ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள்

கிக் எகானமிக்கான சகாப்தத்தில், ஃப்ரீலான்சிங் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, பல தனிநபர்கள் இண்டிபென்டண்ட்டாக வேலை செய்வதற்கான சுதந்திரத்தையும் ஃபிளக்சிபிலிட்டியையும் அனுபவிக்கிறார்கள். இருப்பினும், இந்த தனித்தன்மையுடன் ஒருவரது உடல்நலனையும் நிதி நல்வாழ்வையும் பாதுகாக்கும் பொறுப்பும் வருகிறது.

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் அவர்களின் தொழில் பயணத்தில் ஒரு முக்கிய அம்சமாகிறது, எதிர்பாராத மருத்துவ செலவுகளை கையாள இது அவர்களுக்கு மன அமைதியையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

தொடர்ந்து பார்ப்பதற்கு முன், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கிக் தொழிலாளர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் ஏன் மிகவும் முக்கியமானது என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.

வளர்ந்து வரும் கிக் எக்கனாமியில் ஹெல்த் இன்சூரன்ஸ்

கிக் எகானமி பாரம்பரியமான முழுநேர வேலைகளைக் காட்டிலும் குறுகிய கால ஒப்பந்தங்கள் மற்றும் ஃப்ரீலான்ஸ் வேலைகளால் வகைப்படுத்தப்படுகிறது. இது பெறும் வளர்ச்சி அடைந்து வருவதுடன் நாட்டின் வேலைவாய்ப்பு நிலையையும் மறுசீரமைத்து வருகிறது என்றால் மிகையாகாது. இது வருமான உருவாக்கத்திற்கான புதிய வழிகளை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைக்கும் பெரும் பங்களிப்பை அளிக்கிறது.

கூடக் குறைய கிடைக்கும் வருமானங்கள் மற்றும் பாரம்பரியமற்ற பணி சூழ்நிலை இல்லாத பணிகளுக்குப் பொருத்தமான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவது என்பது முக்கியமான தீர்மானமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக எம்ப்ளாயர் ஹெல்த் கவரேஜ் வழங்காமல் தனிநபரே அதை கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இது அவசியம் என கருதப்படுகிறது.

எனவே, ஃபிளக்சிபிளிட்டி, காம்ப்ரிஹென்சிவ் கவரேஜ் மற்றும் நிதி தொடர்பான பாதுகாப்பு போன்ற தனிநபரிகளின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய கிக் எகானமிக்காகவே பிரத்யேகமாக ஹெல்த் இன்சூரன்ஸ் விருப்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைப்படுகிறது?

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்கள் எம்ப்ளாயர் வழங்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் பெனிஃபிட்களை அனுபவிப்பதில்லை. இந்த பாதுகாப்பு வலை இல்லை எனில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் அவர்களின் நிதிகளைப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.

அவர்களின் நல்வாழ்வுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள அதுதொடர்பான வழக்கை ஆராய்வோம் வாருங்கள்.

கனவுகளின் நகரமான மும்பை இந்தியாவின் பரபரப்பான நகரங்களுள் ஒன்றாகும். இந்நகரத்தில் வசிக்கும் திறமையான ஃப்ரீலான்ஸர்களான ராகுல் மற்றும் பிரியாவைச் சந்தியுங்கள். கிராஃபிக் டிசைனரான ராகுல் மற்றும் கன்டென்ட் ரைட்டரான பிரியா, இண்டிபென்டண்ட்டாக வேலை செய்வதற்கான சுதந்திரத்தையும் ஃபிளேக்சிபிளிட்டியையும் அனுபவிக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் சமீபத்தில் எதிர்பாராத ஹெல்த் தொடர்பான சவாலை எதிர்கொண்டனர், இது ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

