ஹீரோ மேஸ்ட்ரோ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அதற்கு முன்பே நாட்டில் இருக்கும் ஸ்கூட்டர் வண்டிகளோடு அதனால் போட்டியிட முடிந்தது. ஹீரோ மற்றும் ஹோண்டா என்ற இரண்டு தனித்தனி நிறுவனங்களாக உருவாகிய பிறகு, லண்டனில் உள்ள O2 அரேனா என்ற இடத்தில் ஹீரோ மேஸ்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஹீரோ பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் தயாரித்த ஸ்கூட்டர் வகைகளில் மேஸ்ட்ரோ இரண்டாவது ஆகும். கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆகிய இரண்டும் மலிவான விலையில் கிடைத்த காரணத்தால் இது மக்களிடையே பிரபலமானது.
இந்த ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது கிமீ/லி மைலேஜ் வரை கொடுக்கும் திறன் வாய்ந்தது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிஎன்பிசி-டிவி18 (CNBC-TV18) ஓவர்டிரைவ் விருதுகளில், மேஸ்ட்ரோ எட்ஜ் அந்த ஆண்டின் சிறந்த ஸ்கூட்டருக்கான விருதை வென்றது. (1)
யூ.எஸ்.பி 3.0 (USB 3.0) சார்ஜிங் போர்ட் போன்ற அதி நவீன அம்சங்களைக் கொண்ட மேஸ்ட்ரோ விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.
அரசாங்க விதிமுறைகளை மனதில் வைத்து, மாசு உமிழ்வைக் குறைப்பதற்காக பிஎஸ்-VI (BS-VI) இணக்க என்ஜினுடன் கொண்ட மேஸ்ட்ரோ எட்ஜ் 125-ஐ ஹீரோ அறிமுகப்படுத்தியது.
2017 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்கள் பட்டியலில் ஹீரோ மேஸ்ட்ரோ மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதே ஆண்டில் ஜூலை மாதத்தில், ஹீரோ நிறுவனம் 40,000-க்கும் மேற்பட்ட மேஸ்ட்ரோ வண்டிகளை விற்று, சந்தையில் அதன் ஆதிக்கத்தை நிரூபித்தது. (2)
இது போன்ற பல பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் மேஸ்ட்ரோ பெற்றுள்ளது. சிறந்த செயல்திறன், அனைவராலும் வாங்கும் விலையில் கிடைக்கும் வண்டி ஆகியவற்றை அடிப்படையாக பார்க்கும் போது மேஸ்ட்ரோ சிறந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்திய சாலைகளில் ஓடும் மற்ற டூ-வீலர்களைப் போலவே, மேஸ்ட்ரோவும் விபத்து, திருட்டு மற்றும் பிற சேதங்களுக்கு உள்ளாகிறது.
எனவே, நீங்கள் ஹீரோ மேஸ்ட்ரோவை வாங்கினால் விபத்துகளிலிருந்து உங்களுக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஸ்கூட்டர் வாங்கும் போதே மேஸ்ட்ரோ இன்சூரன்ஸையும் அதோடு சேர்த்து வாங்குவதே இதற்கு சிறந்த வழி ஆகும்.
ஆனால், நீங்கள் பாலிசியை வாங்குவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து இன்சூரன்ஸ்களையும் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
பல வகையான டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை டூ-வீலர் உரிமையாளர்களுக்கு வழங்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் டிஜிட்-ம் ஒன்று ஆகும்.