ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் ஸோன் அப்கிரேடு ஆப்ஷனைப் பெறுங்கள்
Happy Couple Standing Beside Car
Chat with an expert

I agree to the  Terms & Conditions

Port my existing Policy
Renew your Digit policy

(Incl 18% GST)

ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கள் பற்றிய அனைத்தும்

ஹெல்த் இன்சூரன்சில் ஸோன் என்றால் என்ன?

பெருநகரங்களில் மருத்துவ செலவு சிறிய நகரங்களை விட அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான், சிறிய நகரங்களில் உள்ளவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை மிகவும் மலிவு விலையில் பெற, இன்சூரன்ஸ் வழங்குநர்கள் ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களை உருவாக்கியுள்ளனர்.

ஆனால், இந்த வகையில் "ஸோன்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

சரி, இது கீழே உள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளபடி, இந்தியாவில் உள்ள நகரங்கள் மூன்று ஸோன்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கிறது:

ஸோன் A

ஸோன் B

ஸோன் C

டெல்லி/என்.சி.ஆர் (NCR), மும்பை உட்பட (நவி மும்பை, தானே மற்றும் கல்யாண் உட்பட)

ஹைதராபாத், செகந்திராபாத், பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், வதோதரா, சென்னை, புனே மற்றும் சூரத்.

A & B தவிர அனைத்து நகரங்களும் ஸோன் C இன் கீழ் வரும்

ஆனால் சிகிச்சைச் செலவின்படி நகரங்களின் வகைப்பாடு ஒரு இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து மற்றொன்றுக்கு மாறுபடலாம் (மேலே உள்ள வகைப்பாடு டிஜிட் இன்சூரன்ஸுக்கானது).

இப்போது, ​​ஸோன் A நகரங்களில் ஏற்படும் சிகிச்சைச் செலவு, ஸோன் B நகரங்களை விட கணிசமாக அதிகமாக உள்ளது. C ஸோன் நகரங்களுக்கு மருத்துவச் செலவுகள் குறைகின்றன. அதனால்தான், ஸோன் பேஸ்டு இன்சூரன்ஸ் திட்டங்களில், ஒவ்வொரு நகரத்திலும் உள்ள சிகிச்சைச் செலவின்படி அவர்களுக்கு செலுத்தப்படும் பிரீமியத்தின் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது.

 

இதுபற்றி மேலும் அறியவும்:

ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ் கீழ் பிரீமியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு எடுத்துக்காட்டுடன் ஸோன் பேஸ்டு பிரீமியம் கணக்கீடு

சிறந்த புரிதலுக்காக கீழே உள்ள அட்டவணையில் உள்ள உதாரணத்தை பார்ப்போம்:

ஸோன் C

ஸோன் B

ஸோன் A

பிரீமியம் ரூ. 5315 உடன் 20% இணை கட்டணம்

பிரீமியம் ரூ. 5882 உடன் 10% இணை கட்டணம்

பிரீமியம் ரூ.6448 உடன் 0% இணை கட்டணம்

NA

ரூ. 567 (ஸோன் C -> B) ஸோன் அப்கிரேடு கூடுதல் கட்டணங்கள்

ரூ. 1133 (ஸோன் C -> A) ஸோன் அப்கிரேடு கூடுதல் கட்டணங்கள்

NA

10% இணை கட்டணங்களைச் சேமிக்கவும்

20% இணை கட்டணங்களைச் சேமிக்கவும்

 

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்களின் ஸோன் பேஸ்டு விலை நிர்ணயத்திற்கு பின்வரும் விவரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:

பாலிசிதாரரின் குடியிருப்பில் மாற்றம் - நீங்கள் மீரட்டில் வசிப்பவர் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் வேலையின் காரணமாக நீங்கள் மும்பைக்கு இடம் மாற வேண்டும். எனவே, நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க திட்டமிட்டால், ஸோன் அப்கிரேடு இன்சூரன்ஸை பெற்று, உங்கள் ஸோனை மீரட்டில் இருந்து மும்பைக்கு மேம்படுத்தலாம்.

மீரட்டை விட மும்பையில் (ஸோன் A நகரம்) சிகிச்சை செலவுகள் அதிகம் என்பதால், இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் பிரீமியம் கட்டணத்தை அதற்கேற்ப மாற்றி அமைக்கும். மேலும் நீங்கள் அதிக பிரீமியத்தை செலுத்த வேண்டியிருக்கும்.

மறுபுறம், நீங்கள் B அல்லது C ஸோனை சேர்ந்த நகரத்தில் வசிக்கிறீர்கள், ஆனால் உங்கள் சிகிச்சையை A ஸோன் நகரங்களில் (சிறந்த மருத்துவமனைகள் மற்றும் வசதிகள் காரணமாக) செய்ய விரும்பினால், உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உடன் ஸோன் அப்கிரேடு பாதுகாப்பை நீங்கள் பெற வேண்டும்.

மேம்பட்ட சிகிச்சை பிரிவு - பாலிசிதாரர் ஸோன் C நகரத்திலிருந்து ஸோன் B அல்லது ஸோன் A நகரத்திற்கு மாறும்போது அவர்களின் பாலிசி பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் சில இன்சூரன்ஸ் பாலிசிக்கள் உள்ளன.

ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இன்சூரன்ஸ் வழங்குநர் பெரும்பாலும் இணை பணம் செலுத்தும் முறையை விதிக்கிறது. இதில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்யப்படும் செலவுகளில் ஒரு பகுதியைச் செலுத்த வேண்டியது வரும்.

 

இதுபற்றி மேலும் அறிய:

ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுக்கு மேம்படுத்துவது எப்படி?

ஸோன் A அல்லது ஸோன் B, எது சிறந்தது?

ஸோன் சார்ந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எவ்வாறு உதவுகிறது?

ஸோன் பேஸ்டு பாலிசியை வாங்குவது நல்ல யோசனையா?

ஸோன் பேஸ்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்