ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் இன்சூரன்ஸின் பிரீமியத்தை இப்போதே பார்க்கவும்

உங்கள் டிஜிட் பாலிசியை புதுப்பிக்கவும்

Third-party premium has changed from 1st June. Renew now

ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குதல் / புதுப்பித்தல்

உங்கள் முதல் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை தொட்டு பார்க்க ஆசையா?வருடங்களுக்கு முன்பு இருந்த த்ரோட்டாலின் சாரம்சம் இன்னும் இருக்கிறதா என்று தெரிந்துக்கொள்ள ஆசையா? 

அப்படியெனில், ராயல் என்ஃபீல்டு இந்தக்காலத்திலும் ஒரு துப்பாக்கியிலிருந்து வெளி தோட்டாவை போல உருவாக்கப்பட்டிருக்கிறதா, ஒரு வேளை அதை இன்சூரன்ஸ் பாலிசிகள் மூலம் புதுப்பிக்க வேண்டும் என்றால், அத்தகைய பாலிசிகள் வழங்கப்படும் நன்மைகள் யாவை என்பதை  கலந்துரையாடி தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.  

ராயல் என்ஃபீல்டு, ஒரு பிராண்டாக, இந்த உலகத்தில் அதிக நாட்களாக செயல்பட்டுவரும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் என்ற சாதாரண உண்மையை ஆணித்தனமாக பறைசாற்றுயிருக்கிறது. 1901 ஆம் ஆண்டு  அவற்றின் உற்பத்தியிலிருந்து துவங்கி, அவர்களது மாடல் புல்லட் இந்த உலகத்திலேயே நீண்ட நாள் உழைக்கும் மோட்டார் சைக்கிளாக தனித்து நிற்கிறது. 

அதன் வலிமையான டிசைனனுக்கு பெயர்போனது மட்டுமின்றி இது 4 ஸ்ட்ரோக் என்ஜினால் இயக்கப்படுகிறது, இந்த மாடல் 1931 ஆம் ஆண்டு உயிர் பெற்றது. ஆரம்பக்காலத்தில் புல்லட் 350 cc மற்றும் 500cc க்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பிந்தைய காலத்தில் அதாவது 1933 ஆம் ஆண்டு 250cc வகையும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் திடமான ரியர்-எண்ட் அதை நீண்ட கடினமான வால் போன்ற வடிவமைப்பை கொடுப்பதால் ரைடர் அமரும் இருக்கை சிறிது மேல் உயர்த்தி அமைக்கப்படவேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. பிரிட்டிஷ் ஆர்மி அவர்களது சேவையில் 350 cc வகையை அறிமுகப்படுத்தினர், அதை இரண்டாம் உலக போரில் உபயோகித்தது அவர்களுக்கு அளப்பெரிய வெற்றியை தந்தது. 

இருப்பினும், – என்ற பிரசித்தி பெற்ற பழமொழியிருக்கிறது. அதனால் தான் உங்கள் பைக் பல்வேறு நிதி சார்ந்த பொறுப்புகளிலிருந்து பாதுகாக்கப்படுகிறது என்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்தல் அவசியம், மேலும் நீங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவது என்பது அத்தியாவசியம். 

மேலும், மோட்டார் வாகன சட்டம் 1988 இன் படி பைக் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுவது கட்டாயமாகும். நீங்கள் தேர்ட் பார்ட்டி லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி இல்லாமல் வண்டி ஓட்டுவது தெரிய வந்தால், நீங்கள் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படுவீர்கள், மேலும் அதே குற்றத்தை மீண்டும் செய்தால் ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்படும். 

 

ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்படுவது யாவை?

நீங்கள் ஏன் டிஜிட்’இன் ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக்-ற்கான இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால், அதனால் உங்கள் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரின் போது டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டி வாகனத்திற்கு ஏற்படும் சேதம்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்களுக்கு சேதம்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டி நபருக்கு காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு போய் விடுதல்

×

உங்கள் ஐடிவி-யைத் தனிப்பயனாக்குங்கள்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்களுடன் கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்ட் பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸூக்குள்ள வேறுபாடுகளைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ராயல் என்ஃபீல்டு புல்லட்: பாரம்பரியத்திற்கான அறிமுகம்

இந்தியாவில், சுத்திந்திரம் கிடைத்த பின்னரும் கூட, ராயல் என்பீல்ட் மற்றும் அவற்றின் புல்லட் ஐக்கான்களாகவே திகழ்ந்தது. இந்தியன் பைக்கர்களின் மத்தியில் ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் பெருமையை உணர்த்த பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு: 

  • பெரும்பாலும், 21 ஆம் நூற்றாண்டின் ராயல் என்ஃபீல்டு புல்லட்களின் தற்போதைய என்ஜின், அதன் என்ஜின் திறனை பொறுத்து வழங்கும் மைலேஜ் 30 லிருந்து 40 kmpl க்குள் வேறுபாடும்.

