டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்டில் சேர இரண்டு வழிகள் உள்ளன. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகள் பற்றி கீழே கொடுத்துள்ளோம்.
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்டில் சேருவதற்கான ஆஃப்லைன் முறை
ஆஃப்லைன் முறை மூலம் இந்தத் திட்டத்திற்குப் பதிவு செய்ய, நீங்கள் இந்தப் படிகளைப் பின்பற்ற வேண்டும்:
படி 1: ஒய்.எஸ்.ஆர் நவாசகம் இணையதளத்தை https://navasakam2.apcfss.in/ இல் பார்வையிடவும்.
படி 2: மேலே உள்ள டேப்-இல் 'டவுன்லோடு' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: ‘ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கார்டு பெஃபோர்மா’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 4: திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் திறக்கப்படும். இந்தப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
படி 5: அடுத்து, படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
படி 6: அனைத்து ஆதார ஆவணங்களையும் சேகரித்து, படிவத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்கவும்.
படி 7: இந்த ஆவணங்களின் சரிபார்ப்புக்காக காத்திருக்கவும், அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர் ஹெல்த் கார்டு வழங்கப்படும்.
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்டில் சேருவதற்கான ஆன்லைன் முறை
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்கியஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றுவதற்கான படிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
படி 1: பதிவு செய்ய, நீங்கள் இரண்டு இணையதளங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடலாம்: ஒய்.எஸ்.ஆர் நவசகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கிராம வார்டு சசிவாலயம் போர்டல்.
படி 2: அடுத்து, உள்நுழைவு டேப்-ஐ கிளிக் செய்யவும். நீங்கள் உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
படி 3: இணையதளத்தில் உள்நுழைந்து, ‘ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கார்டு’ விண்ணப்பப் படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4: தேவையான விவரங்களை நிரப்பவும்.
படி 5: அடுத்து, தேவையான ஒவ்வொரு ஆவணத்தையும் பதிவேற்றவும்.
படி 6: கடைசியாக, விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்து, குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
ஆக மொத்தத்தில், ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்ட் ஆந்திரப் பிரதேச மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். மேலும், இந்த திட்டம் 2000 மருத்துவ நடைமுறைகளை கவர் செய்கிறது.
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ஆரோக்யஸ்ரீ ஹெல்த் கேர் டிரஸ்டின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், திட்டத்தில் சேர்வதற்கு முன்பே இருக்கும் நோய்களையும் இது கவர் செய்கிறது.