1899 இல் நிறுவப்பட்டது, ரெனால்ட் குழுமம் ஒரு பிரெஞ்சு பன்னாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும். சமீப காலங்களில் கார்கள் மற்றும் வேன்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அது வரை லாரிகள், டாங்கிகள், டிராக்டர்கள், விமான என்ஜின்கள் மற்றும் ஆட்டோரயில் வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, உற்பத்தி அளவின் அடிப்படையில் இது உலகின் ஒன்பதாவது பெரிய வாகன உற்பத்தியாளராக ஆனது.
மேலும், ரெனால்ட் கார்கள் ரேலியிங், ஃபார்முலா 1 மற்றும் ஃபார்முலா ஈ போன்ற மோட்டார்ஸ்போர்ட் நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றன. டிசம்பர் 2019 இல் உலகம் முழுவதும் 2,73,000 யூனிட் மின்சார வாகனங்களை விற்பனை செய்ததற்காக இந்நிறுவனம் அறியப்படுகிறது.
இந்த பன்னாட்டு நிறுவனமான ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனம் அக்டோபர் 2005 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக நான்கு ரெனால்ட் கார் மாடல்களைக் கொண்டு வந்துள்ளது. சென்னையில் உற்பத்தி வசதி கொண்ட இந்நிறுவனம், ஆண்டுக்கு 4,80,000 யூனிட் ரெனால்ட் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரின் இந்திய துணை நிறுவனம் இந்தியா முழுவதும் 89,000 யூனிட் ரெனால்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. எனவே, இந்த பிராண்டின் கார் மாடல்களுக்கு இந்திய மோட்டாரிஸ்டுகளிடையே மவுசு உள்ளது தெளிவாகிறது.
நீங்கள் ரெனால்ட் கார்களில் ஒன்றை வைத்திருந்தால், ரெனால்ட் கார் இன்சூரன்ஸைப் பெறுவது அல்லது ரீனியூவல் செய்வது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும். விபத்து அல்லது பிற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் உங்கள் காருக்கு டேமேஜ் ஏற்பட்டால், கார் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது செலவுகலை எளிதாக்குகிறது. முறையான இன்சூரன்ஸ் இல்லாவிடில், ரிப்பேர் செலவுகள் அனைத்திற்கும் உங்கள் பாக்கெட்டில் இருந்து தான் கொடுக்க வேண்டும்.
கூடுதலாக, மோட்டார் வெஹிக்கல் ஆக்ட், 1988 கடுமையான அபராதத்தைத் தவிர்க்க குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் திட்டத்தை வைத்திருப்பது அவசியமாக்குகிறது. எனவே, ரெனால்ட் நிறுவனத்திற்கான கார் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், நீங்கள் நிதி மற்றும் லீகல் லையபிளிட்டிகளைக் குறைக்கலாம்.
உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேர்டு பார்ட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் ரெனால்ட் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வழங்குகின்றன. முந்தைய பாலிசி, தேர்டு பார்ட்டி டேமேஜ்களை மட்டுமே கவர் செய்கிறது, அதேசமயம்; பிந்தையது தேர்டு பார்ட்டியுடன் சொந்த கார் டேமேஜ்களையும் கவர் செய்கிறது. தவிர, இன்சூரர்கள் உங்கள் இன்சூரன்ஸ் திட்டத்தில் பல சேவைப் பலன்களை வழங்குகிறார்கள். அதிகபட்ச நன்மைகளுடன் வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
எளிதாக முடிவெடுப்பதற்கு, சிக்கனமான ரெனால்ட் கார் இன்சூரன்ஸ் விலை, ஆட்-ஆன் நன்மைகள், தடையற்ற கிளைம் ப்ராசஸ் மற்றும் பிற நன்மைகளை கருத்தில் கொண்டு டிஜிட் இன்சூரன்ஸைப் பரிசீலிக்கலாம்.