பொருந்தும் ஏதேனும் ஒரு பாலிசியை தேர்வு செய்யவும்

பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு வழங்கப்படும் பாலிசிகளின் வகைகள்

தேர்ட்-பார்ட்டி - தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது பெயர் குறிப்பிடுவது போல தேர்ட் பார்ட்டி இழப்பீடுகள் மற்றும் உரிமையாளருக்கான தனிப்பட்ட விபத்திற்கு ஆகும் செலவையும் கவர் செய்கிறது.

காப்பீடு செய்யப்படுவது யாவை?

  • மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் காயம் அல்லது உயிரிழப்பு
  • வேறு ஒருவரின் சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்படும் சேதம்
  • ஒருவேளை உங்களிடம் ஏற்கனவே இன்சூரன்ஸ் இல்லையெனில், ஓனர்-டிரைவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதத்திற்கு எந்த வரம்புமின்றி காப்பீடு அளிக்கப்படும்

காப்பீடு செய்யப்படாதது யாவை?

  • பாகங்களின் தேய்மானம், பிரேக்டவுனிற்கான உதவி போன்ற பல ஆட்-ஆன்கள்
  • விபத்து, திருட்டு, தீ போன்ற பல காரணிகளால் உங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதம்.

பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு காம்ப்ரிஹென்சிவ் அல்லது ஸ்டாண்டார்ட் பேக்கேஜ் பாலிசியைப் பரிந்துரைக்கிறோம். ஆனால், ஒருவேளை நீங்கள் மிக அரிதாகவே உங்கள் பைக்கை பயன்படுத்தியிருந்தாலோ அல்லது அது ஏற்கனவே மிகவும் பழையதாக இருந்தாலோ, அதற்கு தேர்ட் பார்ட்டி லையபிலிட்டி என்பது மிக மோசமான விருப்பத்தேர்வாக இருக்காது.

காம்ப்ரிஹென்சிவ் பாலிசி - இந்த பாலிசியானது தேர்ட் பார்ட்டி இழப்புகள், விபத்துகளால் உங்கள் பைக்கில் ஏற்படும் சேதங்கள் மற்றும் உரிமையாளருக்கான தனிப்பட்ட விபத்து ஆகியவற்றை உள்ளடக்கியது. இது காம்ப்ரிஹென்சிவ் அல்லது ஸ்டாண்டர்ட் டூ வீலர் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசியாகும், இது உங்கள் பைக்கிற்கும் நிச்சயமாக உங்கள் பாக்கெட்டுக்கும் மிகுந்த நிதிப் பாதுகாப்பை அளிக்கக்கூடியத் தேர்வாகும்.

காப்பீடு செய்யப்படுவது யாவை?

  • தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் வழங்கும் அனைத்து நன்மைகளையும் அதாவது தேர்ட்-பார்ட்டியின் சொத்து அல்லது வாகனத்திற்கு ஏற்படும் சேதம் மற்றும் தேர்ட் பார்ட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, தேர்ட் பார்ட்டி ஏற்படும் உயிரிழப்பு அல்லது ஊனம் போன்ற தேர்ட் பார்ட்டிக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்
  • அத்துடன், விபத்துகள், தீ, திருட்டு போன்றவற்றால் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதம்.
  • ஒருவேளை உங்களிடம் ஏற்கனவே இன்சூரன்ஸ் ஒன்று இல்லையெனில், ஓனர்-டிரைவருக்கு ஏற்படும் தனிப்பட்ட சேதத்திற்கு எந்த வரம்புமின்றி காப்பீடு அளிக்கப்படும்

பயன்படுத்தப்பட்ட பைக் இன்சூரன்ஸ் உடன் ஆட்-ஆன் கவர்கள் கிடைக்கும்

உங்கள் செகண்ட்ஹேண்ட் பைக்கின் முழுமையான பாதுகாப்பிற்கான சரியானஆட்-ஆன்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் பாலிசியுடன் சிறந்த பைக் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களைத் தேர்வு செய்யவும்.

உதிரிபாகங்களுக்கான  டிப்ரிசியேஷன் கவர் (ஜீரோ டெப்/ பம்பர் முதல் பம்பர் வரை) - காலப்போக்கில், உங்கள் பைக்கின் மதிப்பு குறையும், இதன் காரணமாக அதற்கான தேய்மான கட்டணமும் கிளைம் செய்யப்படும் போது வசூலிக்கப்படும் மற்றும் பரிசீலிக்கப்படும். எவ்வாறாயினும், ஜீரோ-டிப்ரிசியேஷன் கவரானது தேய்மானத்தை முற்றிலும் ரத்து செய்து, டிஜிட் அங்கீகரிக்கப்பட்ட வொர்க்ஷாப் கிளைகளில் வாகனத்தை பழுதுபார்க்க  அல்லது மாற்றுவதற்கு ஆகும் செலவை முழுவதுமாக உங்களுக்கு வழங்குகிறது.

கன்ஸ்யூமபிள் கவர்- இந்த ஆட்-ஆனில், ஸ்க்ரூஸ், என்ஜின் எண்ணெய்கள், நட்ஸ் & போல்ட், கிரீஸ் போன்ற பாகங்களை மாற்றுவதற்கான செலவு ஈடுசெய்யப்படுகிறது.

எஞ்சின் மற்றும் கியர்-பாக்ஸ்க்கான பாதுகாப்பு கவர் - விபத்து எஞ்சினுக்கு சேதத்தை ஏற்படுத்தினால், அது ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படும். ஆனால், அதன் விளைவாக சேதம் ஏற்பட்டால், அது காப்பீடு செய்யப்படாது. இங்கே தான், இந்த ஆட்-ஆன் எஞ்சினுக்கு விபத்தால் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் பழுதுபார்க்கும் கட்டணங்களை வழங்கி உங்களைக் காப்பாற்றுகிறது. 

இன்வாய்ஸ் கவருக்கு ரிட்டர்ன் - உங்கள் பைக் திருடப்படுதல் அல்லது சேதமடைதல் அல்லது பழுதில்லாமல் இருப்பது  அல்லது அதன் பழுதுபார்ப்புச் செலவு அதன் ஐடிவியில் 75%க்கும் அதிகமாக இருந்தல், போன்ற சூழ்நிலைகளில் புதிய பைக் வாங்குவதற்கான செலவை நாங்கள் ஈடுகட்டுகிறோம். அதாவது எக்ஸ்-ஷோரூம் விலைக்கு ஈடானத் தொகையைப் பெறுங்கள் அல்லது கடைசி இன்வாய்ஸ் மதிப்பில் ஐடிவியை (காப்பீடு செய்யப்படும் போது  வழங்கப்பட்ட மதிப்பு) கழித்து வரும் தொகையைப் பெறுங்கள். மேலும், புதிய வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரியையும் நாங்கள் காப்பீடு அளிப்போம்.

பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் (ஆர்எஸ்ஏ) - நகரத்தின் மையத்திலிருந்து 500 கிமீ வரை உங்கள் பைக்கிற்கு உதவி தேவைப்பட்டால் அல்லது சாலையில் பைக் பழுதடைந்தால் 24*7 உதவியைப் பெறுங்கள்.

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்!