1955-ல் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் நிறுவனமே யமஹா நிறுவனம் ஆகும். அதன் தலைமையகத்தை நீங்கள் ஜப்பானின் ஷிசுவோகாவில் காணலாம். இந்தியாவில், யமஹா 1985 இல் ஒரு கூட்டு முயற்சியாக செயல்படத் தொடங்கியது. இன்று, இந்நிறுவனம் நாட்டில் ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் மூன்று உற்பத்தி ஆலைகளை இயக்குகிறது.
யமஹாவின் வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறையே அதன் வெற்றிக்கு முதன்மைக் காரணம். நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட டீலர்களைக் கொண்டு, யமஹா வாடிக்கையாளர்கள் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சூப்பர் பைக்குகள், ஸ்ட்ரீட் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
இந்தோயாவில் கிடைக்கும் பிரசித்தி பெற்ற சில யமஹா மாடல் பின்வருமாறு
யமஹாவில் பிரீமியம், விலையுயர்ந்த பைக்குகள் மற்றும் அதே நேரத்தில் மிகவும் குறைந்த விலையிலான பைக்குகளும் அடங்கும். பைக்கின் விலையைப் பொருட்படுத்தாமல், சரியான யமஹா பைக் இன்சூரன்ஸ் பிளானைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.
இது போன்ற பிளான், சாலை விபத்துகளின் போது உங்கள் வாகனம் அல்லது மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் சேதத்தால் ஏற்படும் நிதி சம்பந்தமாக எழக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
யமஹா பைக்ஸ் இந்தியாவில் ஏன் இவ்வளோ பிரபலமாக இருக்கிறது?
யமஹா பைக்குகளால் நாட்டின் தலைசிறந்த இடங்களில் ஒன்றைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததற்கான முதன்மை காரணங்கள் பின்வருமாறு.
பல்வேறு வகை தயாரிப்புகள் - பல நிறுவனங்களைப் போலல்லாமல், யமஹா அரிதான பைக்குகள் மற்றும் வழக்கமான ரைடர்கள் என அனைத்தையும் வழங்குகிறது. இதுபோன்ற பல்வேறு வகையான வாகனங்கள் வழங்கப்படுவதால், விலைகளும் கணிசமாக வேறுபடும். உங்கள் ஆர்வம், பட்ஜெட் மற்றும் தேவைகளைப் பொறுத்து, உங்களுக்கு மிகவும் பொருத்தமான பைக் அல்லது ஸ்கூட்டரை நீங்கள் வாங்கலாம்.
செயல்திறன் சார்ந்த பைக்குகள் - யமஹாவின் ஒவ்வொரு பைக்கும் உத்தரவாதத்துடன் சிறந்த செயல்திறன் கொண்டதாக வருகிறது. எஞ்சினின் கன அளவு, உபயோகப்படுத்தும் முறை, சஸ்பென்ஷன் மற்றும் வாகனத்தின் பிற முக்கிய பாகங்கள் சிறந்த சவாரி அனுபவத்தை வழங்கும் அதே நேரத்தில் இது நீடித்திருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உயர்ந்த வாடிக்கையாளர் சேவை - யமஹா ஒரு தகுதியான நற்பெயரைக் கொண்ட உலகளாவிய பிராண்ட் நிறுவனம். எனவே, சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்குகிறது. சிறிய கேள்விகளைத் தீர்ப்பதில் இருந்து பைக்கைப் பற்றி மேலும் அறிய உங்களுக்கு உதவுவது வரை, யமஹாவின் வாடிக்கையாளர் சேவைகள் உங்களை நீங்கள் உலகெங்கும் இருக்கும் யமஹா குடும்பத்தில் மதிப்புமிக்க உறுப்பினராக இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
யமஹா பைக்குகள் இந்திய மக்களுக்கு மிகவும் விரும்பத்தக்கவை என்பதை இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அத்தகைய மதிப்புமிக்க உடைமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் பைக் (மற்றும் அதில் உங்கள் முதலீடு) நீங்கள் இன்சூரன்ஸ் கவரை வாங்கினால் மட்டுமே உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறது.