மாருதி சுஸுகி எஸ் கிராஸ் வெஹிக்கல் எஸ்யூவியாக குத்தகைக்கு எடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் இதன் நீண்ட ஹேட்ச்பேக் தோற்றம் கொண்ட மாடலினால் எதிர்பார்த்த அளவு சந்தையில் வளம் வர முடியவில்லை. இது சமீபத்தில் உற்பத்தியாளர்களால் சில கூடுதல் அம்சங்களுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட மாருதி சுஸுகி 800 போன்ற சிறிய சிட்டி ரைட் காரை உருவாக்கிய பின்னர், மாருதி எஸ் கிராஸ் போன்ற பல கார்களுடன் தங்கள் பெயரை நிலை நிறுத்தியது என்றால் மிகையாகாது.
மற்ற கார்களைப் போலவே, மாருதி சுஸுகி எஸ் கிராஸ் அதன் அடிப்படை வடிவமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றியது. இது பெரும்பாலும் சமூகத்தின் உயர் நடுத்தர பிரிவினரால் வாங்கப்பட்டது. இந்த காரின் விலை ரூ.8.86 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அதிநவீனமாக இருக்கும் இந்த கார் அதன் தரமான இன்டீரியர் காரணமாக மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ஏன் வாங்க வேண்டும்?
மாருதி சுஸுகி எஸ் கிராஸ் என்பது விசாலமான, டீசல் என்ஜின் உடனான ஐந்து இருக்கைகள் கொண்ட கார். அதிக வேகமான 5 ஸ்பீடு கியர்பாக்ஸிலும் ரைடர்கள் தங்கள் ரைடுகள் சீராக இருப்பதை உணரலாம். மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் இந்தக் காரின் சிறப்பம்சங்களை மேம்படுத்த நினைத்தது.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த கார் லிட்டருக்கு 25.1 கிமீ மைலேஜ் தரும். லெதர் அப்ஹோல்ஸ்டரி, க்ரூஸ் கன்ட்ரோல், 60:40 விகிதத்தில் ரியர் சீட் ஸ்ப்ளிட், 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இன்டீரியர் அமைப்பு நமக்கு பிரீமியம் காரில் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. இது ஆண்ட்ராய்டு சிஸ்டத்துடன் நன்றாக இணைகிறது. புதிய மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி எஸ்-கிராஸில் மற்றொரு குறிப்பிடத்தக்க அப்டேட், லெதரினால் அமைக்கப்பட்ட கதவு ஆர்ம்ரெஸ்ட் உடன் சிறப்பாக சௌகரியமாக உருவாக்கப்பட்ட கேபின் ஆக இருக்கிறது.
பின்புற இருக்கை அமர்வதற்கு ஏராளமான இடத்தையும் (தை சப்போர்ட்), ஆஜானுபாகு தோற்றம் கொண்டவர்கள் அமர்வதற்கான போதிய இடம் (சுப்பீரியர் ஷோல்டர் ரூம்), போதுமான லெக்ரூம் ஆகியவற்றை வழங்குகிறது.
இது ஒரு பெரிய பல் குரோம் கிரில்லைக் கொண்டுள்ளது, இதனால் கார் பார்ப்பதற்கு ஆக்ரோஷமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. சிறந்த பார்வைக்கு ஹெட் லேம்ப்களில் எல்ஈடி ப்ரொஜெக்டர் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பானெட் மிகவும் மஸ்குலராகவும் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் வலுவான மடிப்புகள் காருக்கு போல்டான தோற்றத்தை வழங்குகின்றன.
இதையும் படியுங்கள்: மாருதி கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிக