ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் 34.6% வயது வந்தோர் (அடல்ட்ஸ்) புகைபிடிப்பவர்களாகவும் மேலும் பலர் புகையிலையை வேறு வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறுகிறது. ஆனால் இன்சூரர்களின் கூற்றுப்படி, புகைபிடித்தல் அல்லது புகையிலை பயன்பாடு என்றால் என்ன?
ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் போது, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒருவரிடம் பொதுவாக இரண்டு முக்கியமான கேள்விகளைக் கேட்கின்றன.
- நீங்கள் புகைபிடிப்பவரா?
- கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் புகைபிடித்திர்களா?
சிகரெட், சுருட்டு, மூக்குப்பொடி அல்லது மெல்லும் புகையிலை உள்ளிட்ட எந்த வடிவத்திலும் புகையிலையை உட்கொள்ளும் எவரும் புகைப்பிடிப்பவர்களாவார்கள். மேலும், ஒருவர் வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் புகைபிடித்து, குறைந்தது ஆறு மாதங்களுக்கு அவ்வாறு செய்திருந்தால், அவர்கள் புகைபிடிப்பவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தினசரி புகையிலை நுகர்வை ஒரு குறிகாட்டியாக பார்ப்பதால், ஒரு நாளைக்கு 10 சிகரெட்டுகளுக்கு மேல் புகைப்பவர்கள் பொதுவாக தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களில் அதிக சுமையை எதிர்கொள்வார்கள்.