ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ்

ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் விலையை உடனடியாக சரிபார்க்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

டிரிபர் இன்சூரன்ஸ்: டிரிபர் கார் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குங்கள் அல்லது ரீனியூவல் செய்யுங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களில் ஒன்றான ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2012 ஆம் ஆண்டு முதல் சந்தையில் அதனுடன் போட்டியிட்ட நிறுவனங்களை விட அதிக விருதுகளை வென்று சாதனைப்படைத்துள்ளது என்றால் மிகையாகாது. அதன் அசத்தலான கையாளுதல் வசதியும் கச்சிதமான வடிவமைப்பும், 2019 ஆம் ஆண்டு ரெனால்ட் டிரிபர் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பலரை வியந்துபார்க்க வைத்திருக்கிறது என்பது நிதர்சனமே.

மோட்டார் வெஹிக்கில்ஸ் ஆக்ட், 1988 இன் படி, ஒவ்வொரு கார் உரிமையாளரும் தங்கள் காரைச் சரியான தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் சொந்த மற்றும் தேர்டு பார்ட்டி கார் டேமேஜ்களினால் ஏற்படும் நிதி இழப்புகளை தவிர்க்க நீங்கள் ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதற்காக, ரெனால்ட் டிரிபர் காருக்கான இன்சூரன்ஸை வாங்க அல்லது ரீனியூவல் செய்ய டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரெனால்ட் டிரிபர் காரின் இன்சூரன்ஸ் விலை

ரெஜிஸ்ட்ரேஷன் தேதி பிரீமியம் (சொந்த டேமேஜ்களுக்கான பாலிசிக்கு மட்டும்)
ஆகஸ்ட்-2018 4,541
ஆகஸ்ட்-2020 5,541
ஆகஸ்ட்-2021 6,198

**பொறுப்புத் துறப்பு - ரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இ பிஎஸ்விஐ 999.0 க்கான பிரீமியம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை.

நகரம் - பெங்களூர், வாகன பதிவு மாதம் - ஆகஸ்ட், என்சிபி - 50%, ஆட்-ஆன்கள் இல்லை & ஐடிவி இருப்பதிலேயே மிகக் குறைவு. பிரீமியம் கணக்கீடு செப்டம்பர்-2021 இல் செய்யப்படுகிறது. மேலே உங்கள் வெஹிக்கல் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் இறுதி பிரீமியத்தை உறுதிசெய்யுங்கள்.

ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படுபவை யாவை?

டிஜிட்டின் ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் பிளான்கள்

தேர்டு-பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்தின் காரணமாக சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தீவிபத்து ஏற்படும் பட்சத்தில் சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

இயற்கை பேரிடரின் போது சொந்த காருக்கு ஏற்படும் டேமேஜ்கள்/இழப்புகள்

×

தேர்டு-பார்ட்டி வெஹிக்கலுக்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

தேர்டு-பார்ட்டி சொத்திற்கு ஏற்படும் டேமேஜ்கள்

×

பர்சனல் ஆக்சிடன்ட் கவர்

×

தேர்டு-பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/மரணம்

×

உங்கள் கார் திருடு போவது

×

டோர்ஸ்டெப் பிக்-அப் மற்றும் டிராப் வசதி

×

உங்கள் ஐடிவி-ஐ தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

எவ்வாறு கிளைம் செய்வது?

எங்களுடைய கார் இன்சூரன்ஸ் பிளானை வாங்கியவுடனோ ரீனியூவல் செய்தவுடனோ, நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம், ஏனெனில் எங்கள் 3-படி கிளைம் ப்ராஸஸ் முழுமையாக டிஜிட்டல்மயமானது!

ஸ்டெப் 1

1800-258-5956 என்ற எண்ணில் எங்களை அழைத்தால் போதுமானது. எந்த ஃபார்ம்களையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை!

ஸ்டெப் 2

நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் சுய ஆய்விற்கான லிங்க் அனுப்பப்படும். ஸ்டெப் பை ஸ்டெப் செயல்முறையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் டேமேஜ்களை ஸ்மார்ட் போன் மூலம் படம் பிடிக்க வேண்டும்.

