ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்

ஃபிக்ஸட் மற்றும் இன்டெம்னிட்டி அடிப்படையிலான ஹெல்த் இன்சூரன்ஸைப் புரிந்து கொள்வோம்

இன்று, ஆரோக்கியமும் நல்வாழ்வும் இந்தியாவில் பிரபலமாக மாறிவிட்டன. முழுமையான ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர மக்களை ஊக்குவிக்கிறது. இருப்பினும், சுகாதார நிலைமைகளுக்கு எதிரான உங்கள் பாதுகாப்பு பொருத்தமான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் இல்லாமல் நிறைவாகாது.

இன்சூரன்ஸை சுற்றியுள்ள சந்தேகங்கள், தவறான தகவல்களிலிருந்து முதன்மையாக எழுவதால், ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் குறித்த இந்த வழிகாட்டியை நாங்கள் உங்களுக்குக் வழங்குகிறோம். ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் இன்டெம்னிட்டி மெடிக்கல் இன்சூரன்ஸ் மற்றும் அவற்றின் அனைத்து சிக்கல்களையும் நாம் காண்போம்.

தொடங்கலாமா!

ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன

ஒரு ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானானது, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஒரு முன் வரையறுக்கப்பட்ட நிகழ்வுக்கு, ஒரு குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்துகிறது. பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்ட இன்சூரன்ஸ் நிகழ்வை அனுபவித்தால், இந்த பிளான் அதன் இன்சூரருக்கு உத்தரவாதமான மற்றும் ஃபிக்ஸட் தொகையை வழங்குகிறது.

இங்கே, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிகழ்வு, மெடிக்கல் நிலைமைகள் அல்லது இருதய நோய்கள், சிறுநீரக செயல்பாட்டு பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்ற கிரிட்டிக்கல் இல்னஸ்களாக இருக்கலாம்.

மேலும், ஒரு ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான், மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர்களின் நோக்கத்தின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் இன்சூரரின் செலவுகளுக்கு கிளைமாக ஒரு லம்ப்சம் தொகையை வழங்குகிறது. எனவே, கிளைம் தொகையை சரியாக பயன்படுத்துவது பாலிசிதாரரின் வசதி.

ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் பிளான்களை வாங்குவதில் ஏதேனும் பெனிஃபிட்கள் உள்ளதா?

மருத்துவ அவசரநிலைகள், ஒருவரை மருத்துவமனையில் இருக்க வைக்கும் காலத்தை நீட்டிக்கின்றன, அத்துடன் அதிக செலவுகளைக் கொண்டது. உயிருக்கு ஆபத்தான நோய்களால் கண்டறியப்பட்ட ஒருவருக்கு இது குறிப்பாக நிகழ்கிறது. அவை சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கிரிட்டிக்கல் இல்னஸ்கள் அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) 2020 ஆம் ஆண்டின் அறிக்கை, கிரிட்டிக்கல் இல்னஸ்களின் காரணமாக ஏற்படும் இறப்புகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறுகிறது. எனவே, உங்கள் அன்புக்குரியவர்களை அத்தகைய நோய்களில் இருந்து எதிராக பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது.

மேலும், ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் பிளான்கள் இங்கு தான் அதிகம் உபயோகப்படுகின்றன.

ஒரு கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியை எடுத்துக் கொண்டால், இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் அதன் பாலிசிதாரருக்கு, பிளானின் கீழ் பட்டியலிடப்பட்ட கிரிட்டிக்கல் இல்னஸ்களில் ஏதேனும் ஒன்று ஏற்பட நேர்ந்தால், சம் இன்சூர்டை செலுத்தும். ஒரு எடுத்துக்காட்டு மூலம் இதை உங்களுக்கு விரிவாகக் கூறுகிறோம்:

