பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ்

பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசி ₹752 முதல் தொடங்குகிறது

Third-party premium has changed from 1st June. Renew now

பஜாஜ் டூ வீலர்கள், மிகவும் பிரபலமான டூ வீலர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருப்பதற்கான காரணம், பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் பஜாஜ் டூ வீலர்களை நீங்கள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய காரணிகள் போன்றவற்றை நாம் இங்கு காண்போம்.  

இந்தியாவில் 22 டூ வீலர் உற்பத்தியாளர்கள் இருக்கும் அதே வேளையில், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் அதன் டூ வீலர்களின் பல இரகங்களைக் கொண்டுவருகிறது.  இது பலதரப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. க்ரூஸர் முதல் கம்யூட்டர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரை, இந்தியர்கள் பயணம் செய்வதற்காக ஏராளமான டூ வீலர்களை பஜாஜ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

408 இந்திய நகரங்களில் 660க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை கொண்டுள்ள இந்நிறுவனம், டூ வீலர்களை வாங்க நினைக்கும் இந்திய நுகர்வோரின் குறிப்பிடத்தக்க பகுதியினருக்கு சேவை செய்கிறது. 

டூ வீலர்கள் தினசரி பயணத்திற்கு இன்றியமையாத வழிமுறையாக மாறிவிட்டாலும், அவை சாலையில் பல ஆபத்துகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு உட்படுகின்றன. பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியானது உங்களையும் வாகனத்தையும் பல்வேறு நிதி அபாயங்கள் மற்றும் இழப்புககளிலிருந்து பாதுகாக்கிறது. 

மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ் டூ வீலருக்கான இன்சூரன்ஸ் பாலிசிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமாக அத்தியாவசியமானதாக இருந்தாலும், இந்தத் திட்டங்கள் விரிவான நிதிப் பாதுகாப்பையும் வழங்குவதோடு, பயணம் செய்யும் போது உங்களை கவலையில்லாமலும் வைத்திருக்கும். 

ஆனால், பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி திட்டங்கபற்றி அறிந்துகொள்வதற்கு முன், பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படும் டூ வீலர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள். 

பஜாஜ் பைக் இன்சூரன்ஸில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது

இதில் பாதுக்காக்கப்படாதது எது

உங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியில் எவையெல்லாம் கவர் செய்யப்படவில்லை என்பதை அறிவது  முக்கியம், இதனால் நீங்கள் கிளைம் செய்யும் போது எந்த ஆச்சரியமான சூழலும் ஏற்படாது. அத்தகைய ஆச்சரியமூட்டும் சில சூழ்நிலைகள் இங்கே:

 

தேர்டு பார்ட்டி பாலிசி வைத்திருப்பவருக்கு ஏற்படும் சொந்த சேதங்கள்

தேர்டு பார்ட்டி அல்லது லையபிலிட்டி ஒன்லி பைக் பாலிசி இருக்கும் பட்சத்தில், சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதங்கள் இன்சூர் செய்யப்படாது.

 

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் அல்லது உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் குடிபோதையில் அல்லது செல்லுபடியாகும் டூ-வீலர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டும் சூழ்நிலைகளில், உங்கள் பைக் இன்சூரன்ஸை நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் கற்றல் உரிமத்தை மட்டும் வைத்திருந்து, செல்லுபடியாகும் உரிமம்  இல்லாமல் உங்கள் டூ-வீலரை பில்லியன் இருக்கையில் இருந்தால்- அந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

 

பின்விளைவினால் ஏற்படும் சேதங்கள்

விபத்தின் நேரடி விளைவாக இல்லாத ஏதேனும் சேதம் (எ.கா. விபத்துக்குப் பிறகு, சேதமடைந்த டூ-வீலர் வாகனம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, என்ஜின் சேதமடைந்தால், அதனை கிளைம் செய்ய முடியாது)

 

அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள்

ஏதேனும் அலட்சியத்தினால் ஏற்படும் சேதங்கள் (எ.கா. வெள்ளத்தில் டூ-வீலர் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் சேதம், உற்பத்தியாளரின் ஓட்டுநர் கையேட்டின்படி பரிந்துரைக்கப்படாதது, இன்சூர் செய்யப்படாது)

 

வாங்கப்படாத ஆட்-ஆன்கள்

சில சூழ்நிலைகளை ஆட்-ஆன்கள் மூலம் கவர் செய்யலாம். நீங்கள் அந்த ஆட்-ஆன்களை வாங்கவில்லை என்றால், அதற்குத் தொடர்புடைய சூழ்நிலைகள் இதில் உள்ளடக்கப்படாது.

