மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை ஆன்லைனில் பெறுங்கள்

Third-party premium has changed from 1st June. Renew now

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்/ரீனியூவ் செய்யவும்

மாருதி சுஸுகி நிறுவனம் பலதரப்பட்ட செடான் கார்கள், ஹேட்ச்பேக் கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் பட்ஜெட் சார்ந்த சந்தைக்கான நிறுவனத்தின் சில எஸ்யூவிகளில் விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்றாகும்.

1462சிசி என்ஜின் ஆற்றல் கொண்ட இந்த எஸ்யூவி பார்ப்பதற்கு மிக ஸ்டைலாக இருப்பதோடு, சாலையில் கஸ்டமர்களை ஈர்க்கும் அளவு செயல்திறனை வெளிப்படுத்துவதையும் உறுதிசெய்கிறது. அதன் பல அதிநவீன அட்டகாசமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் காரணமாக, விட்டாரா பிரெஸ்ஸா 2018 டெக் மற்றும் ஆட்டோ விருதுகளில் [1] 'ஆண்டின் எஸ்யூவி/எம்பிவி' உட்பட பல விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த எஸ்யூவி தரமான வாகனம், தினசரி பயணத்திற்கு ஏற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இருப்பினும், மற்ற கார்களைப் போலவே, ஒரு வெஹிக்கிலுக்கும் எதிர்பாராதவிதமாக ஏற்படும் டேமேஜுக்குப் பிறகு செய்யவேண்டிய ரிப்பேரை விரைவாகத் தொடங்க நீங்கள் சிறந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும். நீங்கள் விரும்பும் நிதி பாதுகாப்பின் அளவைப் பொறுத்து, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அல்லது காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யலாம்.

தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அதன் பெயர் குறிப்பிடுவதை மட்டுமே செய்கிறது. இது விபத்தில் உங்கள் காரினால் டேமேஜான தேர்டு பார்ட்டியினருக்குரிய உங்கள் நிதி பொறுப்பைப் பூர்த்தி செய்கிறது.

இருப்பினும், உங்கள் சொந்த காரின் டேமேஜிற்கு நீங்கள் எந்தவிதமான நிதி உதவியையும் கிளைம் செய்ய முடியாது. அதற்கு, நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தப் பாலிசியின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சொந்த காருக்கு ஏற்பட்ட டேமேஜுக்கான இழப்பீட்டையும் வழங்குகின்றன.

இது தொடர்பாக, மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட் 1988 இன் படி, இந்திய சாலைகளில் ஓட்டப்படும் அனைத்து வெஹிக்கலுக்கும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால், ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் (மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ரூ.4000). எனவே, நீங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் வாங்க வேண்டுமா? என்பது கேள்வி அல்ல, ஆனால் நீங்கள் அதை எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் இன்சூரன்ஸ் வழங்குநர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்றாகும். அதன் பாலிசி அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.

விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (சொந்த டேமேஜ்களுக்கான பாலிசிக்கு மட்டும்)
ஆகஸ்ட்-2019 2,315
ஆகஸ்ட்-2018 2,198
ஆகஸ்ட்-2017 2,028

**பொறுப்பு திறப்பு - மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எல்எக்ஸ்இ பிஎஸ்விஐ 1462 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு ஆகஸ்ட்-2020 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது எவை?

டிஜிட்டின் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு-பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

வீட்டு வாசலிலேயே பிக்-அப் செய்து டிராப் செய்யும் வசதி

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குவது

×

தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வாறு கிளைம் ஃபைல் செய்வது?

After you buy or renew our car insurance plan, you live tension free as we have a 3-step, completely digital claims process!

ஸ்டெப் 1

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

ஸ்டெப் 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்

விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டிய காரணங்கள் யாவை?

நீங்கள் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்ய விரும்பினாலோ புதிய ஒன்றை வாங்க விரும்பினாலோ, நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ் வழங்குநர் டிஜிட் நிறுவனம் ஆகும்.

பாலிசிதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட மிகவும் பயனுள்ள சில அம்சங்களை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் பிரபலமான சில வசதிகள் இதோ:

  • கஸ்டமரின் நம்பிக்கையைப் பெறும் அதிக கிளைம் செட்டில்மெண்ட்களின் டிராக் ரெக்கார்ட் - டிஜிட் பாலிசிதாரர்கள் தங்கள் கிளைம் விண்ணப்பங்கள் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்படுமா என்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஒரு சில விண்ணப்பங்களை நிராகரிப்பதைத் தவிர, எங்களுக்கு வரும் பெரும்பாலான கிளைம் கோரிக்கைகளை எங்கள் உள்ளமைந்த குழு செட்டில் செய்கிறது. ஆதாரமற்ற சாக்குபோக்குகளைக் கூறி விண்ணப்பிக்கும் கிளைம்களை நாங்கள் மறுப்பதில்லை. அதற்கு பதிலாக, எங்கள் குழு பாலிசிதாரர்களுக்கு அவர்களின் கடினமான காலங்களில் நிதி ரீதியாக உதவ முயற்சிக்கிறது என்பதை பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறோம்.
  • டிஜிடைஸ்ட் கிளைம் செயல்முறை - கிளைம் செய்ய வேண்டிய ஒவ்வொரு முறையும் இன்சூரரின் அலுவலகங்களுக்குச் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அசௌகராயமாக உள்ளதா? எங்களால் உங்கள் நிலைமையை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் கிளைம் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான டிஜிட்டல் பயன்முறையை எங்கள் டிஜிட் நிறுவனம் வழங்குகிறோம். பாலிசிதாரர்கள் தங்கள் வீடுகளில் வசதியாக அமர்ந்து தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி கிளைம் செய்துக்கொள்ளலாம். இவை எல்லாவற்றிக்கும் மேல், நாங்கள் சுய பரிசோதனை செயல்முறையை வழங்குகிறோம், இதைப் பயன்படுத்தி இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உங்களுக்கான பிரதிநிதி நிர்ணையிக்கப்படும் வரை காத்திருக்காமல் உங்களால் விரல் நுனியில் கிளைம் செய்ய முடியும். இன்சூர் செய்யப்பட்ட வெஹிக்கலின் சில படங்களைக் கிளிக் செய்து டிஜிட்டின் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மூலம் எங்களுக்கு அதை அனுப்பவும். இது போதும், வேலை முடிந்தது! நாங்கள் அனைத்து தகவல்களையும் எங்கள் தரப்பில் அனைத்தையும் மதிப்பாய்வு செய்து இழப்பீடு தொடர்பான தகவல்களுக்கு உங்களை விரைவில் தொடர்புகொள்வோம்.
  • ஐடிவி (IDV) கஸ்டமைசேஷன் விருப்பத்தேர்வுகள் - ஐடிவி என்பது நீங்கள் இன்சூரன்ஸ் செய்த வெஹிக்கல் திருடப்பட்டால் அல்லது முழுவதுமாக ரிப்பேர் செய்யப்பட்டால் நீங்கள் பெறும் இழப்பீடு என்பதால், நீங்கள் எப்போதுமே அதை அதிகமாக மதிப்பிட முயற்சிக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களே உங்கள் காரின் ஐடிவியைத் தீர்மானிக்கின்றன, ஆனால் இந்த விஷயத்தில் டிஜிட் நிறுவனம் அதன் தனித்தன்மையை நிலைநாட்டுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் நீங்கள் வாங்கும்போது உங்கள் இன்சூரன்ஸ் மதிப்பை அதிகரிக்க அனுமதிக்கிறோம். எனவே, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் பெறும் இழப்பீட்டுத் தொகை முற்றிலும் உங்கள் முடிவைப் பொறுத்ததே என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
  • இந்தியாவில் 1400-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் - மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்குச் சேவை செய்வதற்கான நெட்வொர்க் கேரேஜ்களின் கிரிட் எங்களிடம் உள்ளது. இன்சூர் செய்யப்பட்ட வெஹிக்கலுக்கான விரைவான கேஷ்லெஸ் ரிப்பேர்களைச் செய்ய நீங்கள் 1400 கேரேஜ்களில் ஏதேனும் ஒன்றுக்கு உங்கள் வெஹிக்கலை ஓட்டி செல்லலாம். அத்துடன், அந்த தருணத்தில் உங்களிடம் பண பற்றாக்குறையாக இருந்தாலும் டிஜிட் நெட்வொர்க் கேரேஜ்கள் டேமேஜான வெஹிக்கலைச் சரிசெய்த பிறகு ரீஇம்பர்ஸ்மென்ட் செய்வதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதையும் உறுதிசெய்கிறது. எல்லாவற்றிக்கும் மேல், இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் சேவை மையங்கள் இருப்பதினால் பாலிசிதாரர்கள் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும், அந்தப் பகுதியில் உள்ள அவுட்லெட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று நம்பலாம் என்பதை குறிக்கிறது. 
  • டோர்ஸ்டெப் கார் பிக் அப் மற்றும் டிராப் வசதி - கேஷ்லெஸ் ரிப்பேர்களை வழங்குவதோடு மட்டுமின்றி, நெட்வொர்க் கேரேஜ்கள் பாலிசிதாரர்களுக்கு தங்கள் வீடுகளில் இருந்து டேமேஜான காரின் பிக்-அப் வசதியையும் வழங்குகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்தில், ஒரு கேரேஜ் ஊழியர் வெஹிக்கலைச் சம்பந்தப்பட்ட சேவை மையத்திற்கு எடுத்துச் சென்று, டேமேஜைச் சரிசெய்து உங்கள் வீட்டில் விடுவார். இந்த முழு செயல்பாட்டின் போது, உங்கள் காரில் ரிப்பேர்கள் நடந்து கொண்டிருந்தாலும், நீங்கள் நேரடியாகக் கேரேஜைப் பார்வையிட வேண்டியதில்லை.
  • பல்வேறு ஆட்-ஆன் விருப்பங்கள் - ஆட்-ஆன்கள் என்பவை முழுமையான இன்சூரன்ஸ் பாலிசிகள் அல்ல. ஆனால் அவை, எங்கள் பல்வேறு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கும் பாதுகாப்பை மேம்படுத்தும் அம்சங்களாக விளங்குகின்றன என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளைக் கஸ்டமைஸ் செய்ய ஒன்று அல்லது இரண்டு அல்ல, ஏழு மிகவும் பயனுள்ள ஆட்-ஆன்களை டிஜிட் நிறுவனம் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, என்ஜின் புரட்டெக்ஷன் ஆட்-ஆன் மின் மற்றும் திரவ டேமேஜிற்காக இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனத்தின் என்ஜினுக்குப் புரட்டெக்ஷன் வழங்குகிறது. இந்தக் கவரேஜ் வழக்கமான இன்சூரன்ஸ் பாலிசி இன்சூர் செய்வதற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர், ரோட்சைட் அசிஸ்டன்ஸ், பேசஞ்சர் கவர், கன்ஸ்யூமபில்ஸ் கவர், போன்ற பல்வேறு கூடுதல் ஆட்-ஆன்களும் அடங்கும். உங்கள் டிரைவிங் பாணிக்கு எது தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுக்க தயங்காதீர்கள்.
  • 24x7 கஸ்டமர் சேவை - கிறிஸ்துமஸ் நாளில் அல்லது குடியரசு தினத்தன்று கூட நீங்கள் விபத்தை சந்திக்க நேரிடலாம். ஒருவேளை எதிர்பாராதவிதமாக அப்படி நடந்தால், கவலைப்பட வேண்டாம். டிஜிட் நிறுவனத்தின் கஸ்டமர் சேவைக் குழு எப்போதும் உங்கள் அழைப்புகளை எடுக்கவும் உங்களுக்கு உதவுவும் தயாராகக் காத்திருக்கிறது. இரவு மூன்று மணியாக இருந்தாலும் சரி, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் ரீனியூவல், வாங்குதல் அல்லது கிளைம்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் எங்கள் குழு உறுப்பினர்கள் அதை விரைவாக நிவர்த்தி செய்வார்கள்.

நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்கள் என்றால், டிஜிட்டின் இன்சூரன்ஸ் பாலிசியை ஏன் ஒருமுறை முயற்சி செய்துபார்க்கக்கூடாது? அதன் பல அம்சங்களையும் நன்மைகளையும் நீங்கள் விரைவாகக் கவனிப்பீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் நிதி உதவியைப் பெற உதவும் அட்சயபாத்திரம் இது. 

டிரைவிங்கை கொண்டாடுங்கள், ஆனால் அதேசமயம் பாதுகாப்பாக ஓட்டுங்கள்!

விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கியமான காரணங்கள் யாவை?

பவர் பேக் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி நீங்கள் பாதுகாக்க வேண்டும் என விரும்பும் வைக்கும் சொத்தாகும். உங்கள் புதிய கார் மற்றும் உங்கள் பாக்கெட் இரண்டிற்கும் கார் இன்சூரன்ஸ் முக்கியமானது. கார் இன்சூரன்ஸ் வைத்திருப்பதன் பெனிஃபிட்கள் பின்வருமாறு:

ஃபைனான்ஷியல் லையபிளிட்டிஸ்: இது உங்கள் பாதுகாப்பாளனாகச் செயல்படுகிறது, அத்துடன் எந்தவொரு தேர்டு பார்ட்டியினருக்கும் உங்களால் ஏற்படும் டேமேஜ்களுக்கான அனைத்து செலவுகளையும் கவர் செய்கிறது. ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸைப் பொறுத்தவரை, இது உங்கள் சொந்த காரை டேமேஜ்கள் மற்றும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும்.

