எண்ணற்ற நிறுவனங்கள் இது போன்ற டூ-வீலர் இன்சூரன்ஸ்களை வழங்குவதால், புதிய பைக் உரிமையாளர்களுக்கு சிறந்த ஒரு இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது என்பது சற்று குழப்பமாக இருக்கும். பின்வரும் காரணங்களுக்காக, அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக அமைகிறது, அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
பாலிசிதாரர்களுக்கு என்சிபி (NCB) சலுகைகள் - கிளைம்-ஃப்ரீ ஆண்டை வைத்திருப்பவர்கள் தங்களின் இன்சூரன்ஸ் திட்டத்தின் பலன்களை மேம்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான நோ-கிளைம் போனஸ் சலுகைகளைப் பெறலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் புதுப்பித்தலின் போது, என்சிபி ஆனது குறைந்த பிரீமிய விலைக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு நீங்கள் சேமிக்கும் பணத்தைக் கொண்டு, உங்கள் பைக்கிற்கான கூடுதல் பாதுகாப்பை ஆட்-ஆன்கள் அல்லது ரைடர்ஸ் மூலமாகத் தேர்வு செய்து கொள்ளலாம்!
எண்ணற்ற நன்மை தரும் ஆட்-ஆன்கள் - ஹீரோ பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ்-ன் ஆட்-ஆன்களைப் பற்றி சொல்லப்போனால், அடிப்படை பாலிசிகளுடன் கூடுதல் கவரேஜ் கிடைக்காத பட்சத்த்தில், டிஜிட் போதுமான விருப்பங்களை வழங்குகிறது. அத்தகைய பாதுகாப்பை நீங்கள் தேர்வு செய்ய விரும்புகிறீர்களா என்பது உங்களுடை விருப்பம். டிஜிட்-ல் இருந்து கிடைக்கும் டூ-வீலர் ஆட்-ஆன்களின் முழுமையான பட்டியல் பின்வருமாறு:
- ஜீரோ டிப்ரிசியேஷன் கவர்
- என்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன்
- இன்வாய்ஸ் கவருக்கான ரிட்டர்ன்
- பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ்
- கன்ஸ்யூமபில்ஸ் கவர்
நமக்கு அனைத்து ஆட்-ஆன்களும் அவசியமில்லை என்றாலும், உங்கள் தனிப்பட்ட சூழ்நிலை மற்றும் எங்கெல்லாம் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் பேஷன் ப்ரோ-க்கு எந்த வகையான கூடுதல் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்க பல இன்சூரன்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன - டிஜிட் மூலம் பல்வேறு பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் வகைகளில் இருந்து உங்களுக்கேற்ற ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். வகைகள் பின்வருமாறு -
- தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இதில் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களை காப்பீடு செய்ய இயலாது. இருப்பினும், இந்த இன்சூரன்ஸ் பாலிசியானது உங்கள் டூ-வீலர் வாகனத்தால் ஏதேனும் மூன்றாம் தரப்பு வாகனம், சொத்து அல்லது தனிநபருக்கு ஏற்படும் சேதங்களால் உங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுசெய்கிறது.
- காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – இந்த இன்சூரன்ஸ் பாலிசி ஆனது மூன்றாம் தரப்பு லையபிலிட்டி மற்றும் சுய சேதத்திற்கும் காப்பீடு வழங்குகிறது. எனவே, உங்கள் பேஷன் ப்ரோவினால் ஏற்பட்ட விபத்துக்களினால் விளைந்த சேதங்களை நீங்கள் கிளைம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, இதன் மூலம், உங்கள் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டாலோ அல்லது வெள்ளம், சூறாவளி, நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படக் கூடிய பேரழிவுகள் போன்றவற்றால் டூ-வீலருக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு இந்த பாலிசிகள் காப்பீடை வழங்குகிறது.
நீங்கள் ‘சொந்த சேதத்தை' உள்ளடக்கிய தனி பாலிசியைப் பெறலாம். இந்த பாலிசி மூன்றாம் தரப்புப் லையபிலிட்டிகளை உள்ளடக்கவில்லை என்றாலும், பைக்கும், அதன் உரிமையாளரும் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு பெறுவது உறுதியாகும். இருப்பினும், அத்தகைய பாலிசியைப் பெற, உங்கள் பேஷன் ப்ரோ செப்டம்பர் 2018-க்கு முன்பு வாங்கியதாக இருக்கக்கூடாது. மேலும், சொந்த சேத இன்சூரன்ஸைப் பெறுவதற்குத் தகுதி பெற, உங்களிடம் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி இருக்க வேண்டும்.
உங்களுக்கு எந்த மாதிரியான பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் பிளான் தேவை என்று சிந்தியுங்கள். நீங்கள் விபத்துக்களுக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில், காம்ப்ரிஹென்சிவ் கவரைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்.
