சொந்த சேத பைக் இன்சூரன்ஸ்

டூ வீலர் ஓ.டி(OD) இன்சூரன்ஸை ஆன்லைனில் புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

பைக்-கிற்கான சொந்த சேத இன்சூரன்ஸ் என்றால் என்ன?

சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் என்பது உங்கள் வாகனத்திற்கு நேரும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கின்ற ஒரு தனித்தியங்கும் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை குறிக்கின்றது. விபத்து, மோதல், இயற்கை பேரிடர் அல்லது தீவிபத்து போன்ற காரணங்களினால் கூட இந்த சேதங்கள் ஏற்படக் கூடும்.

சொந்த சேத பைக் இன்சூரன்ஸை அறிமுகப்படுத்துவதின் குறிக்கோள் என்ன?

இது வரைக்கும், இரண்டு வகையான பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் மட்டுமே இருந்து வந்தன. எனினும், சமீபத்தில் ஐஆர்டிஏஐ(IRDAI), நடைமுறையில் உள்ள தேர்டு பார்ட்டி மட்டும்(Third-party only) பாலிசிக்களை கொண்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில், அவர்களின் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கும் சேர்த்து பாதுகாப்பளிப்பதற்காக தனித்தியங்கும் சொந்த சேத காப்பீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.

பைக்-கின் தனித்தியங்கும் ஓ.டி(OD) இன்சூரன்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?

இதனை நன்கு புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்; நீங்கள் சமீபத்தில் ஒரு புது பைக் வாங்கியிருக்கிறீர்கள், மற்றும் உடனடியாக சட்டபூர்வ மற்றும் தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸிற்கு(பொறுப்புகள்) பாதுகாப்பினை பெறுவதற்காக, நீங்கள் 3-வருட கால தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

எனினும், உங்கள் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் சேதங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான அவசியத்தை பைக் வாங்கிய ஒரு வருடத்திற்கு பின்னரே நீங்கள் உணருகிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் புதுப்பிப்பினை(renewal) காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் பாலிசியாக மேம்படுத்துவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் பைக்-கிற்கு சொந்த சேத காப்பீடு வாங்குவது மட்டுமே போதுமானதாக இருக்கும். இதன் மூலம், உங்களுடைய சொந்த பைக்-கினையும் நியாயமான விலை மட்டுமே கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சொந்த சேத பைக் இன்சூரன்ஸை யார் வாங்க வேண்டும்?

 நீங்கள் சமீபத்தில் பைக் வாங்கியிருந்து, உங்கள் பைக்-கிற்கு ஏற்கனவே டிஜிட்-இன் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வாங்கியிருந்தால் கூட, உங்கள் சொந்த பைக்-ஐ சேதங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் காப்பதற்காக நீங்கள் சொந்த சேத காப்பீட்டினையும் உங்கள் பைக்-கிற்கு வாங்கலாம்.

உங்களிடம் ஏற்கனவே வேறொரு இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து பெற்ற நடைமுறையில் உள்ள தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் இருந்தாலும், உங்கள் பைக்-ஐ இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, நீங்கள் டிஜிட் இன்சூரன்ஸிலிருந்து தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸையும் வாங்கலாம்.

பைக்-கின் ஓ.டி(OD) இன்சூரன்ஸில் என்னவெல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது?

ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸில் உள்ள ஆட்-ஆன்(மதிப்புக்கூட்டல்/add-on) கவர்கள்

தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ்(பொறுப்புகள்)

உங்கள் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் இழப்புகளுக்கு மட்டுமே உங்கள் தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது, தேர்டு பார்ட்டி இழப்புகளுக்கு பாதுகாப்பளிக்கப்படாது. இதற்கு உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது

இதற்கு சட்டப்படி அனுமதியில்லை, எனவே நீங்கள் குடிபோதையில் வண்டி ஓட்டியிருந்தால் உங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைம்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

கிளைம் செய்யும் நபர் சட்டத்திற்கு புறம்பாக வண்டி ஓட்டியிருந்தால், எந்த பைக் இன்சூரன்ஸ் நிறுவனமும் கிளைம்-ஐ ஏற்றுக் கொள்ளாது. எனவே, உங்களிடம் செல்லுபடியாகிற டூ வீலர் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே நீங்கள் கிளைம் செய்ய முடியும்.

ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) வாங்கப்படவில்லை

நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆனை வாங்கவில்லையெனில், அதன் பலன்களுக்கு நீங்கள் நிச்சயமாக கிளைம் செய்ய முடியாது.

பின்விளைகிற சேதங்கள்

கெடுவாய்ப்பாக, விபத்து நேர்ந்த சமயத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்பட்டிருக்காத சேதங்களுக்கு இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கப்படாது.

எவையெல்லாம் உள்ளடக்கப்படவில்லை?