Step 3

நீங்கள் விரும்பும் ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யுங்கள்: எங்கள் கேரேஜ் நெட்வொர்க்கின் மூலம் ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் என எது வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்ஸ் எவ்வளவு விரைவாக செட்டில் செய்யப்படும்? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும் போது உங்கள் மனதில் வர வேண்டிய முதல் கேள்வி இது தான். நீங்கள் அதை செய்வது பாராட்டுதலுக்குரியது! டிஜிட் கிளைமின் ரிப்போர்ட் கார்டுகளைப் படிக்கவும்

டிஜிட்டின் ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்

ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் விலையைத் தவிர, உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது வேறு பல காரணிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். டிஜிட் நிறுவனம் பல கூடுதல் பெனிஃபிட்களை வழங்குவதினால், இது ரெனால்ட் கார் உரிமையாளர்களை அசரவைக்கும் டீலாக அமைகிறது.

  • எளிமையான ஆன்லைன் செயல்முறை - உங்கள் டிரிபர் இன்சூரன்ஸை வாங்குவதற்கும் கிளைம் செய்வதற்கும் டிஜிட் ஒரு எளிமையான ஆன்லைன் செயல்முறையை வழங்குகிறது. உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் இருந்து நீங்கள் உங்களுக்குப் பிடித்த பாலிசியை தேர்ந்தெடுக்கலாம் அல்லது எளிதாக கிளைம் ஆவணங்களைப் பதிவேற்றலாம்.
  • மறைமுக கட்டணம் இல்லை - நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆராயும்போது டிஜிட் அதற்கான வெளிப்படை தன்மையை தெளிவாகப் புரியவவைக்கும். நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். அதேபோல, நீங்கள் செலுத்திய தொகைக்குத் தகுந்த பெனிஃபிட் மற்றும் இன்சூரன்ஸ் கவரேஜைப் பெறுவீர்கள்
  • இன்சூரன்ஸ் பாலிசிக்கான விருப்பத்தேர்வுகள் - டிஜிட் ஒரு காம்ப்ரிஹென்சிவ் பாலிசி மற்றும் அனைத்து அத்தியாவசிய பாலிசி விவரங்களுடன் தேர்டு-பார்ட்டி லையபிளிட்டி பாலிசி இரண்டையும் வழங்குகிறது. எனவே, உங்களுக்கு பொருந்தும் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
  • ஆட்-ஆன் பாலிசிகள் - டிஜிட் உங்களுக்குப் பின்வருவது போன்ற பல நற்பயன்களை அளிக்கும் ஆட்-ஆன் பாலிசிகளை வழங்குகிறது:
  • பரந்த கேரேஜ் நெட்வொர்க் - எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் சூழ்நிலையில் கேஷ்லெஸ் ரிப்பேர்களை வழங்க டிஜிட் நிறுவனம் இந்தியாவில் 6000+ கேரேஜ்களின் பரந்த நெட்வொர்க்குடன் செயல்படுகிறது.
  • பிக்அப் மற்றும் டிராப் வசதி - பிக்-அப் மற்றும் டிராப் வசதி - கூடுதலாக, நீங்கள் எப்போதாவது விபத்தை சந்தித்தால் டேமேஜ் ரிப்பேர் பார்ப்பதற்கான வீட்டு வாசலில் பிக்அப் மற்றும் டிராப் வசதிகளை டிஜிட்டின் கேரேஜ்கள் வழங்குகின்றன.
  • உடனடி கிளைம் செட்டில்மென்ட் - டிஜிட் உங்களுக்கு எக்ஸப்ஷனல் கிளைம் செட்டில்மெண்ட் சேவைகளை வழங்குகிறது. அதன் ஸ்மார்ட்போன்-இயக்கப்பட்ட சுய-ஆய்வு அம்சம் மூலம், உங்கள் கிளைம்களை ஒரு நொடியில் செட்டில் செய்துகொள்ளலாம்.
  • சிறந்த கஸ்டமர் சேவை - டிஜிட்டின் அசத்தலான 24×7 மணிநேர கஸ்டமர் சேவை மையம் 24 மணி நேரமும் உங்கள் ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் குறித்த தகவல்களை உங்களுக்கு உதவுகிறது.

