இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு கோ-பே ஐ விதிப்பதற்கான மிகத் தெளிவான காரணம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் எழுப்பிய உரிமை கோரல் தொகையில் நிறுவனத்தின் செலவில் ஒரு பகுதியைச் சேமிக்க இது உதவும்.
அதைத் தவிர, காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளில் கோ-பே ஐ விதிக்க என்ன காரணங்கள் உள்ளன?
பார்ப்போம் வாருங்கள்!
1. பாலிசிகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கிறது - இன்சூரன்ஸ் வழங்குநர்கள் தங்கள் பாலிசிகளுக்கு கோ-பே ஐ விதிப்பதற்கான மிக முக்கியமான காரணம், பாலிசிதாரர்களின் தரப்பில் தேவையற்ற உரிமை கோரல்களைத் தடுக்க உதவுகிறது.
உதாரணமாக, ஒரு நபர் அதிக சிகிச்சை செலவு தேவையில்லாத நோய்களுக்கான சிகிச்சைக்கு உரிமைகோரல்களை எழுப்ப விரும்பலாம். கோ-பே ஐ விதிப்பதால் இந்த விஷயத்தில் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.
2. இன்சூரன்ஸ் பாலிசிகளின் நேர்மையான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது - உங்கள் சிகிச்சை செலவில் ஒரு சதவீதத்தை உங்கள் சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டும் என்பதால், இந்த விஷயத்தில் உங்கள் பங்கு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, பாலிசிதாரரின் தரப்பில் பாலிசியின் நியாயமான மற்றும் நேர்மையான பயன்பாட்டை இது ஊக்குவிக்கிறது.
3. விலையுயர்ந்த சிகிச்சை சேவையை நாடுவதற்கு முன் உங்கள் ஆப்ஷன்களை பரிசீலிக்க வைக்கிறது - சிகிச்சைக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனிநபர்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள், இது தேவையற்ற செலவுகளுக்கு வழி வகுக்கும்.
உதாரணமாக, சிகிச்சைச் செலவில் 10% செலுத்த வேண்டிய கோ-பே விதி உங்களிடம் இருந்தால், ரூ.10,000 பில்லுக்கு நீங்கள் ரூ.1,000 கோ-பேயாக செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால், விலையுயர்ந்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றால், உங்கள் பில் அதே சிகிச்சைக்கு ரூ.50,000 ஆக இருக்கும். அதில் நீங்கள் ரூ. 5,000 கோ-பேயாக செலுத்த வேண்டியது இருக்கும்.
எனவே, இன்சூரன்ஸ் தொகையானது சராசரி பாலிசிதாரரை அதிக செலவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதைத் தவிர்க்க ஊக்குவிக்கும்.
4. இன்சூரன்ஸ் வழங்குநர்களின் ரிஸ்க்குகளைத் குறைக்கிறது - கோ-பே விதிப்பதால், இன்சூரன்ஸ் வழங்குநர்கள் மொத்த உரிமைகோரல் தொகையில் 100% செலுத்த வேண்டியதில்லை.