உங்கள் தினசரி போக்குவரத்துக்கு சிறந்த பட்ஜெட் - ஃப்ரெண்ட்லி டூ-வீலரை தேடுகிறீர்களா? டிவிஎஸ் ஜூபிடரின் சிறப்புகளை அறிவீர்களா? இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் ஏன் மிகவும் பிரபலமாக இருக்கிறது என்பதையும் டிவிஎஸ் ஜூபிடருக்கான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை என்பது பற்றிய அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தயாரித்திருக்கும் குறைந்த விலை ஸ்கூட்டர்களில் ஜூபிடரும் ஒன்றாகும்.1978-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டிவிஎஸ் இந்தியாவில் செயல்படும் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமாகும். மே 2019-இல், இந்நிறுவனம் 3 லட்சத்திற்கும் அதிகமான மொத்த விற்பனையை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.(1)
குறைந்த பட்ஜெட்டில் அதிகச் செயல்திறனைக் கொண்டுள்ளதால் டிவிஎஸ் தயாரித்த வாகனங்களிலேயே மிகவும் பிரபலமான வாகனமாக இருப்பது டிவிஎஸ் ஜுபிடர் தான். அக்டோபர் 2019 கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஜூபிடர் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 74,500 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்களை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ்-ஆல் விற்பனை செய்ய முடிந்தது.(2)
எனவே, இப்போது நீங்கள் டிவிஎஸ் ஜூபிடர் வாங்க முடிவு செய்துவிட்டிர்கள், இனி உங்கள் ஸ்கூட்டருக்கு விபத்து, தீ, இயற்கை பேரழிவு போன்றவகைகளினால் ஏற்படும் சேதங்களினால் உண்டாகும் இழப்புகளிலிருந்து உங்கள் நிதியை எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
எனவே, டிவிஎஸ் ஜூபிடர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது என்பது மேற்கூறிய சூழ்நிலைகளில் ஏற்படும் நிதி இழப்புகளைத் தடுப்பதற்கான அடுத்த படியாகும்.
மேலும், மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன்படி, குறைந்தபட்சம் தேர்டு பார்ட்டி லயபிலிட்டியின் படி டூ வீலர் இன்சூரன்ஸ் என்பது நன்மைபயக்குவது மட்டுமல்லாமல் அத்தியவசியமானதாகவும் இருக்கிறது. ஒருவேளை, நீங்கள் உங்கள் வாகனத்திற்கு முறையான காப்பீட்டை எடுக்கத் தவறிவிட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ரூ.2,000-லிருந்து ரூ.4,000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம். எனவே, நீங்கள் தவறாமல் இன்சூரன்ஸ் பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.