திருமதி. வர்மா, கிரிட்டிக்கல் இல்னஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானை, ரூ.10 லட்சம் மதிப்பிற்கு இன்சூரன்ஸ் தொகையுடன் பெற்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். பாலிசி விதிமுறைகளுக்குள், பிளானின் கீழ் பட்டியலிடப்பட்ட கிரிட்டிக்கல் இல்னஸ்களில் ஒன்று அவருக்கு கண்டறியப்படுகிறது. ஆகையால், அவருக்கு ஏற்படும் செலவுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு கிளைமாக ரூ .10 லட்சம் மொத்த தொகையைப் பெறுவார். பிளானின் கீழ் உள்ள மொத்த சம் இன்சூர்டையும் அவர் பெறுவதால், பாலிசியும் நிறைவடைகிறது.

மேலும், ஒரு ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்வுசெய்யும்போது, உங்கள் பிளான் பலவிதமான நோய்களை திறம்பட கவர் செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆகையால், குறைந்த ஆனால் மிகவும் பொதுவான கிரிட்டிக்கல் இல்னஸ்களை உள்ளடக்கிய ஒரு பிளானை நீங்கள் தேர்வு செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

கூடுதலாக, மருத்துவ பராமரிப்பின், உயரும் செலவு, நன்கு திட்டமிடப்பட்ட நிதி ஏற்பாட்டால் ஒருவரை ஆதரிக்க வேண்டும். இங்கே, உங்கள் தற்போதைய ஹெல்த் கவரை மேம்படுத்த, ஒரு ஃபிக்ஸட்-பெனிஃபிட் பிளானை நீங்கள் பெற விரும்பலாம்.

வாழ்வாதார இழப்பு, அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் மீட்பு நேரத்தின் போது வருவாயில் பற்றாக்குறை காரணமாக ஏற்படக்கூடிய மருத்துவமற்ற செலவினங்களையும் இது வழங்குகிறது. குறிப்பாக, மரபியல் அல்லது வாழ்க்கை முறை சார்ந்த மருத்துவ நிலைமைகளுக்கு நீங்கள் ஆளாகும் போது, இந்த பிளான் உங்களுக்கு நன்மை பயக்கும்.

இன்டெம்னிட்டி-அடிப்படையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்

பெயர் குறிப்பிடுவது போல, இன்டெம்னிட்டி மெடிக்கல் இன்சூரன்ஸ் பிளான் அதன் பாலிசிதாரருக்கு மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளுக்கு எதிராக இழப்பீடு வழங்குகிறது. இந்த பிளான் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது இன்சூரரால் ஏற்பட்ட செலவுகளை திருப்பிச் செலுத்துகிறது. இருப்பினும், இந்த பிளான் இந்த செலவுகளை அதன் கீழ் உள்ள சம் இன்சூர்டை மட்டுமே திருப்பிச் செலுத்துகிறது. இந்த பிளானிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, பிரபலமான இன்சூரன்ஸ் தயாரிப்பான, மெடிக்கிளைம் ஆகும்.

இந்த பிளான்கள் கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி, டெய்லி ஹாஸ்பிடல் கேஷ் பாலிசி மற்றும் பர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி போன்ற பல பாலிசிகளுடன் வருகின்றன. இதன் விளைவாக, அவர்கள் பலவிதமான மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.

மேலும், இன்சூரர் கேஷ்லெஸ் ஹாஸ்பிடலைஷேஷன் பிளானைத் தேர்வுசெய்தால், அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலுத்த வேண்டும், மீதமுள்ளவற்றை இன்சூரர் கவனித்துக்கொள்வார். இருப்பினும், இந்த நபருக்கு கேஷ்லெஸ் ஹாஸ்பிடலைஷேஷன் பிளான் இல்லையென்றால், அவர் அனைத்து ரசீதுகள் மற்றும் பில்களை இன்சூரரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களின் அடிப்படையில், இன்சூரர், இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபருக்கு ரீஇம்பர்ஸ் செய்வார்.

இன்டெம்னிட்டி ஹெல்த் பிளான்களின் பெனிஃபிட்கள் என்ன?