சூழ்நிலை 1

ராகுல் நோய்வாய்ப்பட்டார், அத்துடன் கடுமையான வைரஸ் தொற்று காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாமல், அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் ₹ 1,50,000 ஆகும். அவர் தனது சேமிப்பு முழுவதையும் செலவிட வேண்டியிருந்தது, அதுமட்டுமில்லாமல் அதிக மருத்துவமனை பில்களை சமாளிக்க குடும்பத்திடமிருந்தும் கடன் வாங்க வேண்டியிருந்தது. இது அவரது நிதி சார்ந்த நிலைத்தன்மையையும் பாதித்தது. அவர் குணமடையும்போது அவருக்கு ஏற்பட்ட நிதி பாதிப்பை கவர் செய்ய அவர் கிக்ஸை எடுக்க வேண்டியிருந்தபோது அது அவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

சூழ்நிலை 2

பிரியா புத்திசாலித்தனமாக ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்திருந்தாள். அவர் இதேபோன்ற உடல்நலப் பிரச்சினையை எதிர்கொண்டபோது, அவரது இன்சூரன்ஸ் பிளான் மொத்த மருத்துவ செலவுகளில் 80% ஐ கவர் செய்தது, அதன் மொத்தத் தொகை ₹1,50,000 ஆகும். ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருந்ததால் பிரியாவின் பாக்கெட்டை மீறியும் ஏற்பட்ட செலவுகள் கணிசமாகக் குறைந்தன. அவர் தனக்கு ஏற்பட்ட நிதிச் சுமையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது உடல் குணமடைவதில் முழுவதும் கவனம் செலுத்த முடிந்தது.

ராகுல் மற்றும் பிரியா போன்ற சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கு ஏன் ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம் என்பதை இந்த விளக்கம் தெளிவாக நிரூபிக்கிறது. சொல்லப்போனால் இது ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது, அவர்களுக்கு தரமான ஹெல்த் கேரையும் மன அமைதிக்கான அணுகலையும் வழங்குகிறது, மேலும் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து நம்பிக்கையுடன் தங்கள் இண்டிபென்டன்டான கேரியர்களில் தொடர்ந்து முன்னேறுவதையும் உறுதி செய்கிறது.

சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய பெனிஃபிட்கள்

ஹெல்த் இன்சூரன்ஸ் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு பலவித நன்மைகளை வழங்குகிறது, அவர்களுக்கு மதிப்புமிகுந்த பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்குகிறது. இந்த நன்மைகளை விரிவாக ஆராய்வோம்:

மெடிக்கல் கவரேஜ்

ஹெல்த் இன்சூரன்ஸ் ஹாஸ்பிடலைஷேஷன், மருத்துவரது ஆலோசனைகள், அறுவை சிகிச்சைகள், நோயறிதல் சோதனைகள், மருந்துகள் மற்றும் பலவற்றை கொண்ட காம்ப்ரிஹென்சிவ் மெடிக்கல் கவரேஜை வழங்குகிறது. இந்த கவரேஜ் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு அதிகப்படியான பாக்கெட் செலவுகள் இல்லாமல் தரமான ஹெல்த் கேர் சேவைகளை அணுகுவதை உறுதி செய்கிறது.

குறைந்த விலை பிரீமியங்கள்

பெரும்பாலான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் ஃபிளக்சிபில் மற்றும் குறைந்த விலை பிரீமியம் விருப்பங்களை வழங்குகின்றன. அவர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற பல திட்டங்களிலிருந்து தேர்வு செய்யலாம், இது வங்கியைத் தொடர்புகொள்ளாமலேயே போதுமான கவரேஜைப் பெறுவதையும் எளிதாக்குகிறது.

முழு குடும்பத்திற்குமான கவரேஜ்

எம்ப்ளாயரால் வழங்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாததால், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மருத்துவ அவசரநிலைகளின் அபாயத்தைக் கையாள்கிறார்கள். ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் பிளான் நடைமுறையில் இருப்பதால், அவர்களின் முழு குடும்பமும் கவர் செய்யப்படுகிறது, அத்துடன் முழு வீட்டிற்கும் பாதுகாப்பு உணர்வையும் வழங்குகிறது.

