பிரெஞ்சு பன்னாட்டு வாகன உற்பத்தியாளரான ரெனால்ட் 2021 பிப்ரவரியில் கிகர் என்ற அட்டகாசமான வடிவமைப்பு கொண்ட எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. கிகர் கார் கஸ்டமருக்குப் பவர் மற்றும் வசதியின் சரியான சமநிலையை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தது. அறிமுகமானத்திலிருந்து, பிரெஞ்சு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சுமார் 3226 கிகர் மாடல்களை விற்றுள்ளார். விற்பனைக்கான இத்தகைய புள்ளிவிவரங்கள் காரணமாக, கிகர் அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் 5 ஆவது காராக இடம்பெற்று சாதனப்படைத்துள்ளது.
என்னதான் உலகத் தரம் வாய்ந்த அம்சங்கள் நிறைந்திருந்தாலும், மற்ற கார்களைப் போலவே கிகர் காரும் எதிர்பாராத விபத்துகளுக்கு ஆளாக நேரும். எனவே, இந்த மாடலை வாங்க திட்டமிடும் நபர்கள் நிதி அழுத்தத்தைத் தவிர்க்க ரெனால்ட் கிகர் கார் இன்சூரன்ஸைப் பெறுவது பாதுகாப்பானது.
மேலும், மோட்டார் வெஹிக்கல்கள் ஆக்ட் 1988 ஒவ்வொரு இந்திய வாகன உரிமையாளருக்கும் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தப் பாலிசியின் கீழ், எதிர்பாராமல் ஏற்படும் தேர்டு பார்ட்டி டேமேஜ் அல்லது காயத்திற்கான நிதி பாதுகாப்பு ஒருவருக்கு கிடைக்கும் என்பது நிச்சியம்.
சிறந்த நிதி பாதுகாப்பிற்காகக் கார் உரிமையாளர்கள் காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி குறித்தும் அறிந்துகொள்ளலாம். காம்ப்ரிஹென்சிவ் பாலிசி என்பது தேர்டு பார்ட்டி மற்றும் சொந்த சேதத்திற்கான செலவுகள் என இரண்டையும் கவர் செய்யும்.
ரெனால்ட் கைகருக்குக் குறைந்த விலை பிரீமியத்தில் சிரமமில்லாத கார் இன்சூரன்ஸை வழங்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. டிஜிட் நிறுவனமும் அத்தகைய இன்சூரன்ஸ் வழங்குநர்களில் ஒன்றாகும்.
பின்வரும் பிரிவில், கைகரின் சில அம்சங்கள், வெவ்வேறு வேரியண்ட்டுகளின் விலைகள், இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் முக்கியத்துவம் மற்றும் டிஜிட் வழங்கும் நன்மைகள் பற்றிய சுருக்கமான விவாதத்தை நீங்கள் காணலாம்.