ஹெல்த் பிளான்களின் இன்சூரர்கள், பொதுவாக பல மருத்துவ மையங்கள் மற்றும் பார்ட்னர் மருத்துவமனைகளுடன் இணைந்திருப்பார்கள். இதன் விளைவாக, இன்டெம்னிட்டி-அடிப்படையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் உள்ளா மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அதிக அளவு உபயோகப்படுகிறது. எனவே, பாலிசிதாரர்கள், செலவைப் பற்றி கவலைப்படாமல், குறிப்பிட்ட மருத்துவ மையம் அல்லது மருத்துவமனையைப் பார்வையிட வசதியாக தேர்வு செய்யலாம்.

கூடுதலாக, இந்த பிளான்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான உண்மையான செலவை உள்ளடக்கிய பரந்த அளவிலான நோய்கள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றை கவர் செய்கிறது. கீழேயுள்ள எடுத்துக்காட்டு, ஹாஸ்பிடல் இன்டெம்னிட்டி இன்சூரன்ஸ் தொகையின் நன்மைகளை திறம்பட விவரிக்கிறது:

திரு. சர்மா, ரூ .10 லட்சம் அளவிலான இன்டெம்னிட்டி-அடிப்படையிலான ஹெல்த் பிளானுக்கு பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பாலிசி விதிமுறைகளுக்குள், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரூ .3.5 லட்சம் பில்லாக வருகிறது. இங்கே, திரு. சர்மா மருத்துவமனையில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட செலவுகளை விவரிக்கும் அனைத்து மருத்துவமனை பில்களையும் சமர்ப்பிப்பார். இந்த ஆவணங்களை மதிப்பிட்டதும், அவரது இன்டெம்னிட்டி மெடிக்கல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ .3.5 லட்சம் செலுத்தும்.

ஃபிக்ஸட் பெனிஃபிட் மற்றும் இன்டெம்னிட்டி-அடிப்படையிலான ஹெல்த் பிளான்கள் - ஒரு ஒப்பீடு

இப்போது இந்த இரண்டு ஹெல்த் பிளான்களையும் அறிந்திருப்பீர்கள், அவற்றை பின்வரும் அட்டவணையில் ஒப்பிடலாம்:

