மாருதி சுஸுகி நிறுவனம் பலதரப்பட்ட செடான் கார்கள், ஹேட்ச்பேக் கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் பட்ஜெட் சார்ந்த சந்தைக்கான நிறுவனத்தின் சில எஸ்யூவிகளில் விட்டாரா பிரெஸ்ஸாவும் ஒன்றாகும்.
1462சிசி என்ஜின் ஆற்றல் கொண்ட இந்த எஸ்யூவி பார்ப்பதற்கு மிக ஸ்டைலாக இருப்பதோடு, சாலையில் கஸ்டமர்களை ஈர்க்கும் அளவு செயல்திறனை வெளிப்படுத்துவதையும் உறுதிசெய்கிறது. அதன் பல அதிநவீன அட்டகாசமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் காரணமாக, விட்டாரா பிரெஸ்ஸா 2018 டெக் மற்றும் ஆட்டோ விருதுகளில் [1] 'ஆண்டின் எஸ்யூவி/எம்பிவி' உட்பட பல விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த எஸ்யூவி தரமான வாகனம், தினசரி பயணத்திற்கு ஏற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருப்பினும், மற்ற கார்களைப் போலவே, ஒரு வெஹிக்கிலுக்கும் எதிர்பாராதவிதமாக ஏற்படும் டேமேஜுக்குப் பிறகு செய்யவேண்டிய ரிப்பேரை விரைவாகத் தொடங்க நீங்கள் சிறந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெற வேண்டும். நீங்கள் விரும்பும் நிதி பாதுகாப்பின் அளவைப் பொறுத்து, தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அல்லது காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை நீங்கள் தேர்வு செய்யலாம்.
தேர்டு பார்ட்டி லையபிளிட்டி பாலிசி அதன் பெயர் குறிப்பிடுவதை மட்டுமே செய்கிறது. இது விபத்தில் உங்கள் காரினால் டேமேஜான தேர்டு பார்ட்டியினருக்குரிய உங்கள் நிதி பொறுப்பைப் பூர்த்தி செய்கிறது.
இருப்பினும், உங்கள் சொந்த காரின் டேமேஜிற்கு நீங்கள் எந்தவிதமான நிதி உதவியையும் கிளைம் செய்ய முடியாது. அதற்கு, நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தப் பாலிசியின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, சொந்த காருக்கு ஏற்பட்ட டேமேஜுக்கான இழப்பீட்டையும் வழங்குகின்றன.
இது தொடர்பாக, மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட் 1988 இன் படி, இந்திய சாலைகளில் ஓட்டப்படும் அனைத்து வெஹிக்கலுக்கும் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால், ரூ.2000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் (மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ரூ.4000). எனவே, நீங்கள் கார் இன்சூரன்ஸ் பாலிசியைப் வாங்க வேண்டுமா? என்பது கேள்வி அல்ல, ஆனால் நீங்கள் அதை எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என்பதுதான் கேள்வி.
இன்று இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் இன்சூரன்ஸ் வழங்குநர்களில் டிஜிட் நிறுவனமும் ஒன்றாகும். அதன் பாலிசி அம்சங்கள் மற்றும் பெனிஃபிட்களைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து வாசிக்கவும்.