டிஜிட் உடன், அதிக டிடெக்டிபள்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், சிறிய கிளம்களைத் தவிர்ப்பதன் மூலமும் உங்கள் பிரீமியத்தைக் குறைக்கலாம். இருப்பினும், குறைந்த பிரீமியங்களுக்காக கிடைக்கும் பெனிஃபிட்கள் மட்டுமே போதும் என்று நினைத்துவிடாமல் இருப்பது நல்லது. 

எனவே, ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் இன்னும் தெளிவாகத் தெரிந்துகொள்ள டிஜிட் போன்ற நம்பகமான இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸைப் பெறுவது ஏன் முக்கியமாகக் கருதப்படுகிறது?

ரெனால்ட் டிரிபர் இன்சூரன்ஸ் செலவை ஏற்றுக்கொள்வது என்பது பின்வரும் காரணங்களால் ஏற்படும் டேமேஜுக்கான ரிப்பேர்கள் மற்றும் கட்டணங்களுக்குச் செலவழிப்பதை விட மிகவும் எளிதாகும். ஒரு சிறந்த கார் இன்சூரன்ஸ் பாலிசி பின்வரும் பல பெனிஃபிட்களுடன் வருகிறது:

  • அபராதம்/தண்டனையிலிருந்து பாதுகாக்கிறது - மோட்டார் வெஹிக்கிலஸ் ஆக்ட், 1988 இன் படி, வாகனம் ஓட்டும்போது நீங்கள் தேர்டு பார்ட்டி கார் இன்சூரன்ஸை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் முதல் முறை தவறு செய்தால், 2,000 ரூபாயும், மீண்டும் தவறு செய்தால், 4,000 ரூபாயும் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இதனால் உங்கள் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படலாம், அல்லது நீங்கள் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடலாம்.
  • சொந்த டேமேஜ்களுக்கான பாதுகாப்பு - தீ விபத்து, திருட்டு, விபத்து அல்லது வெள்ளம் போன்ற நிகழ்வுகளில் உங்கள் கார் அதிக டேமேஜ்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலைகளில், ஒரு காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் பாலிசி உங்கள் காருக்கு ஏற்பட்ட டேமேஜ்களுக்கான செலவுகளையும் கவர் செய்யும்.
  • பர்சனல் ஆக்சிடன்ட் கவர் - ஐஆர்டிஏஐ (இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) இன் படி, பர்சனல் ஆக்சிடன்ட் கவர் வைத்திருப்பது கட்டாயமாகும். இது உரிமையாளரான ஓட்டுநருக்குக் கார் விபத்தால் ஏற்படும் ஊனம் அல்லது உயிரிழப்பிற்கான கவரேஜை வழங்குகிறது.
  • தேர்டு பார்ட்டி டேமேஜுக்கான பாதுகாப்பு - உங்கள் ரெனால்ட் டிரிபர் கார் மூலம் நீங்கள் எப்போதாவது விபத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், உங்கள் ரெனால்ட் டிரிபரினால் ஏற்பட்ட தேர்டு பார்ட்டி டேமேஜ்களுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் உங்கள் தேர்டு பார்ட்டி லையபிளிட்டி இன்சூரன்ஸைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, உங்கள் ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் வழக்கு தொடர்பான சிக்கல்களையும் கையாளும்.
  • நோ கிளைம் போனஸ் - அத்துடன், ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் ரீனியூவலின்போது உங்கள் பிரீமியம் தொகையைக் குறைப்பதற்காக ஒவ்வொரு கிளைம் இல்லாத ஆண்டிற்கும் இன்சூரன்ஸ் வழங்குநர் தள்ளுபடியை வழங்குகின்றன.

இந்த அட்டகாசமான பெனிஃபிட்களைப் பார்க்கும்போது, இப்போது ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் விலையைச் செலுத்துவதும், டேமேஜுக்கு ஆகும் செலவுகளையும் அபாரதங்களையும் தவிர்ப்பது இப்போது மிகவும் எளிதாகத் தெரிகிறது.

