ஹோண்டா டியோ இன்சூரன்ஸ்

ஹோண்டா டியோ டூ வீலர் இன்சூரன்ஸின் ஆரம்ப விலை ₹714 மட்டுமே

Third-party premium has changed from 1st June. Renew now

source

உங்களுக்கு என்ன வாங்க வேண்டும் என்று தெரியவில்லையெனில் உங்கள் ஹோண்டா டியோவிற்கு டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது என்பது கடினமான பணியாக இருக்கலாம். எனவே, ஹோண்டா டியோ இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு முன்பு, நீங்கள் பாலிசியினால் நீங்கள் பெறக்கூடிய நன்மைகளின் பட்டியலை ஆராய்ந்திடுங்கள்!

ஹோண்டா மோட்டார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இன்றளவும் விற்பனையாகிவரும் பழைய ஸ்கூட்டர் மாதிரிகளில் ஹோண்டா டியோவும் ஒன்று. இந்த ஜப்பானீஸ் நிறுவனமானது, இந்தியாவில் சில பிரபலமான ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதன் மூலம் டூ வீலர் சந்தையில் அதற்கான இடத்தை தக்கவைத்துள்ளது, அதில் முதன்மை நிலையை அடைந்தவை டியோ மற்றும் ஆக்ட்டிவா டூ-வீலர்கள். 

ஹோண்டா டியோ லைன்அப்பின் முதல் மாதிரி 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இத்தகைய வாகனங்களுக்கு பெரியவிலான மார்க்கெட்கள் இருந்து வருகின்றன, இதனால் தான் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஹோண்டா டியோ மாதிரிகளை  போன்ற டூ-வீலர்கள் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஹோண்டா BS-VI டியோவின் கம்ப்ளையன்ட் வெர்ஷனை அரசாங்கத்தின் புதிய எமிஷன் கட்டுப்பாட்டு வழிகாட்டுதலுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

இப்போது, அத்தகைய அதிக விலை டூ-வீலர்களுக்கும் போதிய இன்சூரன்ஸ் கவரேஜ் எல்லா நேரத்திலும் தேவைப்படத்தான் செய்கிறது. 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இந்திய ரோடுகளில் பயணிக்கும் அத்தனை வாகனங்களும் குறைந்தபட்சம் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி கவரை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. 

ஆகவே, உரிமையாளர்கள் டியோ இன்சூரன்ஸை பெறுதல் என்பது அத்தியாவசியம். சட்டத்தை பின்பற்றவில்லையெனில், நீங்கள் ரூபாய் 2000 வரையிலான அதிகபட்ச டிராபிக் அபாரதத்தை செலுத்த வழிவகுக்கக்கூடும். (தொடர்ந்து அதே தவறை செய்பவர்களுக்கு ரூ.4000 அபராதம்).

ஹோண்டா டியோ இன்சூரன்சில் காப்பீடு செய்யப்படுவது யாவை?

நீங்கள் ஏன் டிஜிட்டின் ஹோண்டா டியோ இன்சூரன்ஸை வாங்க வேண்டும்?

ஹோண்டா டியோ இன்சூரன்ஸ் பிளானின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல்

×

உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ்

×
Get Quote Get Quote

Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள

ஹோண்டா டியோ & எக்ஸ் ஷோரூம் விலை

வகைகள் எக்ஸ்-ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாறலாம்)
டியோ எஸ்டிடி, 109.19 சிசி ₹ 53,218
டியோ டிஎல்எக்ஸ், 109.19 சிசி ₹ 55,218

எவ்வாறு கிளைமை தாக்கல் செய்ய வேண்டும்?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

ஹோண்டோ டியோ: இந்தியர்களுக்கான புதிய மற்றும் ஸ்டைலான ஸ்கூட்டர்

டியோ பயணிகளின் வாகனம் என்றாலும், இது தினசரி பயணத்திற்கு மிகவும் பொருத்தமானது, ஹோண்டாவும் இந்த வாகனத்தின் ஸ்டைலிற்கு முன்னுரிமை அளித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் நவநாகரீக அம்சங்கள் நாட்டின் இளையத் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும், இந்த டூ-வீலர்-இன் உட்பாகங்களின் அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு.

