ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது மிட்-சைஸ் எஸ்யூவி டைகுன் மாடலை எஸ்யூவிடபுள்யூ யுக்தியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 5 சீட்டர் கொண்ட இந்த கார் வரும் செப்டம்பர் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
எம்க்யூபி-ஏ0-இன் ஃபிளாட்பார்மில் டைகுன் நவீன அம்சங்கள், பிரீமியம் இன்டீரியர் மற்றும் பலவற்றுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வோக்ஸ்வேகன் புத்தம் புதிய எஸ்யூவியை வாங்க திட்டமிடுபவர்கள் விபத்துகள் மற்றும் பிற எதிர்பாராத சூழ்நிலையினால் ஏற்படும் ஃபைனான்ஷியல் புரடெக்ஷனை உறுதி செய்ய வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸைத் தேர்வு செய்ய வேண்டும்.
மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி தெருக்களில் பறக்கும் ஒவ்வொரு காருக்கும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாகும். இந்தத் திட்டம் மூன்றாம் தரப்பினரின் இழப்புகளைக் காப்புறுதி செய்கிறது. இதற்கு பதிலாக, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி மற்றும் உங்கள் சொந்த காருக்கான பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் நிதிக் கவரேஜைப் பெற, காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தியாவில் பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தான் வோக்ஸ்வேகன் டைகுன் கார் இன்சூரன்ஸை வழங்குவதாக மார்தட்டி சொல்வதுண்டு. அத்தகைய இன்சூரர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்று.
அடுத்த பிரிவானது டைகுன் இன்சூரன்ஸ் குறித்து டிஜிட் நிறுவனம் சில அம்சங்கள், அதன் வேரியண்ட்டுகளின் விலைகள், கார் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட் நிறுவனம் வழங்கும் பயன்கள் ஆகியவற்றை வழங்குகிறது.