ஹோண்டா டூ வீலர் வெஹிக்கல், பிரீமியம் பிரிவு மற்றும் குறைந்த இறுதி சந்தையை சேர்ந்தா இந்தியர்களிடையே சிறந்த விற்பனை வாகனமாக இருந்து வருகிறது. 'சிபி குடும்பத்திற்கு' அதன் புதிய வெளியீடு மோனோ டோன் மற்றும் டூயல் டோன் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. சிபி 350ஆர்எஸ் இன் சில சிறப்பம்சங்களைப் பற்றி விவாதிப்போம்.
சிபி 350ஆர்எஸ் பைக்கில் 350சிசி ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அத்தகைய சக்திவாய்ந்த மோட்டார் மென்மையான முடுக்கத்தையும் சவாரியையும் வழங்குகிறது என்றால் மிகையாகாது.
எளிதான சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹோண்டா டூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களிலோ அல்லது வழுக்கும் சாலைகளிலோ பிரேக்குகளைப் பயன்படுத்தினால், ஏபிஎஸ் சக்கரங்கள் பூட்ட்டிக்கொள்வதைத் தடுக்கும். இதனால், நீங்கள் பைக்கை உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம்.
சிபி 350ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் ஆனது ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (எச்எஸ்டிசி), டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மைலேஜ் இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் போன்ற அத்தியாவசிய தகவல்களை வழங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை காட்டுகிறது.
சிபி 350ஆர்எஸ் பைக்கை அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில், ஹோண்டா நிறுவனம் எல்இடி ஹெட்லைட்டைச் சுற்றி ஒரு வளையம், இருக்கைக்கு அடியில் எல்இடி டெயில் லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. மேலும், தட்டையான ஹேண்டில்பார் மற்றும் திடமான டெயில் பிரிவு அதன் ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கு காரணமாக அமைகிறது.