நீங்கள் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன், நீங்கள் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பெற வேண்டும். இதன்மூலம் பாலிசியின் பலன்களை நீங்கள் தாமதமின்றிப் பெறலாம். உங்கள் பாலிசியின் கீழ் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை எப்போதும் சரிபார்க்கவும் (உதாரணமாக, கோவிட்-19 சிகிச்சை அல்லது மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் கிளைம் தொகைகள்), இதன் மூலம் நீங்கள் எல்லா நிகழ்வுகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள்.
மேலும், உங்கள் கவரேஜில் ஏதேனும் அபராதங்கள் மற்றும் இடைவெளிகளைத் தவிர்க்க, சரியான நேரத்தில் உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸைப் புதுப்பிக்கவும்.
நீங்கள் ஒரு இல்னெஸில் இருந்து மீண்டிருந்தால், உங்களிடம் கேட்கப்பட்ட எந்தவொரு தகவலையும், அதாவது முன்கூட்டியே இருக்கும் ஹெல்த் நிலைமைகள், மெடிக்கல் ரெக்கார்டுகளை சமர்ப்பிக்கத் தவறாதீர்கள். உங்கள் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எந்த முரண்பாடுகளையும் நீங்கள் தவிர்ப்பீர்கள்.
இந்த நாட்களில், குறிப்பாக உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி அவசியமாகிவிட்டது. ஹெல்த் எமர்ஜென்சி ஏற்பட்டால் பெரிய நிதி இழப்புகளிலிருந்து இது உங்களைக் காப்பாற்றும். கோவிட்-19 போன்ற தீவிர நோய்களில் இருந்து மீண்டவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன் அவர்களின் உடல்நலம் சரியாகவும் துல்லியமாகவும் மதிப்பிடப்படுவதற்கு அவர்கள் கூலிங்-ஆஃப் பீரியடிற்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
இருப்பினும், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து இன்னும் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றால், கூடிய விரைவில் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸைப் பெற முயற்சிக்கவும், எனவே நீங்கள் விரைவாக இன்சூரன்ஸ் பெறலாம். மேலும், அத்தகைய நிலை ஏற்பட்டால், உங்கள் சிகிச்சை மற்றும் மீட்புக் காலத்தின் போது ஏற்படும் எந்தவொரு செலவுக்கும் நீங்கள் கவர் செய்யப்படுவீர்கள்.