சட்டரீதியாக இணக்கமானது: சரியான இன்சூரன்ஸ் இல்லாமல் உங்கள் பிரெஸ்ஸாவை ஓட்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவில், கார் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது, மேலும் அதற்கு கடும் அபராதம் (2000 ரூபாய் வரை) விதிக்கப்படலாம் மற்றும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் / பறிமுதல் செய்யலாம் மற்றும் / அல்லது உங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

தேர்டு-பார்ட்டி லையபிளிட்டி: ஒரு எதிர்பாராத விபத்து அல்லது அது போன்ற ஒரு சம்பவத்தில் வேறொருவரின் கார் அல்லது சொத்திற்கு டேமேஜ் / காயம் ஏற்பட்டால் இந்த வகை இன்சூரன்ஸ் உங்களுக்கு புரட்டெக்ஷன் கவரேஜை வழங்குகிறது. இத்தகைய செலவுகள் பெரும்பாலும் திடீரெனவும் எதிர்பாராதவையாகவுமே இருக்கும். மேலும் அந்த நேரத்தில் நிலைமையை நிதி ரீதியாக கையாள நீங்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம், இந்த இன்சூரன்ஸ் தக்கசமையத்துக்கு உதவுவதுடன் உங்களையும் உங்கள் பாக்கெட்டையும் பாதுகாக்கிறது.

காம்ப்ரிஹென்சிவ் கவர்: இதை உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் மாற்றியமைக்கலாம்; உங்கள் பிரெஸ்ஸாவுக்கான கூடுதல் இன்சூரன்ஸ் கவராகி அத்தகைய இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். பெயர் குறிப்பிடுவது போல, தீ விபத்து, திருட்டு, இயற்கை / மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், நாசவேலைகள், இயற்கை / வானிலை போன்ற உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஏற்படும் அனைத்து டேமேஜ்கள் என அனைத்தையும் காம்ப்ரிஹென்சிவ் கவர் செய்கிறது. இது தவிர, பாலிசியின் கீழ், சில கார் இன்சூரன்ஸ் ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கவரேஜை நீட்டிப்பதற்கான விருப்பதேர்வும் உள்ளது. பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் புரட்டெக்ஷன், டயர் புரட்டெக்டிவ் கவர் மற்றும் ஜீரோ-டெப் கவர் ஆகிய சிலவும் இதில் இருக்கலாம்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஸ்டைல் உங்களைத் திணறடிக்க வைக்கும் என்பதால் நிதானமாக அதை ஆராயுங்கள். இந்தத் தைரியமான, கவர்ச்சியான, புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான கார் ஸ்டைல் உணர்வு உள்ள அனைவருக்கும் பொருந்தும். ஆண்மையான வெளிப்புறம் மற்றும் இன்றைய காலத்திற்கு ஏற்ற உட்புறம் என இந்த கார் அனைத்து வகையான அற்புதமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

இந்த கார் அதிவேக காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் 2017-18 ஆம் ஆண்டு அதன் பிரிவில் கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் வென்று சாதனை பிடித்துள்ளது. அதாவது 2017 ஆண்டின் இந்திய கார் விருது உட்பட ஒரே ஆண்டில் 28 விருதுகளை வாரி குவித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா வாங்க வேண்டும்?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா க்ரூஸ் கன்ட்ரோலுடன் கூடிய வசதியான டிரைவ், டூயல் டோன் ஃப்ளோட்டிங் ரூஃப், ஸ்போர்ட்டி போல்ட் மஸ்குலர் டிசைன், பிளாட்பெட்களுக்கான ஃப்ளிப் ஃபோல்ட் செய்யப்பட்ட அரிய இருக்கைகள் போன்ற சிறந்த அம்சங்களைக் கொண்ட முதல் காம்பேக்ட் எஸ்யூவி இது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், எஸ்யூவி முன்பக்க வடிவமைப்பு மற்றும் டாஷிங் இன்டீரியர் உங்களை ஈர்க்க தவறாது. விட்டாரா பிரெஸ்ஸா எல்டிஐ, விடிஐ, இசட்டிஐ மற்றும் இசட்டிஐ+ என நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. டிடி 200 என்ஜின் கொண்ட இந்த கார் 24.3 கிமீ மைலேஜ் தரும்.

ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற சில மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் உள்ளன. அது மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பிற்காக, இந்த காரில் டூயல் ஏர்பேக், லேம்ப் பஸருடன் கூடிய சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீட் வார்னிங் அலர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன.

விட்டாரா பிரெஸ்ஸா ஸ்டைல், கம்ஃபர்ட், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் இணையற்ற கலவையாகும். எஸ்யூவி தரத்தில் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் விட்டாரா பிரெஸ்ஸா மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் கஸ்டமர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வார இறுதி விடுமுறைக்காக மட்டுமல்ல, தினசரி டிரைவிற்கும் மிகப் பொருத்தமானது. பிரெஸ்ஸா ஒரு குடும்ப கார், அதை உங்கள் அன்றாட பயணத்திற்குப் பயன்படுத்துங்கள் அல்லது உங்கள் குடும்பம் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் ரோட் டிரிபிற்கு செல்ல ஆயுத்தமாகுங்கள்!

இதையும் படியுங்கள்: மாருதி கார் இன்சூரன்ஸ் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

மாருதி சுஸுகி விட்டாரா பிரஸ்ஸா - வேரியண்ட்டுகள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்டுகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தைப் பொறுத்து மாறுபடும்)
LDi 1248 cc, மேனுவல், டீசல் ₹.7.67 லட்சம்
VDi 1248 cc, மேனுவல், டீசல் ₹.8.19 லட்சம்
VDi AMT 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் ₹.8.69 லட்சம்
ZDi 1248 cc, மேனுவல், டீசல் ₹.8.97 லட்சம்
ZDi AMT 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் ₹.9.47 லட்சம்
ZDi Plus 1248 cc, மேனுவல், டீசல் ₹.9.92 லட்சம்
ZDi Plus Dual Tone 1248 cc, மேனுவல், டீசல் ₹.10.08 லட்சம்
ZDi Plus AMT 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் ₹.10.42 லட்சம்
ZDi Plus AMT டியூவல் டோன் 1248 cc, ஆட்டோமேடிக், டீசல் ₹.10.64 லட்சம்

இந்தியாவில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

நான் எனது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் விலையை எப்படி குறைப்பது?

டிஜிட்டின் இன்சூரன்ஸ் பாலிசிகள் நியாயமான விலையில் கிடைக்கின்றன. இருப்பினும், நீங்கள் பிரீமியங்களை மேலும் குறைக்க விரும்பினால், நீங்கள் இரண்டு தந்திரங்களைப் பின்பற்றலாம். முதலாவதாக, உங்கள் பாலிசியின் ஐடிவியை அதன் குறைந்தபட்ச மதிப்பில் வைத்திருப்பதன் மூலம் அது அதிகரிப்பதை நீங்கள் தவிர்க்கலாம். அடுத்து, நீங்கள் அதிக வாலண்டரி டிடெக்டிபள்ஸ் உடனான திட்டங்களைத் தேர்வு செய்யலாம், ஏனெனில் இவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

எனது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியில் நான் சேமிக்கக்கூடிய அதிகபட்ச என்சிபி (NCB) எவ்வளவு?

டிஜிட் அதன் பாலிசிதாரர்களை அடுத்தடுத்த கிளைம் இல்லாத ஆண்டுகளில் என்சிபியை அக்கியூமலெட் செய்ய அனுமதிக்கிறது. இந்த பாலிசிகளில் இருந்து அதிகபட்சம் 50% வரையிலான என்சிபியை நீங்கள் அக்கியூமலெட் செய்யலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா பாலிசிக்கான ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆனின் செயல்பாடு எப்படி இயங்கும்?

ரோட் நடுவில் உங்கள் கார் ரிப்பேர் ஆகும் போதெல்லாம் டிஜிட்டின் நெட்வொர்க் கேரேஜ்களிலிருந்து பலவிதமான சேவைகளைப் பெற ரோடுசைடு அசிஸ்டன்ஸ் ஆட்-ஆன் உங்களுக்கு உதவும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கேரேஜில் இருந்து மெக்கானிக்குகள் உங்கள் வெஹிக்கிலைச் சேவை மையத்திற்கு கொண்டு செல்வார்கள். மேலும், அத்தகைய சேவையைப் பெறுவது கிளைமாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

எனது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியத்தை நோ க்ளைம் போனஸ் எவ்வாறு பாதிக்கும்?

என்சிபி உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியங்களைக் குறைக்கிறது. இருப்பினும், இது தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பிரீமியம் விகிதத்தைப் பாதிக்காமல் உங்கள் பிரீமியங்களின் சொந்த டேமேஜ் பகுதியை மட்டுமே குறைக்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.