 

டிஜிட்டின் பஜாஜ் பைக் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பைக் இன்சூரன்ஸ் திட்டங்கள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்து காரணமாக சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீ விபத்தினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கைப் பேரிடரினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு பார்ட்டி சொத்துக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு பார்ட்டிக்கு ஏற்பட்ட காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டுப் போதல்

×

உங்கள் ஐடிவி-யை (IDV) தனிப்பயனாக்குதல்

×

தனிப்பயனாக்கப்பட்ட கூடுதல் ஆட்-ஆன்ஸ்

×
Get Quote Get Quote

Know more about the காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி பைக் இன்சூரன்ஸைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள

கிளைமை எவ்வாறு கோருவது?

எங்கள் டூ-வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எந்த வித டென்ஷன் இல்லாமல் வாழலாம். ஏனெனில், இந்த டிஜிட்டல் கிளைம் செயல்முறையை 3 எளிய ஸ்டெப்களில் செய்துவிடலாம் உள்ளது!

ஸ்டெப் 1

1800-258-5956-க்கு அழைக்கவும். எந்த படிவங்களும் நிரப்பப்பட வேண்டியதில்லை.

ஸ்டெப் 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுங்கள். வழிகாட்டப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்தின் சேதங்களை பதிவு செய்யவும்.

ஸ்டெப் 3

உங்களுக்கு விருப்பமான பழுதுபார்க்கும் முறையைத் தேர்வுசெய்யவும். அதாவது எங்களின் கேரேஜ் நெட்வொர்க் மூலம் ரீஇம்பர்ஸ்மெண்ட் அல்லது கேஷ்லெஸ் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவும்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மாற்றும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இது தான். அது சரியானதும் கூட! டிஜிட்டின் கிளைமஸ் ரிப்போர்ட் கார்டை வாசிக்கவும்

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் ஒரு கண்ணோட்டம்

பஜாஜ் குழுமம் இந்தியாவின் முதல் 10 கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதால், அதன் கிளைகள் பல தொழில்கள் மற்றும் துறைகளில் பரவியுள்ளன. அதன் முதன்மை நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட டூ வீலர் மாடல்களை தயாரிப்பதன் மூலம் குழுமத்தின் பிராண்ட் மதிப்பையும் அங்கீகாரத்தையும் அதிகரிக்க வெற்றிகரமாக உதவியுள்ளது.

ஏறக்குறைய ஆறரை தசாப்தங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட பஜாஜ் ஆட்டோ லிமிடெட் இன்று உலகளவில் சிறந்த டூ வீலர் மற்றும் த்ரீ வீலர் உற்பத்தியாளர்களில் 4வது இடத்தில் உள்ளது. அதிக டிமாண்ட் கொண்ட நன்கு அறியப்பட்ட பஜாஜ் டூ வீலர் மாடல்களில் சில:

  • பல்சர் 150

  • டொமினார் 400

  • பல்சர் NS200

  • அவெஞ்சர் குரூஸ் 220

  • சி.டி (CT) 100

  • பல்சர் 220F

  • பிளாட்டினா 110

  • சேட்டக்

  • டிஸ்கவர் 

அதன் பைக் மாடல்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் இரு சக்கர வாகன சந்தையின் இயக்கவியலை மாற்ற உதவியது, அதன் பல மாடல்களுக்கு அதிக தேவை உள்ளது. இதன் விளைவாக, டூ வீலர் பாதுகாப்பு குறித்த தனிநபர்களின் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கானத் தேவை அதிகரித்து வருகிறது.