நிதி நிலைத்தன்மை

குறிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் அவசரநிலைகள் நிதிச் சுமைகளை ஏற்படுத்தலாம். ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் அதிக நிதி நிலைத்தன்மையைப் பெற முடியும். ஏனெனில் இது நோய் அல்லது காயம் ஏற்படும் காலங்களில் அதிக மருத்துவ பில்கள் மற்றும் வருமான இழப்புக்கான பாதுகாப்பு வலையாகச் செயல்படுகிறது.

கேஷ்லெஸ் ஹாஸ்பிடலைஷேஷன்

ஹெல்த் இன்சூரன்ஸின் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று கேஷ்லெஸ் ஹாஸ்பிடலைஷேஷன் ஃபெசிலிட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பாலிசிதாரர்கள் முன்கூட்டியே சிகிச்சைக்கான தொகையைச் செலுத்தாமல் நெட்வொர்க் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சையைப் பெறலாம். இன்சூரன்ஸ் வழங்குநர் நேரடியாக மருத்துவமனையில் பில்களைச் செட்டில் செய்வதால் இன்சூர் செய்யப்பட்டவருக்கு ஏற்படும் நிதி அழுத்தத்தை எளிதாக்குகிறார்.

இன்கம் டேக்ஸ் பெனிஃபிட்கள்

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களால் செலுத்தப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் இன்கம் டேக்ஸ் ஆக்ட் பிரிவு 80டி இன் கீழ் செய்யப்படும் டேக்ஸ் டிடெக்ஷன்களுக்குத் தகுதிபெறும், இதனால் அவர்களின் சேமிப்பும் அதிகரிக்கும்.

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் வகைகள்

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு பல்வேறு வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் விருப்பதேர்வுகள் கிடைக்கின்றன. மிகவும் பொருத்தமான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் எதிர்பாராத மருத்துவ செலவுகளையும் சமாளித்து நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யலாம்.

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களுக்கான பிரபலமான இரண்டு முக்கிய வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் இதோ:

1. தனிநபருக்கான ஹெல்த் பிளான்

தனிநபருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் ஒரு நபருக்கு கவரேஜ் செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்கள் மருத்துவ செலவுகள் மற்றும் ஹெல்த்கேர் தொடர்பான செலவுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு தனிப்பட்ட ஹெல்த் பிளானைத் தேர்வு செய்யலாம். இந்த பிளான் யாரையும் சார்ந்தில்லாமல் வசிப்பவர்களுக்கு உகந்தது.

2. ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் பிளான்

ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் பிளான் என்பது காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் விருப்பமாகும். இது இன்சூர் செய்யப்பட்டவர், மனைவி, குழந்தைகள் மற்றும் சில நேரங்களில் பெற்றோர்கள் உட்பட முழு குடும்பத்திற்குமான விரிவான கவரேஜை வழங்குகிறது. எதிர்பாராத மருத்துவ சூழ்நிலைகளில் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க விரும்பும் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்ப பெரும்பாலும் ஒரே பாலிசியின் கீழ் பெரிய கவரேஜ் வழங்கப்படுவதால் குடும்ப ஃப்ளோட்டர் திட்டங்களை விரும்புகிறார்கள்.

கிக் டொமைனில் சீரான வருமானம் இல்லாதபோது எப்படி பிரீமியங்களை கையாள்வது?

கிக் எகானமியில் உள்ளவர்களுக்கு வழக்கமான வருமானம் என்பது பொதுவாக ஏற்படும் ஒரு சவால் தான். சீரில்லாத வருமானம் இருக்கும் இந்த வழக்கில் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களைச் செலுத்த கவனமான நிதி திட்டமிடலும் புத்திசாலித்தனமான உத்திகளும் தேவை. ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்கள் தங்கள் வருவாயில் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளக்கூடும், இதற்கு அவர்கள் தங்களது ஹெல்த் இன்சூரன்ஸ் செலவுகளைத் திறம்பட நிர்வகிப்பது அவசியம்.