  • இந்தியன் மோட்டார் சைக்கிள் விரும்பிகளிடத்தில் எப்போதுமே இந்த மாடலுக்கு சிறப்பு இடத்திலிருந்தது, அதுவே 1960 ஆம் ஆண்டுகளிலும் அதை தொடர்ந்து அதே நூற்றாண்டில் பத்து ஆண்டுகளுக்கு தனியாக பயணிக்கும் ஐக்கனாக உருவெடுத்தது. நாடு முழுவதும் இருக்கும் போலீஸ் படைகள் மற்றும் பாதுகாப்பு படைகள் இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரே மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்டு புல்லட், இதுவே அதன் வீர புகழாரத்திற்கும் அதன் மதிப்பிற்கும் காரணமாக திகழ்ந்தது.

  • நவீன தொழில்நுட்பத்தின் வருகையினால், ராயல் என்ஃபீல்டுக்கான தேவை தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, அதன் நிறுவனம் இந்த ஐகானை மறுசீரமைக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. நவீன புல்லட் அதன் முன்னோடிகளைப் போன்ற வடிவமைப்புடன் அதன் மெயின்பிரேமை கொண்டு பழையதைப் போலவே திகழ்கிறது. இருப்பினும், எடை குறைப்பு மற்றும் ட்வின்-ஸ்பார்க் மற்றும் அதனுடன் இணைந்த தொழில்நுட்பத்தின் அறிமுகம் ராயல் என்ஃபீல்டின் புல்லட்டில் புதிய ரத்தத்தை செலுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது

பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளுடன், புல்லட் ஒரு விலையுயர்ந்த இயந்திரமாகும், அதற்கு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மதிப்புடையது. அதனால்தான், விபத்தில் சேதமடைந்த புல்லட்டின் எந்தப் பகுதியையும் மாற்றுவது அல்லது சரிசெய்வது தொடர்பான செலவும் அதிகமாக இருக்கும்.

இதன் காரணத்தினாலேயே, இந்த பியூட்டியின் ஒனர்கள் அதன் புல்லட் இன்சூரன்ஸ் விலையை பார்த்து அதற்கு விரைவாக விண்ணப்பிக்க வேண்டும். 

இன்சூரன்ஸ் பாலிசியை பற்றி கேள்விப்பட்டதும் நமது மனதில் தோன்றும் முதல் விஷயம் நிதி பாதுகாப்பு பற்றிய பிரச்சனையே. இந்த கட்டுரையின் முழுவதையும் படித்தல் ஓனர்களுக்கு மிக அவசியம். டிஜிட்டிலிருந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸ் பாலிசியை விண்ணப்பிக்க சில முக்கியமான நன்மைகளை எடுத்துரைக்கிறது. 

 

டிஜிட்-ன் ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

இந்த மெஷின்களின் பாரம்பரியத்தை புரிந்துக்கொண்டதிலிருந்து, ஒவ்வொரு ஓனரும் அவர்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அவர்களது ரைடை பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. டிஜிட் இந்த ஆசையை புரிந்துக்கொள்கிறது மேலும் இத்தகைய டூ-வீலர்களின் அன்பையும் மதிக்கிறது. அதன் விளைவாக, டிஜிட்டிலிருந்து கிடைக்கும் புல்லட் இன்சூரன்சின் பயன்கள் பின்வருமாறு: 

 

இந்தியாவில் ஏராளமான நெட்வொர்க் கேரேஜ்கள் உள்ளன - ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒரு மோட்டார் சைக்கிள் மாடலாக தனித்து நிற்கிறது, இது நாடு முழுவதும் பயணம் மற்றும் பந்தயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொலைதூர பயணத்திற்கான மெஷினாக இருப்பதினால், விபத்துகளின் போது இயந்திர ரீதியான பேக்-அப் ஐ எடுத்துக்கொள்வது இன்றியமையாத தேவையாகும். உங்கள் பைக்கிற்கு ஏதேனும் தற்செயலான சேதம் ஏற்பட்டால், இந்தியா முழுவதும் இருக்கும் 1,000 க்கும் மேற்பட்ட கேரேஜ்களில் பணமில்லா பழுதுபார்க்கும் வசதிகளையும் டிஜிட் வழங்குகிறது.