பஜாஜ் டூ வீலர்களை மிகவும் பிரபலமாக்கியது எது?

KB100 போன்ற ஆரம்பகால பஜாஜ் பைக் மாடல்கள் முதல் அவெஞ்சர் குரூஸ் 220 போன்ற உயர்தர பைக் மாடல்கள் வரை, பஜாஜ் ஆட்டோ இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பைக் பிரியர்களை மகிழ்விப்பதில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் டூ வீலர்களுக்கான நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோவை ஒரு பிரபல பிராண்டாக மாற்றியதற்கான சில முக்கிய காரணங்களைப் பாருங்கள்-

  • மலிவு விலையில் டூ வீலர்கள்- இது அனைத்து பொருளாதார அடுக்குகளிலும் உள்ள மக்களின் பயணத் தேவைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ அதன் டூ வீலர்கள் மூலம் சாமானிய இந்திய மக்களுடன் இணைந்துள்ளது.

  • தொழில்நுட்பம் நம்பகத்தன்மையை இணைத்துள்ளது- பஜாஜ் ஆட்டோ மிகவும் பிரபலமடைவதற்கான மற்றுமொரு முக்கிய காரணமாக (யுஎஸ்பி - USP) திகழ்வது அதன் தயாரிப்புகளில் உள்ள புதுமை.  இன்று, பல பஜாஜ் பைக் மாடல்கள் உலகத் தரம் வாய்ந்த டிடிஎஸ்-ஐ (DTS-i) இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக நம்பகத்தன்மை மற்றும் ஒப்பிடமுடியாத வலிமையைக் கொண்டுள்ளன. கூடுதலாக, வசதியான பயணத்திலிருந்து பவர் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இரவுத் தெரிவுநிலை வரை, ஈடு செய்ய முடியாத அம்சங்களின் காரணமாக பஜாஜ் டூ வீலர் மாடல்கள் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

  • களங்கமற்ற புகழ்- இந்தியாவின் மிகப்பெரிய டூ வீலர் உற்பத்தியாளர்களில் பஜாஜ் ஆட்டோ 2வது இடத்தில் உள்ளது. இது சர்வதேச அளவில் 70 நாடுகளுக்கு மேல் டூ வீலர் மாடல்களை வழங்குகிறது.

  • அனைவருக்கும் ஏற்ற டூ வீலர் - பஜாஜ் நிறுவனம் தினசரி பயணத்திற்கான எண்ணற்ற  மாடல்களை வழங்குகிறது, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுடன் தினசரி தொடர்பை உருவாக்குகிறது.

இந்த காரணங்களின் பட்டியல் காரணமாக, பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் சாமானியர்களும் அறிந்துகொள்ளும் பெயராகவும், உலகளவில் பிரபலமான டூ வீலர் பிராண்டாகவும் மாறியுள்ளது.

ஆனால், காத்திருங்கள்! அவற்றின் புகழ் நியாயமானதாக இருந்தாலும், பஜாஜ் டூ வீலர்கள் இன்னும் இழப்பு அல்லது சேதத்தின் அபாயத்திற்கு உள்ளாகின்றன. இது கடுமையான நிதி இழப்புகளை நீங்கள் சந்திக்க வழிவகுக்கும். பஜாஜ் பைக் மாடல்களின் உரிமையாளர்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேர்வுசெய்து, வரவிருக்கும் அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

மேலும், அவர்களின் மதிப்புமிக்க உடைமைகள் முழுவதும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, ஏற்கனவே இருக்கும் பாலிசி காலாவதியாகும் முன், அவர்கள் பஜாஜ் பைக் இன்சூரன்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள்

மற்ற வாகனங்களை விட டூ வீலர் ஓட்டிகள் சாலை விபத்துக்களுக்கு ஆளாகின்றனர். மேலும், அவர்கள் திருட்டு போன்ற பிற தொடர்புடைய ஆபத்துகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி  பின்வரும் காரணங்களுக்காக இன்றியமையாததாகிறது.

தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் திட்டங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றாலும், காம்ப்ரிஹென்சிவ் திட்டங்கள் விரிவான பலன்களை வழங்குகின்றன. உங்கள் பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸுக்கான திட்டத்தை நீங்கள் ஏன் பெற வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே:

  • பாலிசி இல்லாமல் இருப்பது சட்ட விரோதம்- மோட்டார் வாகனச் சட்டம் 1988-ஆனது, ஒவ்வொரு வாகன உரிமையாளரும் பொது இடங்களில் வாகனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி இன்சூரன்ஸைப் பெறுவதைக் கட்டாயப்படுத்துகிறது. அத்தகைய இன்சூரன்ஸ் இல்லாததால், போக்குவரத்து அபராதம் விதிக்கப்படுவஏற்படலாம். இதற்கான அபராதம் முதல் முறைக்கு ரூ. 2,000 முதல் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை செய்பவர்களுக்கு ரூ. 4,000 அபராதம் விதிக்கப்படும்.

  • பல்வேறு சூழ்நிலைகளில் உங்கள் வாகனத்தின் சேதத்திற்கான செலவுகளை மீட்டெடுக்கவும்- பஜாஜ் 2-வீலர் இன்சூரன்ஸ் திட்டம், விபத்துகள், இயற்கை பேரழிவுகள், தீ போன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களின் போது வாகன பழுதுபார்ப்பு அல்லது உதிரி பாகங்களை மாற்றுவதற்கான செலவினங்களுக்கான காப்பீடு அளிக்கிறது. இவ்வாறு நீங்கள் பஜாஜ் பைக் இன்சூரன்ஸின் கீழ் கிளைம்களை செய்து மேற்கண்ட சூழ்நிலைகளில் ஏற்படும் அனைத்து நிதி இழப்புகளுக்கும் திட்டமிடலாம்.

  • தனிப்பட்ட விபத்து ஏற்படும்போது கிடைக்கும் கவரேஜ் நன்மைகள்- பஜாஜ் மோட்டார்சைக்கிள் இன்சூரன்ஸ் திட்டத்தில், உங்கள் பைக் விபத்துக்குள்ளாகி, நீங்கள் ஊனமாகிவிட்டால், தனிப்பட்ட விபத்துஆட்-ஆன்-க்கான விருப்பமும் உள்ளது. பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கும் போது, அத்தகைய ஆட்-ஆன்களைத் தேர்ந்தெடுப்பது, அத்தகைய அபாயங்களிலிருந்து உங்களை நிதி ரீதியாகப் பாதுகாக்கிறது. வாகன உரிமையாளர் இன்சூரன்ஸ் விதிமுறைகளின் படி ஒரு தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைப் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். விபத்து காரணமாக இன்சூர் செய்யப்பட்டவர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கும் இத்தகைய திட்டங்கள் இழப்பீடு வழங்குகின்றன. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின் போது தனிநபர்கள் தங்கள் குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

  • தேர்டு பார்ட்டி சேதத்திற்கான கவரேஜ் நன்மைகள்- பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள், தேர்டு பார்ட்டி நபர் அல்லது அவரது/அவள் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களையும், நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் திட்டத்தைத் தேர்வுசெய்திருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளையும் உள்ளடக்கும். மாற்றாக, உங்கள் பஜாஜ் டூ வீலரின் பலன்களை அனுபவிப்பதற்கு, ஸ்டாண்ட்அலோன் தேர்டு பார்ட்டி லையபிலிட்டி காப்பீட்டைத் தேர்வுசெய்யலாம். தேர்டு பார்ட்டி கவரேஜ் இன்சூர் செய்யப்பட்ட வாகனத்தின் விளைவாக தேர்டு பார்ட்டிக்கு ஏற்படும் சேதங்களால் உண்டாகும் நிதி செலவுகளிலிருந்து இன்சூரரைப் பாதுகாக்கிறது. தேர்டு பார்ட்டி நபரின் மரணத்தால் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது.

இப்போது, இன்சூரன்ஸ் பாலிசியின் கவரேஜைப் பார்க்கும்போது, உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியின் சிறந்த அம்சங்களையும் நன்மைகளையும் அனுபவிக்க ஒரு போட்டிக்குரிய இன்சூரன்ஸ் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம். பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கும் இது பொருந்தும்.

சரி, டிஜிட் இன்சூரன்ஸை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ பாருங்கள்!

 

உங்கள் பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கு டிஜிட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்

டிஜிட் வழங்கும் பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசிகள் மார்க்கெட்டில் சிறந்த ஒன்றாக மற்றும் சில நன்மைகளுடன் வருகின்றன. பஜாஜ் டூ வீலர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களில் டிஜிட்டால் வழங்கப்பட்ட நன்மைகளைப் பாருங்கள்:

  • உங்கள் பஜாஜ் மோட்டார்சைக்கிளுக்கு பொருத்தமான இன்சூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம்- டிஜிட்டுடன், உங்கள் பஜாஜ் பைக்கிற்குத் தனிப்பயனாக்கப்பட்ட பொருத்தமான இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பின்வரும் இன்சூரன்ஸ் திட்டங்களைச் சரிபார்க்கவும்:

  • a) தேர்டு பார்ட்டி லையபிலிட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் கவர்- தேர்டு பார்ட்டி லையபிலிட்டி கவரேஜின் கீழ், தேர்டு பார்ட்டி வாகனம் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் இன்சூர் செய்யப்பட்ட பைக்கின் காரணமாக தேர்டு பார்ட்டி நபரின் காயம் அல்லது இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறுவீர்கள்.

  • b) காம்ப்ரிஹென்சிவ் டூ வீலர் இன்சூரன்ஸ்- பெயர் குறிப்பிடுவது போல, ஒரு காம்ப்ரிஹென்சிவ் பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி, விபத்து, தீ, திருட்டு, இயற்கைப் சீற்றங்கள் போன்றவற்றால் சொந்த வாகனம் சேதம், தேர்டு பார்ட்டி சேதத்தால் ஏற்படும் லையபிலிட்டிக்கான கவரேஜையும் உள்ளடக்கிய விரிவான கவரேஜை வழங்குகிறது. 

செப்டம்பர் 2018க்குப் பிறகு பஜாஜ் பைக்கை வாங்கிய டூ வீலர் உரிமையாளர்களும் தங்கள் வாகனத்தை ஓன் டேமேஜ் கவர் மூலம் இன்சூர் செய்யலாம். இந்த இன்சூரன்ஸ் திட்டம் ஒரு விரிவான இன்சூரன்ஸ் திட்டத்தின் பலன்களை வழங்குகிறது, அதுவும் தேர்டு பார்ட்டி லையபிலிட்டிப் பலன்கள் இல்லாமல். 

  • பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை எளிதாக வாங்குதல் மற்றும் புதுப்பித்தல்- டிஜிட்டானது பஜாஜ் பைக் இன்சூரன்ஸை ஆன்லைனில் சில எளிய படிகளில் எளிதாக வாங்குவதற்கு உதவுகிறது. இதனால் இந்த செயல்முறை தொந்தரவு இல்லாததாகவும் வசதியாகவும் ஆகிறது. குறைந்தபட்ச ஆவணச் சமர்ப்பிப்புத் தேவை மற்றும் டிஜிட்டல் விண்ணப்பச் செயல்முறை ஆகியவை இன்சூரன்ஸ் வாங்குதலை விரைவாகக் கண்காணிக்க உதவுகின்றன. இதேபோல், பஜாஜ் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் டிஜிட்டுடன் சிரமமில்லாத முறையில் புதுப்பிக்கவும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

  • கேஷ்லெஸ் ரிப்பேருக்கான 4400+ நெட்வொர்க் கேரேஜ்கள்- 4400 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் கேரேஜ்கள் கிடைப்பதால், டிஜிட்டுடன் கூடிய பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசி இருந்தால், சேதம் ஏற்பட்டால் டூ வீலரை ரிப்பேர் பார்ப்பதை எளிதாக்குகிறது. ரிப்பேர் பார்க்கும் போது பணம் செலுத்தத் தேவையில்லை, அதாவது உங்கள் பஜாஜ் டூ வீலருக்கான டிஜிட்டின் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெற்றிருந்தால், இதுபோன்ற அவசரநிலைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்வது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