இந்த சூழ்நிலையை வழிநடத்த அவர்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ:

குறைந்த விலை திட்டங்களை தேர்ந்தெடுங்கள்

உங்கள் பட்ஜெட்டுடன் ஒத்துப்போகும் குறைந்த விலை பிரீமியங்களுடனான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேடுங்கள். உங்கள் நிதிகளுக்கு எந்தவித சுமையும் இல்லாமல் உங்கள் சுகாதாரத் தேவைகளைப் போதிய அளவு பூர்த்தி செய்யும் கவரேஜைத் தேர்வுசெய்வது நல்லது. நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொகைக்கான சிறந்த மதிப்பை வழங்கும் ஒன்றைக் கண்டறிய பல்வேறு திட்டங்களை ஒப்பிடுங்கள்.

மாதந்தோறும் செலுத்தும் பிரீமியம் பேமெண்ட்டுகள்

சீரில்லாத வருமானம் காரணமாக வருடாந்திர பிரீமியம் அதிகமாக இருந்தால், மாதாந்தோறும் அல்லது காலாண்டு தோறும் பிரீமியம் செலுத்தும் விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. குறைந்த தவணைகளில் பணம் செலுத்துவது என்பது ஹெல்த் இன்சூரன்ஸுக்குச் செலுத்த வேண்டிய பட்ஜெட்டை சிறப்பாகச் சமாளிக்க உதவும்.

அவசரகாலத்திற்கென நிதி ஒதுக்குங்கள்

உடல்நலம் தொடர்பான செலவுகளுக்காகக் குறிப்பாக அவசரகால நிதி என்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவும் அல்லது சேமித்து வரவும். அதிக வருமானம் உள்ள மாதங்களில், இந்தக் கணக்கில் சில நிதிகளை அதற்கெனவே ஒதுக்குங்கள். இது நிதி பற்றாக்குறை ஏற்படும் மாதங்களில் ஒரு இடையகமாக செயல்பட்டு உங்கள் பிரீமியம் தொகையை எந்தவித நிதி தொடர்பான சிரமம் இல்லாமல் செலுத்த முடியும் என்பதை உறுதி செய்கிறது.

மாதாந்தோறும் சேமித்திடுங்கள்

SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்) அல்லது சிறிய தொகைகளின் ரெக்கரிங் டெபாசிட்களை உருவாக்குங்கள், இது உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்த போதுமானதாக இருக்கும். இதனால் உங்களால் ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடியும், அத்துடன் வருடாந்தோறும் பிரீமியம் தொகை செலுத்துவதற்கான சுமையும் இல்லை.

இன்சூரன்ஸ் திட்டங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுங்கள்

உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவைகள் மற்றும் நீங்கள் செலுத்தும் பிரீமியங்களை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது நீங்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிய உதவும். உங்கள் வருமானம் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகள் மாறும்போது, உங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்த பொருத்தமான பிளான்கள் அல்லது சிறந்த பிரீமியம் விருப்பங்களையும் நீங்கள் காணலாம்.

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான சரியான ஹெல்த் இன்சூரன்ஸை எப்படி தேர்ந்தெடுப்பது?

சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களுக்கு அவர்களது உடல்நலம் மற்றும் நிதி நல்வாழ்வைப் பாதுகாக்க உதவும் ஒரு முக்கியமான முடிவாக அமையும். அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் வைத்திருக்க வேண்டிய சில அத்தியாவசிய காரணிகள் இதோ:

கவரேஜ்

ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தால் வழங்கும் கவரேஜை மதிப்பீடு செய்யுங்கள். ஹாஸ்பிடலைஷேஷனுக்கு ஆகும் செலவுகள், ப்ரீ மற்றும் போஸ்ட் ஹாஸ்பிடலைஷேஷன் கேர், டேகேர் நடைமுறைகள், ஆம்புலன்ஸ் கட்டணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ சேவைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

சம் இன்சூர்டு

உங்களுக்கு ஏற்படும் என நீங்கள் நினைக்கும் ஹெல்த்கேர் தேவைகளை மதிப்பிடுங்கள். அத்துடன் போதிய சம் இன்சூர்டு தொகையைத் தேர்வு செய்யுங்கள். உங்களால் செலுத்தமுடிந்த குறைந்த மற்றும் போதுமான கவரேஜ் ஆகியவை சரியான இன்சூரன்ஸ் தொகையைக் கண்டறிவதற்கான சிறந்த திறவுகோலாக அமையும்.