உங்கள் பைக்-இன் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் சொந்த சேத காப்பீடு அருமையானதென்றாலும், கீழ்க்கண்ட சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பு வழங்கப்படாது:

தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ்(பொறுப்புகள்)

உங்கள் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் இழப்புகளுக்கு மட்டுமே உங்கள் தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது, தேர்டு பார்ட்டி இழப்புகளுக்கு பாதுகாப்பளிக்கப்படாது. இதற்கு உங்கள் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுவது

இதற்கு சட்டப்படி அனுமதியில்லை, எனவே நீங்கள் குடிபோதையில் வண்டி ஓட்டியிருந்தால் உங்கள் பைக் இன்சூரன்ஸ் கிளைம்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

லைசென்ஸ் இன்றி வண்டி ஓட்டுவது

கிளைம் செய்யும் நபர் சட்டத்திற்கு புறம்பாக வண்டி ஓட்டியிருந்தால், எந்த பைக் இன்சூரன்ஸ் நிறுவனமும் கிளைம்-ஐ ஏற்றுக் கொள்ளாது. எனவே, உங்களிடம் செல்லுபடியாகிற டூ வீலர் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே நீங்கள் கிளைம் செய்ய முடியும்.

ஆட்-ஆன்கள்(மதிப்புக்கூட்டல்கள்/add-ons) வாங்கப்படவில்லை

நீங்கள் குறிப்பிட்ட ஆட்-ஆனை வாங்கவில்லையெனில், அதன் பலன்களுக்கு நீங்கள் நிச்சயமாக கிளைம் செய்ய முடியாது.

பின்விளைகிற சேதங்கள்

கெடுவாய்ப்பாக, விபத்து நேர்ந்த சமயத்தில் உங்கள் பைக்-கிற்கு ஏற்பட்டிருக்காத சேதங்களுக்கு இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கப்படாது.

அலட்சியத்தின் காரணமாக விளைகிற சேதங்கள்

இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் செய்யக் கூடாத ஒன்றை ஒரு வேளை நீங்கள் செய்திருக்கும் பட்சத்தில் உங்கள் பைக்-கிற்கு பாதுகாப்பளிக்கப்படாது. உதாரணத்திற்கு, உங்கள் ஊரில் வெள்ள நீர் புகுந்திருக்கும் நிலையில், நீங்கள் பைக்-ஐ வெளியில் எடுத்துச் சென்று அதன் சேதங்களுக்கு காரணமாக அமையும் செயல்!

உடன் லைசென்ஸ்தாரரின்றி வண்டி ஓட்டுவது

சட்டப்படி, உங்களிடம் பழகுநர் லைசென்ஸ் இருந்தால், நிரந்தர லைசென்ஸ் உள்ள ஒருவர் உங்கள் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில், உங்கள் ஓ.டி(OD) கிளைம் அங்கீகரிக்கப்படாது.

நீங்கள் ஏன் டிஜிட்-இன் சொந்த சேத பைக் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

சொந்த சேத பைக் இன்சூரன்ஸுக்கான கிளைமிற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

எங்களுடைய ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸ் பிளான்-ஐ நீங்கள் வாங்கிய அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் பதற்றமின்றி வாழலாம், ஏனென்றால் எங்களுடைய 3-படி கிளைம் நடைமுறை முழுமையாக டிஜிட்டல்மயமானது!

படி 1

1800-258-5956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். படிவங்கள் எதையும் பூர்த்தி செய்ய தேவையில்லை.

படி 2

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய-ஆய்விற்கான லிங்க்-இனை பெறவும். கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் படி, உங்கள் ஸ்மார்ட்ஃபோன்-இல் உங்கள் வண்டிக்கு ஏற்பட்ட சேதங்களை படம் பிடிக்கவும்.

படி 3

நீங்கள் விரும்பும் வழியிலான ரிப்பேர்-ஐ தேர்வு செய்யவும், அதாவது எங்களுடைய கேராஜ் நெட்வொர்க்-கிலிருந்து செலவு செய்த பணத்தை திரும்ப பெறுதல்(reimbursement) அல்லது கேஷ்லெஸ் சேவையை பெறுவது

எவ்வளவு விரைவாக டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் செட்டில் செய்யப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தினை மாற்றும் நேரத்தில் உங்கள் மனதில் எழ வேண்டிய முதல் கேள்வி இது தான். இந்த கேள்வியை நீங்கள் எழுப்புவது சரியே! டிஜிட் கிளைம்களின் ரிப்போர்ட் கார்டினை வாசிக்கவும்

சொந்த சேத பைக் இன்சூரன்ஸின் பிரீமியம் கணக்கீடு

எவ்வாறு ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸ் பிரீமியம் கணக்கிடப்படுகிறது?