ராயல் என்ஃபீல்டு இன்சூரன்ஸ் பாலிசியின் வகைகள் - டிஜிட் அறிமுகப்படுத்திய சில இன்சூரன்ஸ் பாலிசிகளும் இருக்கின்றன. கீழே கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து நீங்கள் உங்களது எந்த ராயல் என்ஃபீல்டு இன்சூரன்ஸ் பாலிசியை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்: 

  • தேர்டு -பார்ட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் - மோட்டார் வாகன சட்டம் 1988 இன் கீழ் ஒவ்வொரு மோட்டார் சைக்கிளும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவரை வைத்திருப்பது அத்தியாவசியம். ஒருவேளை விபத்து நேரிட்டால், இந்த பாலிசிகள் விபத்தில் ஈடுபட்டிருந்த தேர்டு பார்ட்டிக்கான சேதத்தை கவர் செய்கின்றன. இந்து ஒரு தனிநபருக்கு ஏற்படும் காயம், சொத்துஅல்லது வாகனத்திற்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றையும் அடக்கியுள்ளது. உங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்க்கு ஏற்படும் சேதத்திற்கு இது எந்தவிதமான இழப்பீட்டையும் வழங்குவதில்லை. 

  •  காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் - அதன் பெயரிலிருந்து புரிந்துக்கொண்டப்படி, இந்தக் கொள்கைகள் மூன்றாம் தரப்பினருக்கும் பைக்கிற்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குகின்றன. நீங்கள் இந்தக் கொள்கையைப் பயன்படுத்தினால், நாட்டில் கட்டாயமாக இருக்கும் வழக்கமான தேர்ட்-பார்ட்டி லையபிலிட்டி காப்பீட்டுடன் உங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்டிற்கு ஏதேனும் தற்செயலான சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டைப் பெறலாம். இந்த பாலிசி தீ, திருட்டு, இயற்கையினாலும், மனிதனாலும் ஏற்படும் பேரழிவுகளினால் விளையும் சேதங்களின் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது.

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவர்கள் புல்லட்டை வாங்கியவர்கள் அவர்களது ஒன் டேமேஜ் பைக் இன்சூரன்ஸை வாங்கலாம். இத்தகைய புல்லட் இன்சூரன்ஸ் பாலிசிகள் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசியின் தேர்ட் பயன்கள் மற்றும் பார்ட்டி லையபிலிட்டி சிறப்பு பயன்களை வழங்குகிறது. 

ஆன்லைனில் வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் - ஆன்லைனில் வாங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கான பயன்கள் மட்டுமின்றி, முதன்மையானது சௌகரியம், உடனடித்தன்மை மற்றும் ஒப்பிடுவதற்கு எளிமை. டிஜிட்டல் வழங்கும் பல்வேறு பாலிசிகளை ஒப்பிட்டு, சரியானதைத் தேர்ந்தெடுப்பது ஆன்லைனில் மிகவும் எளிதானது. கூடுதலாக, உங்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்கான காப்பீட்டையும் சில நிமிடங்களில் ஆன்லைனில் வாங்கலாம்.

நேரத்திற்கேற்ற டிஜிட்டல் கிளைம் செட்டில்மென்ட் செயல்முறை - பெரும்பான்மையான இன்சூரன்ஸ் கிளைம்களின் நீண்ட செயல்முறை போலில்லாமல், டிஜிட் விரைவான கிளைம் தாக்கல் செய்யும் முறையையும், எளிதான செட்டில்மெண்ட்டையும் வழங்குகிறது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் உதவியுடன் கிளைமை ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் சுய-மதிப்பாய்வுக்கான வசதி  நேரத்தை மிச்சப்படுத்துகிறது, டிஜிட் கிளைம் செட்டில்மென்ட் விகிதத்தின் அதிக விகிதம் கிளைம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதற்கான ஒரு அறிகுறியாகும். 

நோ கிளைம் போனஸ் பெனிஃபிட்ஸ் - உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் கிளைம் செய்யவில்லை என்றால், பாலிசி பிரீமியத்தைப் புதுப்பித்தவுடன் தள்ளுபடியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களில் டிஜிட் உம் ஒன்றாகும். நோ கிளைம் போனஸ் நன்மையின் கீழ், உங்கள் புதுப்பித்தல் பிரீமியத்தில் 50% NCB தள்ளுபடியினால்  சேர்ந்த பலன்களையும் பெறலாம். உங்கள் இன்சூரன்ஸ் வழங்குனரை டிஜிட்டிற்கு  மாற்றினால், புல்லட் காப்பீட்டின் இந்த பலனை நீங்கள் ஆன்லைனில் பெறலாம்.

24*7 மணி நேரமும் திறம் பட செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம் - டிஜிட் பிரீமியம் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது, இது கிளைம் தாக்கல் செய்ய 24X7 மணிநேரமும் இருக்கும். மேலும், வாடிக்கையாளர் சேவை தேசிய விடுமுறை நாட்களிலும் கிடைக்கும். உங்கள் புல்லட் பைக் இன்சூரன்ஸ் கிளைமை  தாக்கல் செய்யும் உதவிக்கு நீங்கள் ஆன்லைனில் உங்கள் கிளைமை தாக்கல் செய்யலாம் அல்லது இலவச எண்ணிற்கு அழைக்கலாம்.