  • இது ஒரு சிலிண்டர் என்ஜின் உடன் 5.3-லிட்டர் அமைப்பைக் கொண்டது .
  • இந்த ஸ்கூட்டர் என்ஜினால் 110சிசி கனரகஅளவையும்  8 பிஹெச்பி திருகுவிசையையும்(டார்க்) உருவாக்கமுடியும் .
  • எரிபொருள்  திறன்  என்பது வாகனத்தின் மற்றொரு துறை ஆகும். இதன் மூலம் வாகன உரிமையாளர் 55கிலோ  மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.

இத்தகைய அம்சங்கள் மற்றும் மேலும் பல காரணத்தினால், இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு ஹோண்டா டியோவிற்கு டிசைன் மார்க் விருது கிடைத்தது(1). பல ஆண்டுகளில் இந்த இரு சக்கர வாகனத்தின் புகழ் படிப்படியாக அதிகரித்து, பயணிகளுக்கிடையே நாட்டின் சிறந்த இரண்டு சக்கர வாகனமாக மாறியது.

எனவே, டியோ உரிமையாளர்கள் அவர்களது இரு சக்கர வாகனத்தைப் பாதுகாக்க, விபத்துகள் ஏற்பட்டால் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்க தேவையான பண உதவி பெறுவதற்கும் ஹோண்டா இன்சூரன்ஸ்-ஐ பெறுவது உரிமையாளர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகும்.

இருப்பினும், நீங்கள் சரியான இன்சூரன்ஸ் வழங்குநரை தேர்வு செய்வதும் காப்பீட்டை தேர்வு செய்தற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்தகைய திட்டங்கள் என்று வரும்போது டிஜிட் இன்சூரன்ஸை கண்மூடித்தனமாக நீங்கள் நம்பலாம்.

ஏன் உங்கள் ஹோண்டா டியோ இரு சக்கர வாகன இன்சூரன்ஸிற்கு டிஜிட்-ஐத் தேர்வு செய்ய வேண்டும்?

பல்வேறு இரு சக்கர வாகன இன்சூரன்ஸின் அம்சம் மற்றும் அதன் பயன்ளையும் தாரளாமாக ஒப்பிட்டு பார்க்கலாம், டிஜிட் பாலிசிதாரர் எதிர்பார்க்கக்கூடிய சில பயன்கள் பின்வருமாறு.

பாலிசிதாரர்களுக்கு உள்ள பல்வேறு இன்சூரன்ஸ் விருப்பங்கள்: டியோ இன்சூரன்ஸ்-ஐத் தேர்வு செய்யும் போது டிஜிட் வாடிக்கையாளருக்கு போதிய விருப்பம் இருப்பதை டிஜிட் உறுதி செய்கிறது. நீங்கள் பின்வரும் பல்வேறு வகையான டூ-வீலர் இன்சூரன்சிலிருந்து தேர்வு செய்யலாம்:

  • தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி: இது போன்ற பாலிசி தேர்டு பார்ட்டிக்கான நிதி பொறுப்பு, தனி நபர் உட்பட, வாகனம் அல்லது  சொத்து, உங்கள் டியோ மூலம் விபத்து ஏற்பட்டால் அதையும் காப்பீடு செய்யும். இருப்பினும், சுய சேதத்தை இந்த பாலிசியில் கிளைம் செய்ய முடியாது.  சில செலவுகளை கட்டாயமாக உங்கள் சொந்த செலவில் நீங்கள் செய்யவேண்டும்.
  • காம்ப்ரிஹென்சிவ் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி- : சில காப்பீடுகள்,சுய சேதத்தையும் - தேர்டு பார்ட்டி லையபிலிட்டியையும் காப்பீடு செய்கின்றன. இதனால் இரு சக்கர வாகனத்திற்க்கு ஏற்படும் சேதத்தையும், உங்கள் லையபிலிட்டியைத் தவிர தேர்டு பார்ட்டிக்கு விபத்து ஏற்பட்டாலும் கிளைம் செய்யலாம் . கூடுதலாக, இது போன்ற திட்டங்கள் வாகனத் திருட்டு மற்றும் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை கிளைம் செய்ய நிதி உதவி வழங்குகிறது.

நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு டியோ இன்சூரன்ஸ் பிளான், சொந்த சேதத்திற்கான பாதுகாப்பு. இதில் தேர்டு பார்ட்டியின் இன்சூரன்ஸ் பிளானை நீக்கிவிட்டு காம்ப்ரிஹென்சிவ் பாலிசிக்கான பயன்களை பெறலாம்.

இருப்பினும், இது போன்ற திட்டங்களை 2018 செப்டம்பருக்குப் பிறகு உரிமையாளர்களுக்கும், புது பைக்/ஸ்கூட்டர்  வாங்கியவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

இன்சூரன்ஸ் வழங்குநர்களிடமிருந்து உங்களுடைய தனிப்பட்ட தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பெறலாம்.

  • எளிய முறையில் ஆன்லைன் பாலிசி வாங்குதல், புதுப்பித்தல் விபரங்கள்- அடிக்கடி, டூ வீலர் பாலிசியை வாங்குதல் மற்றும் புதுப்பித்தல்  என்பது வேலையை போன்று தோன்றலாம். உங்களுக்கும் அதே உணர்வு இருந்தால் டிஜிட் உங்களுக்கான சரியான தேர்வு. எங்கள் ஆன்லைன் போர்டல் மூலம் எளிதாக வாங்க அனுமதிக்கிறோம். எந்த ஆஃபீஸ்க்கும் செல்ல வேண்டிய நிலை இல்லை. இந்த ஆன்லைன் செயல்முறை ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டை புதுப்பிக்க எளிதாக இருக்கும்., இணைய தளத்தின் மூலம் அவர்கள் தங்களது காப்பீட்டை எளிதான முறைகள் பணம் செலுத்தி புதுப்பிக்கும் செயல் முறையை முடிக்கலாம்.
  • அசத்தலான ஆன - நோ கிளைம் போனஸ் - எந்த ஒரு கிளைம் இல்லாத வருடங்களை கொண்ட பாலிசிதாரகளுக்கு டிஜிட் பல கவரக்கூடிய தள்ளுபடிகளை வழங்குகிறது. இது போன்ற போனஸை சேர்ப்பதன் மூலம் அதிக பயன் பெறலாம், இதனால் புதுப்பிக்கும் போது பிரீமியத்தை குறைகின்றது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் கிளைம் செய்வதை குறைப்பதால் வரம்புக்கு உட்பட்ட லையப்பிலிட்டுகளை பார்க்கலாம்.
  • உங்களது இன்சூர்ட் டிக்ளேர்ட் மதிப்பை தனிபயனாக்கிடுங்கள் - எதிர்பாராத விதமாக உங்கள் ஹோண்டோ டியோ திருட்டு, அல்லது பழுது பார்க்க முடியாத சேதம் அடையும் போது, காப்பீடு கொடுப்பவர்களிடம் இருந்து அதிக தொகையை பெறவேண்டும். டிஜிட் டியோ பாலிசி மூலம் ஐடிவி-யை எளிய முறையில் செய்துவிடலாம், டிஜிட்க்கு நன்றி. பாலிசி வாங்கும் தருணத்தில் , நீங்கள் உங்களுடைய  தேவைக்கு ஏற்றார் போல் விருப்பப்பட்ட  IDV ஐடிவி யை தேர்வு செய்யலாம்.
  • ஆன்லைன் தாக்கல் மற்றும் தொகை வழங்குதல் - பாலிசிதரர்களின் இடையூறுகளை தவிர்க்க இணைய தளத்தை முழுமையாக பயன்படுத்துகிறது. இதன் மூலம் நீங்கள் எந்த  கவலையும் இல்லாமல் கிளைம் ஐ தாக்கல் செய்யலாம். மேலும் உங்கள் டியோ ஐ சுய பரிசோதனை மூலம் ஸ்மார்ட் போனில் எவ்வித இடையூறும் இன்றி கிளைம் செய்யலாம். மற்ற நிறுவனங்களில் சேதத்திற்கான சான்றுகள், ஆவணங்கள் கொண்டு பலமுறை செல்ல வேண்டும், டிஜிட்டின் முழுமையான பேப்பர் இல்லாத வேலையின் மூலம் பாலிசிதாரர்களின் வேலை ஐ எளிய முறையில் செயல்படுத்தி நேரத்தையும் சேமிக்கிறது . 
  • 24x7 மணி நேர திறமையான வாடிக்கையாளர்  ஆதரவு - டிஜிட் வடிக்கையாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் எல்லா நேரத்திலும் உதவி பெறலாம் .பாலிசித்தரின் சந்தேகங்களக்கும் ,கேள்விகளும் உதவ தனி குழு ஏற்பாடு செய்து உள்ளது , எங்களது இலவச எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்களது ஸ்டாஃப்  வாடிக்கையாளரின் பாலிசி தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுவர்.
  • பயனுள்ள ஆட் ஆன்ஸ் - காப்பீடு வழங்குபவர்கள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் பாதுகாப்பு அற்றதாக இருக்கும். டிஜிட் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாலிசிகளை மாற்றி கொள்ள பின்வரும்  ரைடர்களை பாதுகாக்க  வழங்குகிறோம்.
  • பிரேக் டவுன் அஸ்ஸிடன்ஸ் 
  • கன்ஸ்யூமபில் கவர் 
  • என்ஜின் மற்றும் கியர் பாதுகாப்பு 
  • ரிட்டன் டு இன்வாய்ஸ் கவர் 
  • ஜீரோ டிப்ரிஷியேஷன் கவர் 
  • உங்கள் சூழ்நிலையை பொறுத்து இந்த ரைடர்களை ஹோண்டோ டியோ இன்சூரன்ஸ் பாலிசியில் சேர்க்கவும் . 