ஒப்பீட்டின் அடிப்படை ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் பிளான் இன்டெம்னிட்டி அடிப்படையிலான ஹெல்த் பிளான்
பயன்பாடு இந்த பிளான் முன்பே தீர்மானிக்கப்பட்ட மருத்துவ நிலைமைகள் அல்லது கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கு சம் இன்சூர்டை செலுத்துகிறது. இந்த வகை ஹெல்த் பிளான், சம் இன்சூர்டு வரை மருத்துவ சிகிச்சையில் செலவழித்த பணத்தை, ரீஇம்பர்ஸ் செய்கிறது.
அடிப்படை தேவைகள் பாலிசிதாரருக்கு பாலிசி விதிமுறைகளின்படி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மருத்துவ நிலை இருப்பது கண்டறியப்பட வேண்டும், சம் இன்சூர்டைக் கிளைம் செய்ய, ஒரு சான்றளிக்கப்பட்ட மருத்துவரின் டயக்னாஸிஸ் அறிக்கையை ஒருவர் வழங்க வேண்டும். இன்டெம்னிட்டி மெடிக்கல் இன்சூரன்ஸ், பொதுவாக இன்சூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது மருத்துவ சிகிச்சை (பகல்நேர பராமரிப்பு நடைமுறை அல்லது கண்டறியும் சோதனைகள்), கிளைமை வழங்க, ஒரு பாலிசிதாரர் ஒவ்வொரு செலவையும் விவரிக்கும் அனைத்து மருத்துவமனை பில்களையும் இன்சூரர் அல்லது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்க வேண்டும். மேலும், அவர் ஒரு கிளைம் படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும். இந்த படிவத்தில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலம், வெளியேற்றும் தேதி போன்ற பல முக்கிய விவரங்கள் அவசியம்.
பிளானின் சிறப்பு அம்சம் மொத்த தொகையை வழங்குவதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். இந்த கட்டணம், சிகிச்சைக்கு கணிசமான நிதி தேவைப்படுவதால், கிரிட்டிக்கல் இல்னஸ்களின் விஷயத்தில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த பிளான் சிகிச்சை மற்றும் மீட்பு நேரத்தில் வாழ்வாதாரத்தை அல்லது வருவாயை இழப்பதற்கான இழப்பீடாக செயல்படுகிறது. இதன் விளைவாக, இன்சூரர் வீட்டுச் செலவுகள், நர்சிங் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு உதவுகிறது. ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுக்கு ஒரு குறிப்பிட்ட மருத்துவ நிலைக்கு கவரேஜ் பெற துணை வரம்புகள் இல்லை, கிளைமுக்கான டாக்குமென்டேஷன் ப்ராசஸ் எளிமையானது மற்றும் இன்டெம்னிட்டி மெடிக்கல் இன்சூரன்ஸைக் காட்டிலும், இந்த பிளான்கள் பல்வேறு மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல வகை பாலிசிகளுடன் வருகின்றன. இது பலவிதமான நோய்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு காம்ப்ரிஹென்சிவ் கவரேஜை வழங்குகிறது, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நபர்கள் எந்தவொரு வருடத்திலும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட முழு தொகையையும் பயன்படுத்தும் வரை பல கிளைம்களை சமர்ப்பிக்க முடியும். இது சில சந்தர்ப்பங்களில் கேஷ்லெஸ் வசதியின் நன்மை உட்பட, பல்வேறு மருத்துவ மையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான வசதியை வழங்குகிறது. ஃபிக்ஸட் இன்டெம்னிட்டி ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் கீழ் உள்ள பிரீமியங்கள், பொதுவாக செலவு குறைந்தவை. மேலும், பிரீமியம் தொகை தகுதியுடைய பாலிசிதாரரின் வயது, அவருக்கு முன்பே இருக்கும் நோய்கள் மற்றும் பாலிசியின் அம்சங்கள் போன்றவற்றைப் பொறுத்தது.
பிளானின் வரம்பு ஒரு ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த்பிளானிற்கான தகுதி குறிப்பிட்ட நோய்களுக்கு வரயயரைப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த பிளான்களுக்கான பிரீமியங்கள் இன்டெம்னிட்டி-அடிப்படையிலான ஹெல்த் பிளான்களை விட விலை உயர்ந்தவை. இன்டெம்னிட்டி அடிப்படையிலான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் தங்கள் பாலிசியின் விதிமுறைகளின்படி டிடெக்டிபள்ஸுக்கு பணம் செலுத்தாது. அதாவது, இந்தத் பிளானில் செலவு பட்டியலில் குறிப்பிட்ட ஐட்டங்கள் உள்ளன, அது, துணி, கையுறை, ஆக்ஸிஜன் மாஸ்க் போன்ற செலவுகளைத் தாங்காது. எனவே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் இந்த பொருட்களுக்கு ஒரு பாலிசிதாரர் பணம் செலுத்த வேண்டும். இதன் டாக்குமென்டேஷன் ப்ராசஸ் பொதுவாக விரிவானது, இது, நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

ஒன்று மற்றொன்றை விட சிறந்ததா?