தனிப்பயனாக்கப்பட்ட இன்சூர்ட் டிக்ளேர்ட் வேல்யூ  - ஐடிவி என்பது உங்கள் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டிற்கு இன்சூர் செய்யப்பட்ட மொத்த இழப்பு அல்லது திருட்டுக்கு கிடைக்கும் மொத்த தொகை. உங்கள் மோட்டார் சைக்கிள் விற்பனையாகும் விலையிலிருந்து தேய்மான தொகையை கழித்து கணக்கிடப்படுகிறது. டிஜிட் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் பெறுவதனால் இந்த தொகையை தனிப்பயனாக்கிக்கொள்ளலாம். உயர் IDV - ஐடிவியை தேர்வு செய்தல் அறிவுறுத்தப்படுகிறது, அப்படியெனில் ஒருவேளை விபத்துக்குள்ளாகும் போது அனைத்து செலவுகளையும் இதனால் காப்பீடு செய்யமுடியும். 

ஏராளமான ஆட்-ஆன் கவர்ஸ் - இது புல்லட்டிற்கு எந்த வித தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸையும் வழக்காததால், நீங்கள் ஒருவேளை காம்ப்ரிஹென்சிவ் காப்பீட்டை வாங்கினால், நீங்கள் பல்வேறு ஆட்-ஆன்களையும் அணுகலாம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஆட்-ஆன்ஸ் மற்றும் அவற்றை பெறுவதன் மூலம் எந்த விபத்தானாலும் உங்கள் புல்லட் நிதிரீதியாக பாதுகாக்கப்படுகிறது இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. 

  • இன்வாய்ஸ் இன்சூரன்ஸ் காப்பீட்டிற்கான ரிட்டர்ன்

  • ஜீரோ டிப்ரிஷியேஷன் கவர் 

  • பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் 

  • என்ஜின் மற்றும் கியர் புரட்டக்ஷன் பாலிசி 

  • கன்ஸ்யூமபில் கவர் 

நீங்கள் வெவ்வேறு வகையான காப்பீடுகளை  பரிசீலித்து உங்கள் புல்லட் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 

டூ-வீலர் விரும்பிகளின் பேஷனை மனமாற பாராட்டுகிறோம், டிஜிட் பெருமையுடன் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்கள் பைக்கை முழுவதுமாக பாதுகாக்கும்.

ராயல் என்பீல்டு புல்லட் - வகைகள் & எக்ஸ்-ஷோரூம் விலை

வகைகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்தை பொறுத்து வேறுபடலாம்)
புல்லட் 350 (ஏபிஎஸ்) ABS, 40 Kmpl, 346 cc ₹ 121,381
புல்லட் 350 ES(இஎஸ்) ABS(ஏபிஎஸ்), 40 Kmpl, 346 cc ₹ 135,613
புல்லட் 500 ABS(ஏபிஎஸ்), 30 Kmpl, 499 cc ₹ 175,180

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் இன்சூரன்ஸ் பற்றி கேட்கப்படும் கேள்விகள்

நான் ஆன்லைனில் இன்சூரன்ஸை வாங்கினால் எப்படி எனது மோட்டார் பைக் சுய மதிப்பாய்வு செய்யப்படும்.

நீங்கள் முந்தைய இன்சூரன்ஸ் முடிவதற்கு முன் எவ்வளவு விரைவாக புதிய இன்சூரன்ஸிற்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் எந்த மதிப்பாய்வும் இருக்காது.

பைக் இன்சூரன்ஸை விண்ணப்பிப்பதற்கான தேவையான விவரங்கள் யாவை?

பைக் இன்சூரன்ஸிற்கு தேவையான சில விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • பைக் ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் சேஸிஸ் எண் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட  தேதி.

  • வாங்கிய இடம் மற்றும் தேதி.

  • முந்தைய பாலிசி விவரங்கள் (ஒருவேளை நீங்கள் புதுப்பித்தால்)

  • NCB - என் சி பி விவரங்கள் (உங்களிடம் கடந்த காலத்தில் NCB என் சி பி ஏதேனும் இருந்தால்)

  • பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உட்பட உங்கள் தனிப்பட்ட விவரங்கள்.

என்னால் எனது தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி கவரை காம்ப்ரிஹென்சிவ் கவராக மேம்படுத்திக்கொள்ள முடியுமா?

ஆம், நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கும் போது உங்கள் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி கவரை மேம்படுத்தலாம்