ஹெச்எஃப் டீலக்ஸ் வண்டிக்கு டிஜிட் இன்சூரன்ஸ் எடுப்பது ஏன் சரியானதொரு தேர்வு என்பதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சௌகரியமான விருப்பத் தேர்வுகள் – ஓட்டுநர்களின் பலவிதமான தேவைகளை கவனத்தில் கொண்டு டிஜிட் நிறுவனம் தன்னுடைய பாலிசிக்களை வடிவமைத்திருக்கிறது. தேவையற்ற கடப்பாடுகளை தவிர்ப்பதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் உரிமையாளர்கள் கீழ்க்கண்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) ஸ்கீம் – உங்கள் டூ-வீலரின் மூலம் ஏற்பட்ட தேர்டு-பார்ட்டி சேதங்களுக்கு இந்த திட்டம் பாதுகாப்பளிக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பு நேரடியாகவே உங்கள் இன்சூரரிடம் தங்களுக்குண்டான சேதங்களுக்கு இழப்பீடு கேட்கலாம்.
ஆயினும், தேர்டு-பார்ட்டி பாலிசி என்பது சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு காப்புறுதி அளிக்காது.
ஆகவே, பொருளாதார பாதுகாப்பு வேண்டி, தேர்டு-பார்ட்டி பாலிசிதாரர்கள் ஒரு ஸ்டாண்ட்அலோன் ஓன் பைக் டேமேஜ் கவரை வாங்கிக் கொள்ளலாம்.
காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) ஸ்கீம் – இது தேர்டு-பார்ட்டி மட்டுமல்லாமல், சொந்த பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கும் பாதுகாப்பு வழங்குகின்ற ஒரு முழுமையான பாலிசியாகும். அது மட்டுமின்றி, நீங்கள் வெள்ளம், நிலநடுக்கம், தீவிபத்து, திருட்டு மற்றும் பிற ஆபத்துகளின் போதும் காப்புறுதி பாதுகாப்பினை பெறலாம்.
ஆன்லைனிலேயே வாங்குகின்ற, புதுப்பிக்கும் வாய்ப்புகள் – டிஜிட் தங்களுடைய வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே பாலிசிக்களை வாங்கவும் அல்லது புதுப்பிக்கவும் வசதியாக 100% டிஜிட்டல்மயமான வாய்ப்பினை வழங்கியுள்ளது. ஆன்லைனில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இன்சூரன்ஸை புதுப்பிப்பதற்கு தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய கணக்குகளில் லாக்-இன் செய்ய வேண்டும். மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்குவதற்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
உடனடி கிளைம் செட்டில்மெண்ட் – டிஜிட்-இல், உங்களுடைய பெரும்பாலான கிளைம்கள் குறைந்தபட்ச நேரத்திலேயே செட்டில் செய்யப்படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். உடனடி செட்டில்மென்டிற்கு, டிஜிட் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக செய்யப்படும் சுய-ஆய்வு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட படங்களை நீங்கள் இந்த வழிமுறையில் சமர்ப்பித்து கிளைம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆட்-ஆன் கவர்களுடன் பாலிசி திருத்தங்கள் – கீழ்க்கண்ட ஆட்-ஆன் கவர்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் பாதுகாப்பினை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். டிஜிட் வழங்குபவை பின்வருமாறு-
o ஜீரோ டிப்ரிஸியேஷன் கவர்
o கன்ஸ்யூமபில் கவர்
o டயர் புரொட்டெக்ஷன்
o ரிடர்ன் டூ இன்வாய்ஸ் கவர் மற்றும் பல
ஐடிவி-ஐ (IDV) தனிப்பயனாக்கும் வசதி – ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸிற்கான உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸை மேலும் வலுவாக்குவதற்கு, உங்கள் இன்சுர்டு டெக்லேர்டு வேல்யூவினை அதிகப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கான வாய்ப்பினை டிஜிட் வழங்குகிறது. இந்த பெனிஃபிட்-ஐ நீங்கள் பெறுவதற்கு உங்களின் பிரீமியத்தை தக்கவாறு அமைத்துக் கொண்டாலே போதுமானது.
நாடு முழுவதிலும் உள்ள நெட்வொர்க் கேரேஜ்கள் – இந்தியா முழுவதிலும் 2900-க்கும் மேல் டிஜிட்-இன் நெட்வொர்க் பைக் கேரேஜ்கள் உள்ளன. கேஷ்லெஸ் ரிப்பேர்களை பெறுவதற்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு கேரேஜிற்கு செல்லவும்.
24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை – இன்சூரன்ஸ் சம்பந்தமான கேள்விகளுக்கு 1800 258 5956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். டிஜிட்-இன் வாடிக்கையாளர் சேவை வழங்குநர்கள் உங்களுக்கு உடனடியாக உதவிகளை செய்வதற்கு 24 மணி நேரமும் தயாராக இருக்கிறார்கள்.
மேற்கொண்டு, அநாவசியமான கிளைம்களை தவிர்ப்பதன் மூலமும், அதிகமான டிடக்டபிள்ஸை (கழிப்புத் தொகை) தேர்வு செய்வதன் மூலமும் உங்களின் பிரீமியத்தினை நீங்கள் குறைக்கலாம்.