24 மணி நேர வாடிக்கையாளர் சேவை கிடைக்கும் - டிஜிட்-ன் மற்றொரு பிளஸ் பாயிண்ட் என்று சொன்னால், அது வாடிக்கையாளர் சேவைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே ஆகும். கஸ்டமர்களிடருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவே பிரத்தியேகமாக ஒரு குழு அமைத்துள்ளோம். எந்த சிக்கல்களாக இருந்தாலும் எங்கள் நிபுணர்கள் தீர்த்து வைப்பார்கள். அது மட்டும் அல்ல, கிளைம் செய்யும் நடைமுறையை முடிக்க வழிகாட்டவது போன்ற சிறு விஷயங்களுக்கு கூட உங்களுக்கு உதவுவார்கள். விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால், இது போன்ற அவசர நிலைகளை தாமதமின்றி திறம்பட கையாள டிஜிட் தயாராக உள்ளது.
எளிமையான ஆன்லைன் கிளைம் செட்டில்மென்ட் செயல்முறை - இன்சூரன்ஸ் கிளைம்களை கோரும் போது பாலிசிதாரர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சிக்கலான செயல்முறைகளில் இருந்து டிஜிட் காப்பாற்றுகிறது. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கப்படும் சுய-பரிசோதனை செயல்முறை என்ற அம்சத்தின் மூலம், கிளைம்களை கோருவது என்பது மிகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் தொந்தரவு இல்லாததாகவும் மாறியுள்ளது. மேலும் என்னவென்றால், இந்த முழு செயல்முறையையும் ஆன்லைனிலேயே முடிக்க முடியும், பேப்பர் வொர்க் சிரமம் உங்களுக்கு கண்டிப்பாக இருக்காது.
சௌகரியமாக ஐடிவி-ஐ (IDV) அதிகரிக்கலாம்/குறைக்கலாம்
வழங்கப்பட்ட ஐடிவி உங்களுக்கு திருப்தியாக இல்லை என்றால், டிஜிட்-ல், அதனை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். பைக்கை மொத்தமாக இழக்க நேர்ந்தால், அதிக ஐடிவி பெரிதும் உதவியாக இருக்கும். சேர்க்கப்பட்ட தொகையானது அந்த பைக்கிற்கு பதிலாக புதிய மாடல் பைக்கை மாற்றிக்கொள்ள உதவும், இதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தலாம். ஐடிவி-ன் அதிகரிப்பு உங்கள் பிரீமியத்தையும் அதிகரிக்க காரணமாக இருந்தாலும், பைக்கில் நீங்கள் செய்யும் உங்களது முதலீட்டை முழுமையாகப் பாதுகாக்க இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும்.
வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் எளிமையாகிவிட்டது - பேஷன் ப்ரோ இன்சூரன்ஸ் பாலிசியை டிஜிட்டிலிருந்து பெறுவது என்பது மிகவும் எளிமையானது. ஏனென்றால், எங்கள் ஆன்லைன் போர்டல் ஆனது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸின் பலன்களை உடனடியாகப் பெறும் வகையில் உள்ளது. எங்கள் இணையதளத்தைப் பார்வையிட்டு நீங்கள் விரும்பும் திட்டத்தைத் தேர்வு செய்து பைக்கைப் பற்றியத் தேவையான விவரங்களை நிரப்பி வருடாந்திர பிரீமியத்தை செலுத்தவும், அவ்வளவுதான்.
புதுப்பிக்கவும் இது போன்ற எளிமையான செயல்முறையை நீங்கள் எங்கள் போர்ட்டலில் பின்பற்றலாம்.
கேஷ்லெஸ் ரிப்பேர் செய்ய டிஜிட்-ன் நெட்வொர்க் கேரேஜுக்கு செல்லவும் - டிஜிட், இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்களுடன் தொடர்பை கொண்டுள்ளது. நீங்கள் எங்களிடம் பாலிசிதாரராக இருந்து, இந்த கேரேஜ்களில் ஒன்றில் பைக் ரிப்பேர் செய்ய விரும்பினால், உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் ஏதும் செலுத்தாமல் சேதங்களை சரிசெய்து கொள்ளலாம். ஏனென்றால், இதனை கேரேஜுக்கு டிஜிட் நேரடியாக திருப்பிச் செலுத்துவிடும். இதனால், நீங்கள் சொந்தமாக ஒரு ரூபாய் கூட செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.
இது போன்ற அம்சங்கள் மற்றும் பலவற்றுடன், டிஜிட்-ன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் சந்தையில் கிடைக்கும் மற்றவைகளைக் காட்டிலும் அதிக நன்மை அளிக்கிறது.