டாக்டர் பிரிஜ்மோகன் லால் முஞ்சல் ஜி யால் 1984 இல் நிறுவப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் முதலில் ஹீரோ ஹோண்டா என்று அழைக்கப்பட்டது. புது தில்லியில் அமைந்துள்ள தன் தலைமையகத்துடன் இணைந்து இந்த நிறுவனம் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நாட்டின் முக்கிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இன்று, ஹீரோ மோட்டோகார்ப் உலகின் மிகப்பெரிய டூ-வீலர் வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்படுகிறது.
இந்தியாவில், இந்த நிறுவனம் டூ-வீலர் மார்க்கெட்டில் 46% க்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கிறது.1980 களில் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வாகனங்கள் அவற்றின் எரிபொருள் திறன் காரணமாக பெருமளவில் பிரபலமடைந்தன. மேலும், இதன் குறைந்த விலையினால் பைக் அல்லது ஸ்கூட்டரை பெற எண்ணற்ற இந்தியர்கள் ஹீரோவின் டீலர்ஷிப்களின் கடை வாசலுக்கு முன்பு வரிசைக்கட்டி நின்றது வரலாற்றை புரட்டிப்போட்டது.
2010 ஆம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம் ஹீரோவுடனான கூட்டு முயற்சியில் இருந்து வெளியேற முடிவு செய்தது. பிறகு ஹோண்டாவுக்கு சொந்தமான பங்குகளை வாங்கி அதன் சொந்த துணை நிறுவனத்தை நிறுவ முடிவு செய்தது. இவ்வாறு ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் பயணம் தொடங்கியது.
இன்று, சில பிரபலமான ஹீரோ பைக்குகள் பின்வருமாறு:
.மேலும் பல!
பல வருட கடின முயற்சியால், ஹீரோ நிறுவனத்தால் இந்தியர்கள் நம்பக்கூடிய ஒரு நம்பகமான பிராண்டாக மாற முடிந்தது.குறைந்த விலை மற்றும் உயர்தர சேவைகளுடன், ஹீரோவின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான ஏதோ ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஹீரோ பைக்குகளை எது இவ்வளவு பிரபலாமாக்குகிறது?
மக்கள் மத்தியில் ஹீரோவினால் தொடர்ந்து அதன் பிரசித்தியை நிலைநிறுத்த முடிந்தது ஏன் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்த காரணங்களில் சிலவற்றைப் பாருங்கள்-
எந்த நிறுவனத்திற்கும் குறை கூற முடியாத அளவு சேவை செய்யும் வாடிக்கையாளர் சேவை என்பது விரும்பத்தக்க பண்பு. ஹீரோ நிறுவனம் உயர்ந்த விற்பனை செய்வதில் மட்டும் முன்னோடியல்ல வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பின்னர் வழங்கக்கூடிய சேவையை வழங்கவதிலும் இந்தியாவில் இருக்கும் மற்ற டூ-வீலர் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது.
அவர்கள் புராடக்ட் போர்ட்ஃபோலியோவில் உள்ள பெரிய மாறுபாடு அவர்களின் மகத்தான வளர்ச்சிக்கு மற்றொரு காரணம். பல்வேறு பொருளாதார பின்னணியிலிருக்கும் நுகர்வோரினாலும் அவரவர் தேவை மற்றும் செலவு திறனுக்கு ஏற்ப புராடக்ட்டை வாங்க முடியும்.
இறுதியாக, பல ஆண்டுகளாக தன் தரத்தில் சிறுதுளிக்கூட மாற்றமின்றி அப்படியே வைத்திருக்க முடிந்த சில நிறுவனங்களில் ஹீரோவும் ஒன்றாகும். நீங்கள் அவர்களின் பைக்குகளில் ஒன்றை வாங்கும்போது, அதன் ஆன்-ரோட் செயல்திறன் மற்றும் ஆயுள் பற்றி நீங்கள் உறுதியாக நம்பலாம்.
இந்த பிராண்ட் மகத்தான புகழுக்கு வழிவகுத்ததற்கு மேற்கூறிய காரணங்களும் சில என்றாலும், ஹீரோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் பேராதரவு தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது பயனுள்ள அம்சம் நிறைந்த அதன் வாகனங்கள் தான்.
ஹீரோ டூ-வீலர்களில் நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய அம்சங்கள்
உங்கள் பட்ஜட்டை பொருட்படுத்தாது, ஹீரோவின் பரந்த அளவிலான தயாரிப்புகள் உங்கள் தேவைகளை செயல்திறனுடன் பூர்த்தி செய்யும். இந்த நிறுவனமானது தான் தயாரிக்கும் வாகனங்களில் வழங்கும் அம்சங்களில் எந்தவித சமரசமும் செய்யவில்லை.
சிறப்பு அம்சங்கள் உயர்-ரக ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு மட்டுமே என்று நினைக்கிறீர்களா? சரி, மீண்டும் யோசிப்போம்..
எல்லா ஹீரோ டூ-வீலர்களுக்கும் இருக்கும் சில பொதுவான அம்சங்கள்:
- நம்பகத் தன்மை - இந்திய மார்க்கெட் என்று வரும் போது, மைலேஜ் மற்றும் பைக்கின் இன்ஜின் தரம் இரண்டும் முக்கிய காரணிகளாகும். ஸ்ப்ளெண்டர் மற்றும் பேஷன் மாடல்களில் ஆன்-ரோட் மைலேஜ்ஜில் கவனம் அளிக்கப்படுவதன் மூலம், உரிமையாளருக்கு ஆகும் எரிபொருள் செலவையும் ஹீரோவின் பைக்குகள் குறைகின்றன.
- நீடித்து உழைக்கும் தன்மை - பெரும்பாலான பொது மக்கள் பைக்குகளை வாங்க பணத்தை சேமிக்க வேண்டும். எனவே, வாங்கிய பிறகு வாகனத்திற்கு ஏற்படும் எந்த சேதமும் பெரும்பாலான வாங்குபவர்களுக்கு பேரழிவு தரும் அடியாக இருக்கலாம். ஹீரோ விலை குறைவாக இருந்தாலும் அதன் பைக் பாகங்களின் தரத்தில் சமரசம் செய்வதில்லை. இது பேரழிவுக்கான சேதத்திற்கு வழிவகுக்காமல் சிறிய மோதல் அல்லது விபத்துக்களை எளிதாக சரிசெய்யக்கூடிய உறுதியான வடிவமைப்புகளுக்கு வழிவகை செய்கிறது.
- புராடக்ட் வகை- ஹீரோ அதன் புராடக்ட்களுக்கான ஒரு குறிப்பிட்ட பொருளாதார வர்க்கத்தை பொருந்த செய்வதில்லை. மாறாக, ஆரம்பத்திலிருந்தே, நிறுவனம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை குறைந்த விலையில் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் தங்கள் வாகனங்களின் பிரீமியம் அல்லது ஆடம்பர வாகன வகைகளை வழங்கும் போது, நிறுவனம் கண்டிப்பாக 'அனைவராலும் செலுத்தக்கூடிய' விலை கொள்கையைப் பின்பற்றுகிறது.
- தொழில்நுட்ப அதிசயங்கள் - இந்நிறுவனத்தின் வாகனங்களில் புதிய தொழில்நுட்பத்தை இணைக்கும் போது நிறுவனம் பின்தங்கியிருக்காது. உதாரணமாக, ஹீரோ சமீபத்தில் வெளியிட்ட பிரீமியம் ரேஞ்ச் ஸ்போர்ட்ஸ் பைக் XTREM 200 S. மற்றொரு சுவாரஸ்யமான புராடக்ட் XF3R ஆகும், இதன் வடிவமைப்பு பிரபல வீடியோ கேம் ஸ்ட்ரீட் ஃபைட்டரின் கருத்தியலின் அடிப்படையாகக் கொண்டது.
இருப்பினும், இந்திய சாலைகள் விபத்துக்கள் மற்றும் பிற அபாயங்களுக்கு பேர்போனவை. துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரிய ஹீரோ வாகனத்தைப் பாதுகாக்க மேலே குறிப்பிட்ட அம்சங்கள் எதுவும் போதுமானதாக இருக்காது.
அத்தகைய இக்கட்டான திடீர் செலவுகளில் இருந்து உங்கள் பணத்தை பாதுகாக்க விரும்பினால் ஹீரோ பைக் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.