இதனால், கார் இன்சூரன்ஸை ரீனியூவல் செய்வதற்கும் வாங்குவதற்கும் டிஜிட் உங்களுக்கான சிறந்த விருப்பத்தேர்வாக இருக்கும்.

ரெனால்ட் டிரிபர் குறித்து மேலும் அறிக

ரெனால்ட் டிரிபர் அதன் பல்வேறு பிரீமியம் அம்சங்களுக்காக ஆட்டோகார் இந்தியா விருதுகளில் ஆண்டின் சிறந்த குடும்ப காருக்கான விருதை வென்றது. இந்த கார் மாடல் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:

  • ரெனால்ட் டிரிபர் காரில் இருக்கும் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.
  • சில மாடல்களில் 5-ஸ்பீடு ஈஸி-ஆர் ஏஎம்டி உள்ளது, இது சௌகரியமான சிரமமற்ற டிரைவை உறுதி செய்கிறது.
  • ரெனால்ட் டிரிபர் ஸ்டைலான ஃப்ளெக்ஸ் வீல்கள், ஸ்பிளிட் ஈகிள் பீக் டெயில் விளக்குகள் மற்றும் 182 மிமீ ஹை கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அசத்தலான அம்சங்களுடன் வருகிறது.
  • ஃபியூவல் செயல்திறனைப் பொறுத்தவரை, லிட்டருக்கு 18.29-19 கிமீ மைலேஜ் தரும்.

ரெனால்ட் டிரிபருக்காக, நீங்கள் நான்கு முக்கிய வேரியண்ட்டுகளைத் தேர்வு செய்யலாம் - ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்இ மற்றும் ஆர்எக்ஸ்டி.

ரெனால்ட் கார்கள் அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த கையாளுதல் திறனுக்கு பிரசித்தி பெற்றது என்றாலும், உங்கள் காருக்கு டேமேஜ் ஏற்படும் எதிர்பாராத சூழ்நிலைகளையும் நீங்கள் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில், ஏற்பட்ட டேமேஜுக்கான செலவுகளைக் கவர் செய்யவும் நிதி அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசி உதவும்.

இதன் விளைவாக, ரெனால்ட் டிரிபருக்கான கார் இன்சூரன்ஸை ஒரு பொறுப்பான காப்பீட்டு வழங்குநரிடமிருந்து வாங்குவது அல்லது ரீனியூவல் செய்வது மிக முக்கியம் என்பது புரிகிறது.

ரெனால்ட் டிரிபர் - வேரியண்ட்கள் மற்றும் எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியண்ட்கள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தின் அடிப்படையில் மாறுபடலாம்)
RXE ₹5.50 லட்சம்
RXL ₹6.13 லட்சம்
RXL ஈசி-R AMT ₹6.63 லட்சம்
RXT ₹6.68 லட்சம்
RXT ஈசி-R AMT ₹7.18 லட்சம்
RXZ ₹7.28 லட்சம்
RXZ டியூவல் டோன் ₹7.45 லட்சம்
RXZ ஈசி-R AMT ₹7.78 லட்சம்
RXZ ஈசி-R AMT டியூவல் டோன் ₹7.95 லட்சம்

இந்தியாவில் ரெனால்ட் டிரிபர் கார் இன்சூரன்ஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரெனால்ட் கார் பாகங்கள் டிப்ரிஸியேஷனுக்கான (தேய்மானம்) செலவைத் தவிர்ப்பது எப்படி?

டிஜிட்டின் ஜீரோ டிப்ரிஸியேஷன் ஆட்-ஆன் பாலிசி மூலம் டேமேஜான ரெனால்ட் கார் பாகங்களுக்கான டிப்ரிஸியேஷன் செலவை நீங்கள் முழுமையாகப் பெற்று டிப்ரிஸியேஷன் செலவைத் தவிர்க்கலாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் எனது ரெனால்ட் டிரிபருக்கு ஏற்படும் தற்செயலான டேமேஜ்களை டிஜிட் கவர் செய்யுமா?

இல்லை, விபத்து ஏற்படும் சூழ்நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் டேமேஜ்களை டிஜிட் கவர் செய்யாது.