இது செப்டம்பர் 1998 ஆம் ஆண்டு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, கார்னிவல் என்பது தனது நான்காவது ஜெனரேஷனில் உள்ள ஒரு மினிவேன் ஆகும்.
அத்துடன், கியாவின் இந்திய நிறுவனம் கார்னிவல் சீரிஸ் உடன் லிமௌசைன் கார்(Limousine Car) எனும் ஒரு புதிய வகையைச் சேர்த்துள்ளது. புதிய கார்ப்பரேட் லோகோவையும் கொண்டிருப்பது இதற்கு கூடுதல் மதிப்பைச் சேர்க்கிறது.
அதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் ரீனியூவல் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களின் சிறப்பின் காரணமாக, இது இந்திய சந்தையில் தனி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மேலும், தென் கொரிய வாகன உற்பத்தியாளரின் இந்த மாடலுக்கு 2021 சிஎன்பி எம்பிவி(CNB MPV ) வருட விருதும் (2021 CNB MPV of the Year award) வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பிற வெஹிக்கிலைப் போலவே, கியா கார்னிவலும் ஆபத்து மற்றும் விபத்துகளினால் சுலபமாகப் பாதிக்கப்படக்கூடியது. எனவே, கியா கார்னிவல் கார் இன்சூரன்ஸை வைத்திருப்பதும் சேதங்களின் செலவுகளைக் காப்பிட வேண்டியதும் அவசியமாகிறது.
மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி ஒரு தனிநபர் தேர்டு பார்ட்டி வெஹிக்கிலையோ நபரையோ அல்லது சொத்துக்களுக்குத் தனது காரால் ஏற்படும் சேதங்களை ஈடுசெய்ய குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருக்க வேண்டும். இருப்பினும், முழுமையான கவரேஜ் நன்மைகளுக்கு, ஒருவர் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தியாவில் பல இன்சூரன்ஸ் வழங்குநர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வகையான பாலிசிகளையும் வழங்குகிறார்கள். அத்தகைய இன்சூரர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்று.
இந்தப் பிரிவில், கியா கார்னிவல் இன்சூரன்ஸ் குறித்து டிஜிட் நிறுவனம் வழங்கும் சலுகைகள் மற்றும் நன்மைகள் பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.