பிரீமியம்

உங்கள் பட்ஜெட் குறித்து யோசிக்கும் அதே நேரத்தில் வெவ்வேறு திட்டங்களின் பிரீமியம் விகிதங்களையும் ஒப்பிடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், குறைவான விலையுடைய விருப்பதேர்வு தேவையான கவரேஜை வழங்காது, எனவே உங்கள் முன்னுரிமைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை மேம்படுத்துவது அதாவது கஸ்டமைஸ் செய்துகொள்வது நல்லது.

நெட்வொர்க் மருத்துவமனைகள்

அருகில் தரமான ஹெல்த்கேர் வசதிகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியலை ஆராய்ந்திடுங்கள். மருத்துவமனைகளின் பெரிய நெட்வொர்க்கை அணுகுவது என்பது எந்தவித தொந்தரவும் இல்லாத கேஷ்லெஸ் சிகிச்சை வழங்குவதை உறுதி செய்கிறது.

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 16400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் சிகிச்சையைப் பெறலாம்.

ஆட்-ஆன் கவர்கள்

மெட்டர்னிட்டி பெனிஃபிட்கள், கிரிட்டிகள் இல்னஸ் கவரேஜ் அல்லது ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி போன்ற மாற்று சிகிச்சைகளுக்கான கவரேஜ் போன்ற உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆட்-ஆன் கவர்களை ஆராய்ந்து பாருங்கள்.

டிடெக்டிபள்ஸ்

டிடெக்டிபள்ஸ் என்றால் என்ன என்ற கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள் - இது இன்சூரன்ஸ் கவரேஜைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை. டிடெக்டிபள் தொகையாக ஒதுக்கப்படுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்பதை முதலில் மதிப்பிடுங்கள்.

கோ-பே மற்றும் சப்-லிமிட்டுகள்

சில மருத்துவ நடைமுறைகள் அல்லது மருத்துவமனை அறைக்கான வாடகைகளுக்குப் பொருந்தக்கூடிய கோ-பே மற்றும் சப்-லிமிட்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்த உட்பிரிவுகள் உங்கள் பாக்கெட்டுக்கும் மீறி ஆகும் செலவுகளை எப்படி பாதிக்கும் என்பதை மதிப்பிடுங்கள்.

கிளைம் செட்டில்மெண்ட்

இன்சூரரின் கிளைம் செட்டில்மெண்ட் விகிதம் மற்றும் கஸ்டமர் மதிப்பாய்வுகளை ஆராய்ந்து அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடுங்கள்.

சிக்கல் இல்லாத செயல்முறைகள்

பாலிசி வாங்குதல், கிளைம் சமர்ப்பிப்புகள் மற்றும் ரினீயூவல்களுக்கு தொந்தரவு இல்லாத மற்றும் டிஜிட்டல் செயல்முறைகளை வழங்கும் இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தேர்ந்தெடுங்கள். பயனர் பயன்படுத்தும் இன்சூரன்சிற்கான ஆன்லைன் தளத்தின் முழு அனுபவத்தையும் எளிதாக்குவதுடன் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகிறது.

டிஜிட் நிறுவனத்தில், ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவதற்கான செயல்முறை முதல் கிளைம் செய்வது வரை அனைத்தும் காகிதமற்றது, எளிதானது, விரைவானது மற்றும் தொந்தரவு இல்லாதது.

ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றியமையாத முதலீடாகும். இது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கணிக்க முடியாத கிக் எகானமியில் நிதி நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது. சரியான இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், பிரீமியங்களை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதன் மூலமும், ஃப்ரீலான்ஸர்கள் தங்கள் நல்வாழ்வைப் பாதுகாக்கலாம். அதுமட்டுமின்றி அவர்களின் விதிமுறைகளில் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்தலாம்.

சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சுயதொழில் செய்பவர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் கிரிட்டிகள் இல்னஸ் கவர் செய்யப்படுகிறதா?

இது உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைப் பொறுத்தது. டிஜிட் நிறுவனத்தில், எங்கள் ஹெல்த் பிளான்களில் உள்ளமைந்த கிரிட்டிகள் இல்னஸ் கவர் உள்ளது.

சுயதொழில் செய்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்க முடியுமா?

ஆம், ஃப்ரீலான்ஸர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் சில நேரங்களில் பெற்றோர்களுக்கும் கவர் செய்வதற்கு ஒரே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் உள்ளமைந்த ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

சுயதொழில் செய்பவர்கள் குறிப்பிட்ட பெனிஃபிட்களைப் பெறுவதற்கு முன் காத்திருப்புக் காலம்(வெயிட்டிங் பீரியட்) உள்ளதா?

ஆம், குறிப்பிட்ட சிகிச்சைகள் அல்லது ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏற்கனவே இருக்கும் நிலைகளுக்கு காத்திருப்பு காலங்கள் இருக்கலாம். ஃப்ரீலான்ஸர்கள் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள காத்திருப்பு காலங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

சீரான வருமானம் பெறாத ஃப்ரீலான்ஸரான நான், எனது ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன செய்வது?

பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவைத் தவறவிட்டால், பணம் செலுத்துவதற்கு என கருணை காலம் கிடைக்கும். பெரும்பாலான இன்சூரன்ஸ் வழங்குநர்கள் இதற்கு 15 முதல் 30 நாட்களை வழங்குகின்றனர். இருப்பினும், கருணை காலத்திற்குப் பிறகும் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், பாலிசி காலாவதியாகிவிடும், அதன்பின் கவரேஜ் நிறுத்தப்படும்.

ஃப்ரீலான்ஸர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களில் மெட்டர்னிட்டி கவர் கிடைக்குமா?

ஆம், சில ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் கர்ப்பம் தரித்தல், பிரசவம் தொடர்பான செலவுகள் போன்ற மெட்டர்னிட்டி அதாவது மகப்பேறு பெனிஃபிட்களை வழங்குகின்றன. தேவைப்பட்டால் ஃப்ரீலான்ஸர்கள் மகப்பேறு கவரேஜ் கொண்ட திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.

ஃப்ரீலான்ஸர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவதற்கான சிறந்த வயது என்ன?

சரியான நேரம் என்பது எப்போதும் இப்போதுதான்! ஃப்ரீலான்ஸர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே அதாவது அவர்களது இளம்வயதின் ஆரம்பகாலத்திலேயே ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது நல்லது. இதனால் குறைந்த பிரீமியம் தொகைக்கான பெனிஃட்களைப் பெறுவார்கள்.

ஃப்ரீலான்ஸர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ் மூலம் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சைகள் பெறலாமா?

சில ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் சர்வதேச மருத்துவ பாதுகாப்பு அல்லது அவசர மருத்துவ வெளியேற்ற பெனிஃபிட்களை வழங்குகின்றன, இது ஃப்ரீலான்ஸர்களும் சில சூழ்நிலைகளில் வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுமதிக்கிறது.

டிஜிட்டில், எங்களுடைய வேர்ல்டுவைட் ட்ரீட்மெண்ட் பிளான் உங்களுக்கு உலகம் முழுவதுமான இன்சூரன்ஸை வழங்குகிறது. இந்தியாவில் உங்கள் உடல்நலப் பரிசோதனையின் போது உங்கள் மருத்துவர் நோயைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை நீங்கள் வெளிநாட்டில் பெற விரும்பினால் அதற்காகும் செலுவுக்கான கவரேஜையும் நீங்கள் பெறலாம்.