டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த டிகோர் கார் சப் காம்பேக்ட் செடான் ஆகும். டாடா மோட்டார்ஸ் சொல்வது போல, இது 'நட்சத்திரங்களுக்கான செடான்' கார். தோற்றத்தில் அசத்தல், செயல்திறன் மற்றும் சிறந்த ஆற்றல், இந்த கார் நிச்சயமாக உங்களைப்போன்ற ஸ்டார்ஸுக்கானதுதான். டியாகோ காருடன் ஒப்பிடுகையில், டாடா டிகோர் காரின் பெட்ரோல் என்ஜின் ரூ.5.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் என்ஜின் ரூ.6.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு பிரைவேட் பையர்களுக்காக டாடா டிகோர் இ.வியின் மிகவும் சக்திவாய்ந்த வெர்ஷனை அறிமுகப்படுத்துகிறது.
நீங்கள் ஏன் டாடா டிகோர் வாங்க வேண்டும்?
டாடாவின் இந்த ஸ்டைலான காம்பேக்ட் செடான் கார் ஹைவே, ஹில்ஸ், சிட்டி போன்ற அனைத்து வகையான சாலைகளுக்கும், ஓரளவிற்கு ஆஃப் ரோடிங் போன்றவற்றுக்கும் ஏற்றது. காரை 'ஓட்டும்போது காற்றில் பறக்கும் சுகத்தை' தேடும் மக்களுக்கானதுதான் இந்த டிகோர். இந்த கார் ஸ்லீக், குரோம்-லைன்டு டோர் ஹாண்டில்கள், ஸ்டைலான மற்றும் கண்ணைக் கவரும் எல்.இ.டி டெயில் விளக்குகள், ஸ்டைலாக ஒருங்கிணைக்கப்பட்ட உயர் பொருத்தப்பட்ட எல்.இ.டி ஸ்டாப் விளக்கு மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. வெளிப்புறம் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் கலர் ஃபாக்ஸ் லெதர் சீட்டுகள், பிரீமியம் பிளாக் மற்றும் கிரே தீம், போதுமான பயன்பாட்டு இடவசதியுடன், டிகோர் நேர்த்தியாக பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
டாடா டிகோர் கார் இஜிப்டியன் புளூ, ரோமன் சில்வர், பெர்ரி ரெட், டைட்டானியம் கிரே உள்ளிட்ட 6 வேரியண்ட்டுகளிலும், XE, XM, XMA, XZ, XZ+ மற்றும் XZA+ ஆகிய 6 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.
டிகோர் காரின் 2018 மாற்றியமைக்கப்பட்ட பதிப்பில் முன்பக்க ஹெட்லைட்டுகள் மற்றும் கிரில் மற்றும் புதிய குரோம், சீட்டுகளுக்கான புதிய கலர்ஸ் மற்றும் அலாய் வீல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் கூடிய புதிய 7 இன்ச் டச்ஸ்க்ரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.