முறைப்படி சொல்ல வேண்டுமென்றால், ஓ.டி பிரீமியம் இவ்வாறு தான் கணக்கிடப்படுகிறது:

ஐடிவி(IDV) X [பிரீமியம் விலை(இன்சூரர் முடிவு செய்யும் விலை)] + [ஆட்-ஆன்கள் (உதாரணத்திற்கு, கூடுதல் பொறுப்புக் காப்புறுதி)]  – [தள்ளுபடி மற்றும் பலன்கள் (உதாரணம். நோ கிளைம் போனஸ்)]

உங்கள் ஓ.டி(OD) பிரீமியத்தினை குறைப்பதற்கான ஆலோசனைகள்

தன்னிச்சையான கழிப்புத்தொகையை அதிகரிக்கவும்: கிளைம் செய்யும் நேரத்தில் நீங்கள் பணம் செலுத்துவதற்கு தேர்வு செய்யும் கிளைம் சதவிகிதமே தன்னிச்சையான கழிப்புத்தொகை என்ப்படுகிறது.

சரியான ஐடிவி-ஐ(IDV) தெரிவிக்கவும்: நீங்கள் டிஜிட்-இல் ஓ.டி(OD) காப்பீடு வாங்கும் போது, நாங்கள் செய்வதற்கு பதிலாக உங்கள் ஐடிவி-ஐ நீங்களே தனிப்பயனாக்குவதற்கு அனுமதிக்கிறோம். உங்கள் ஐடிவி உங்கள் ஓ.டி(OD) பிரீமியத்தை தீர்மானிப்பது மட்டுமின்றி, கிளைம் செய்யும் சமயத்தில் நீங்கள் பெறும் தொகையையும் தீர்மானிப்பதால், சரியான ஐடிவி தான் வழங்கப்பட்டுள்ளது என்பதனை இந்த நடைமுறையின் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் என்சிபி(NCB)-ஐ மாற்றுவதற்கு மறந்து விடாதீர்கள்: முன்னாலேயே குறிப்பிட்டபடி, உங்கள் நோ கிளைம் போனஸின் மூலம் உங்கள் ஓ.டி(OD) பிரீமியம் மீது நீங்கள் தள்ளுபடி பெறலாம்.

உங்கள் ஓ.டி(OD) பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கின்ற காரணிகள்

சொந்த சேத பாலிசியில், உங்கள் பைக் சிசி மற்றும் உங்கள் பைக்-கின் ஐடிவியை வைத்து தான் உங்கள் பைக் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. அது மட்டுமின்றி, உங்கள் சொந்த சேத காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிடும் போது, கீழ்க்கண்ட காரணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன:

ஐடிவி

ஐடிவி என்பது உங்கள் பைக்-கின் சரியான சந்தை மதிப்பினை குறிக்கின்றது. எனவே, உங்கள் பைக்-கின் ஓ.டி(OD) பிரீமியம் பெருமளவு இதனை சார்ந்தே இருக்கும்.

பைக்-கின் சிசி

உங்கள் பைக்-கின் வேகத்தை தீர்மானிப்பது சிசி தான், எனவே அதன் அபாயத்தையும் தீர்மானிக்கிறது. அதனால், உங்கள் பைக்-கின் சிசியும் உங்கள்  ஓ.டி(OD) பிரீமியத்தை பாதிக்கும். சிசி அதிகம் என்றால், ஓ.டி(OD) பிரீமியம் அதிகரிக்கும். அது போலவே சிசி குறைவு என்றால், ஓ.டி(OD) பிரீமியம் குறையும்.

பைக்-இன் மேக் மற்றும் மாடல்

உங்கள் பைக்கின் மேக் மற்றும் மாடல் உங்கள்  ஓ.டி(OD) பிரீமியத்தை நேரடியாக பாதிக்கும் என்பது நாம் நன்கு அறிந்ததே. உங்கள் பைக்கிற்கான பிரீமியம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அவ்வளவு அதிகமாக அதன் OD பிரீமியமும் இருக்கும்.

பைக்-கின் வயது

பைக் பழையது என்றால், அதன் ஓ.டி(OD) பிரீமியம் குறைவாக இருக்கும். மற்றும் பைக் புதிது என்றால், அதன் ஓ.டி(OD) பிரீமியம் அதிகமாக இருக்கும்.

நோ கிளைம் போனஸ்

உங்களிடம் முன்னமேயே காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸின் சொந்த சேத கவர் இருந்து, நீங்கள் இது நாள் வரை எந்த கிளைமும் செய்யவில்லையென்றால், உங்கள் தற்போதைய ஓ.டி(OD) பிரீமியத்தில் தள்ளுபடி பெறுவதற்கு உங்கள் திரட்டப்பட்ட நோ கிளைம் போனஸை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்-ஆன்கள்

ஒவ்வொரு ஆட்-ஆனும் வெவ்வேறானது. அதனால், நீங்கள் தேர்வு செய்யும் ஆட்-ஆன் வகையை பொறுத்தும், ஆட்-ஆன்களின் எண்ணிக்கையை பொறுத்தும், உங்கள் ஓ.டி(OD) பிரீமியம் அதற்கேற்றவாறு பாதிப்படையும்.