ஈர்க்கக்கூடிய கேரேஜ்களின் நெட்ஒர்க் - டிஜிட் பெரிதும் ஈர்க்கும் மற்றொரு அம்சம் அதன் கீழ் உள்ள நெட்வொர்க் கேரேஜ்களின் எண்ணிக்கை. இந்த சர்வீஸ் சென்டர்களில் ஏதேனும் ஒன்றில் ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய நீங்கள் நாடினால், அதற்கான செலவை நீங்கள் ஏற்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்களுக்கான பூஜ்ஜியப் பொறுப்பை உறுதிசெய்து, தொடர்புடைய செலவுகளை நாங்கள் நேரடியாக ஏற்றுக்கொள்வோம். இந்தியாவில் உள்ள இந்த கேரேஜ்களின் வலுவான நெட்வொர்க் நீங்கள் அத்தகைய மையத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும் உறுதி செய்கிறது.

சிறந்த காப்பீட்டாளரைத் தேர்வு செய்ய சிறிது நேரம் செலவிடுங்கள் , உங்கள் டியோ இன்சூரன்ஸ் டிஜிட் இந்த சிறந்த தேர்வாக இருக்கும் என்பதற்கு மேலே  உள்ள குறிப்புகளை  பாருங்கள் . மேலும்  நீங்கள் டிஜிட் ஐ  பற்றி அறிய விசிட் அவர் வெப்சைட் !

இந்தியாவில் ஹோண்டா டியோ டூ வீலர் காப்பீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது டியோ காப்பீட்டிற்கு கியர் அண்ட் என்ஜின் ஆட்-ஆன் தேவையா?

என்ஜின் மற்றும் கியர் ரைடர் பாலிசி கவரேஜில் உங்கள் டியோவிற்கு எலக்ட்ரிகல் & லீகுய்டு  டேமேஜ் ஐ  தருகிறது. உங்களுடைய பாலிசி பிளானில் ஸ்கூட்டர் என்ஜின் மற்றும் கியர் பாதிப்பு இருந்தால் கிளைம் செய்யலாம்..

நான் சரியான நேரத்தில் எனது பாலிசியை புதுப்பிக்க தவறிவிட்டேன், இப்போது அது காலாவதியாகிவிட்டது. நான் இப்போதும் எனது குமுலேட்டட் நோ கிளைம் போனஸை பெறமுடியுமா?

இல்லை, அகுமுலட்டேட் NCB ஐ பெற உங்களுடைய டூ வீலர் பாலிசி ஐ குறிப்பிட்ட நேரத்திற்குள் காலாவதியாகும் முன் புதுப்பித்திருக்க வேண்டும் 

டிப்ரிஸியேஷன் என்றால் என்ன ?

டிப்ரிஸியேஷன் என்பது வழக்கமாக ஏற்படும் தேய்மானம் ஆகும். இது போன்ற பாதிப்பு ஒட்டுமொத்த ஸ்கூட்டர் காப்பீட்டையும் பாதிக்கும்.