இந்த இரண்டு ஹெல்த் பிளான்களும் தனித்துவமானவை மற்றும் மாறுபட்ட மருத்துவ தேவைகளுக்கு உதவுகின்றன. மேலும், மேலே உள்ள அட்டவணைப்படி, இவை ஒவ்வொன்றும் அதன் பெனிஃபிட்கள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு பிளான்களையும் மதிப்பிடுவதற்கான மற்றொரு அம்சம் வரி சலுகை ஆகும். இருப்பினும், இந்த இரண்டு பிளான்களுக்கும் வரி சலுகைகள் ஒன்றே. எனவே, பாகுபாடின்றி, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80டியின் படி நீங்கள் வரி விலக்கைப் பெறலாம். இங்கே, சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50,000 வரை பிரீமியம் மற்றும் நான்-சீனியர் குடிமக்களுக்கு ரூ .25,000 வரை பிரீமியம், வரிக் கழிப்புகளோடு தகுதியானது.

எனவே, நீங்கள் எதைத் தேர்வு செய்ய வேண்டும்? இந்த முடிவு உங்கள் தேவைகளைப் பொறுத்தது. ஒரு ஃபிக்ஸட் இன்டெம்னிட்டி மெடிக்கல் இன்சூரன்ஸ் பிளானுடன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிதி தயார்நிலை மற்றும் அதிக பாதுகாப்பை நீங்கள் அடையலாம்.

மேலும், கிரிட்டிக்கல் இல்னஸ்களால் பாதிக்கப்படக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை நாம் வாழ்கிறோம், உங்கள் தற்போதைய ஹெல்த் பாலிசியை ஒரு ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் பிளானுடன் கூடுதலாக இணைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

முடிவுரை

உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இருப்பினும், மெடிக்கல் கேர், தற்போது விலை உயர்ந்தது என்பதும் பொதுவான அறிவு. எனவே, இன்சூரன்ஸ் பிளான்கள் உங்கள் நிதிகளைத் தடம் புரட்டக்கூடிய மிகப்பெரிய மருத்துவ பில்களைத் தவிர்ப்பதற்கான வழியை உங்களுக்கு வழங்குகின்றன. மேலும், இந்த வழிகாட்டி உங்களுக்கு போதுமான நுண்ணறிவை வழங்கியதாகவும், ஹெல்த் பிளாஅனை வாங்குவதற்கான உங்கள் தயக்கத்தை நீக்குவதாகவும் இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வழக்கமான இன்டெம்னிட்டி ஹெல்த் பிளானின் கீழ் என்னென்ன கவர் செய்யப்படவில்லை?

இன்டெம்னிட்டி-அடிப்படையிலான ஹெல்த் பாலிசிகள் ஒருவரின் ஹாஸ்பிடலைஷேஷன் செலவை கவர் செய்கிறது. இருப்பினும், இது மருந்துகளின் விலை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு போன்ற பல செலவுகளை கவர் செய்யாது.

ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் பிளான் என்றால் என்ன?

ஒரு ஃபிக்ஸட் பெனிஃபிட் ஹெல்த் பிளான் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிகழ்வை எதிர்கொள்ளும்போது அதன் இன்சூரர்களுக்கு உத்தரவாதம் மற்றும் ஃபிக்ஸட் தொகையை வழங்குகிறது. இங்கே, இன்சூரரின் உண்மையான செலவுகளின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், செலுத்த வேண்டிய இன்சூர்டு தொகை முன்பே தீர்மானிக்கப்படுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது நல்லதா?

எதிர்கால மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவதற்கு, தற்போதைய நிதி நிவாரணத்தை, ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குகிறது. எனவே, இது நிதி ரீதியாக உங்களை தயார் படுத்தி சுகாதார அவசரநிலைகளை கையாள உதவுகிறது.

இன்சூரன்ஸ் பிரீமியங்கள் டேக்ஸ்-டிடெக்டிபள்களுக்கு தகுதியானதா?

ஆம், இன்சூரன்ஸ் பிரீமியம் சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ. 25,000 மற்றும் சீனியர் சிட்டிசன்கள் விஷயத்தில் ரூ. 50,000 வரை, இன்கம் டேக்ஸ் ஆக்ட், 1961 இன் பிரிவு 80D கீழ் டேக்ஸ்-டிடெக்டிபள்ஸிற்கு தகுதியானது.