ஒப்பிடவும்: தேர்டு பார்ட்டி, சொந்த சேதம் மற்றும் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ்

தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ்
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் என்பது, மிக அடிப்படையான ஒரு வகை பைக் இன்சூரன்ஸ் ஆகும். மோட்டார் வாகன சட்டப்படி, ஒவ்வொரு பைக் உரிமையாளரிடமும் சட்டப்படி வண்டி ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் ஒரு தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.l சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் என்பது, பைக்-கிற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கி பாதுகாப்பளிக்கும் ஒரு தனித்தியங்கும் பைக் இன்சூரன்ஸ் பாலிசியாகும். தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் மற்றும் சொந்த சேத கவர் ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்தால், உங்களிடம் காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் இருக்கும். இது தேர்டு பார்ட்டியினர் மற்றும் உங்கள் பைக்-கிற்கு ஏற்படும் சேதங்களுக்கும் இழப்பீடு அளித்து பாதுகாப்பளிக்கிறது.
தேர்டு பார்ட்டி லயபிலிட்டிஸ்(பொறுப்புகள்)-ற்கு பாதுகாப்பளிக்கும் பைக் இன்சூரன்ஸை சட்டப்படி கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பது சட்டப்படி கட்டாயமல்ல. ஆனால் இது ஒருவரின் தனிப்பட்ட சேதங்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பளிப்பதால், வண்டி ஓட்டுபவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் கூட கட்டாயமானதல்ல. ஆனாலும், அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் பாதுகாப்பளிப்பதால், இது தான் கிடைக்கபெறுவதிலேயே சிறந்த பாலிசியாகும்.
தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான தகுதி எல்லா பைக்கிற்கும் இருக்கிறது. நடைமுறையில் உள்ள தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் வைத்திருப்பவர் மட்டுமே, தனித்தியங்கும் சொந்த சேத பைக் இன்சூரன்ஸை வாங்க முடியும். பைக் வைத்திருக்கும் அனைவருமே காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதற்கு தகுதியுடைவரகள் தான். எனினும், காம்ப்ரிஹென்சிவ்(முழுமையான) பைக் இன்சூரன்ஸ் அனைத்திற்குமான பாதுகாப்பளிப்பதால், நீங்கள் வேறெந்த பைக் இன்சூரன்ஸ் பாலிசியும் வாங்கத் தேவையில்லை என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.
இந்த பாலிசியுடன் எந்த ஆட்-ஆன்களும் கிடையாது. ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும். ஆட்-ஆன்கள் கிடைக்கப்பெறும்

சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரே இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து தான் நான் என்னுடைய பைக்-கிற்கு தனித்தியங்கும் சொந்த சேத காப்பீடு மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸை வாங்க வேண்டுமா?

இல்லை, ஒரே இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து தான் நீங்கள் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸையும், தனித்தியங்கும் சொந்த சேத காப்பீட்டையும் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை.

எத்தனை வகையான பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் கிடைக்கப்பெறுகின்றன?

எத்தனை வகையான பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் கிடைக்கப்பெறுகின்றன?

சொந்த சேத பைக் இன்சூரன்ஸை வாங்குவதற்கு யாருக்கு தகுதியிருக்கிறது?

நடைமுறையில் உள்ள தேர்டு பார்ட்டி மட்டும் என்கிற பைக் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பவர்களுக்கு, தங்கள் சொந்த பைக்-கிற்கு ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சொந்த சேத பைக் இன்சூரன்ஸ் வாங்குவதற்கான தகுதியிருக்கிறது.

பர்சனல் ஆக்சிடன்ட்-ஐயும் ஓ.டி(OD) கவர் உட்கொண்டிருக்கிறதா?

ஒவ்வொரு பைக் உரிமையாளருக்கும் பர்சனல் ஆக்சிடன்ட் கவர் என்பது கட்டாயமாகும். இது பொதுவாக தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸுடன் வாங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களிடம் இல்லையென்றால், உங்கள் ஓ.டி(OD) கவர்-இல் நீங்கள் அதனை தேர்ந்தெடுக்கலாம்.

எந்த பைக் இன்சூரன்ஸ் சட்டப்படி கட்டாயமானது?

மோட்டார் வாகன சட்டத்தின் படி, ஒவ்வொரு பைக் உரிமையாளரும் குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இது இல்லாமல், இந்திய சாலைகளில் வண்டி ஓட்டுவது சட்டவிரோதமான ஒரு செயலாகும். இதனால் அபராதம் கட்ட வேண்டிய நிலைமை வரலாம்.