  • மூன்று படிகளில் எளிமைப்படுத்தப்பட்ட காகிதமில்லா கிளைம் செட்டில்மெண்ட் ப்ராஸஸ்- டிஜிட்டுடன் பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் புதுப்பித்தலை நீங்கள் வாங்கியதும் அல்லது தேர்வுசெய்ததும், மூன்று எளிய படிகளில் உங்கள் கிளைம்களை நீங்கள் செய்யலாம்.  டிஜிட்டுடன் கூடிய டூ வீலர் கிளைம் செட்டில்மெண்ட்டுக்கான சராசரி கால அவகாசம் மற்ற பல இன்சூரன்ஸ் வழங்குநர்களை விட குறைவாக உள்ளது. இதனால் அதிவேக கிளைம்களை உறுதி செய்கிறது. இது ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கப்பட்ட, சுய-பரிசோதனை வசதியை வழங்குகிறது. இது காகிதமில்லாத பயன்முறையில் விரைவான கிளைம் செட்டில்மெண்ட்டை உறுதி செய்கிறது. இன்சூரன்ஸ் வழங்குநரிடம் அதிக கிளைம் செட்டில்மெண்ட் விகிதமும் உள்ளது. இது உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி நிராகரிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

  • மேம்பட்ட பாதுகாப்பிற்கான பல ஆட்-ஆன் கவர்கள்- டிஜிட் தரக்கூடிய பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் திட்டத்துடன் கிடைக்கும் ஆட்-ஆன்களை வாங்குவதன் மூலம் உங்கள் வாகனத்திற்கான மேம்பட்ட பாதுகாப்பையும் நீங்கள் அனுபவிக்க முடியும். டிஜிட் வழங்கும் இந்த ஆட்-ஆன் கவர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டு உங்கள் பஜாஜ் பைக்கிற்கான கவரேஜை அதிகரிக்கவும்.

  • பிரேக்டவுன் அஸ்சிஸ்டன்ஸ் கவர்

  • ஜீரோ டிப்ரிஸியேஷன்‌ கவர்

  • இன்ஜின் மற்றும் கியர் புரொட்டெக்ஷன் கவர்

  • கன்ஸ்யூமபில் கவர்

  • ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ் கவர்

  • 24x7 மணி நேர வாடிக்கையாளர் சேவை கிடைக்கும்- டிஜிட்டின் 24x7 மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு, டிஜிட்டை உங்கள் பஜாஜ் பைக்கிற்கு விருப்பமான இன்சூரன்ஸ் வழங்குநராகவும் ஆக்குகிறது. தேசிய விடுமுறை நாட்களில் கூட, உங்கள் சந்தேகங்கள் அல்லது புகார்களுக்கு எந்த நேரத்திலும் டிஜிட் வாடிக்கையாளர் மையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்!

பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பாலிசி அதிகபட்ச பலன்களுக்கு பலவிதமான கவரேஜ் விருப்பங்களை வழங்கும் அதே வேளையில், உங்கள் பிரீமியங்களைக் குறைப்பதனால் நீங்கள் பாலிசி வாங்கும் போதே நீங்கள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம். 

எனவே, உங்கள் பஜாஜ் டூ வீலருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையைக் குறைக்க நீங்கள் மேற்கொள்ளக்கூடிய சில வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எவ்வாறு குறைப்பது?

உங்கள் பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியம் தொகையைக் குறைக்க பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்:

  • தேவையான ஆட்-ஆன்களை மட்டும் வாங்கவும்-  இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் கவரேஜ் பலன்களைப் பார்த்த பிறகு, ஆட்-ஆன் கவர்களை கவனமாகத் தேர்வு செய்யவும். ஏனென்றால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ஆட்-ஆன்களுக்கும், நீங்கள் ஓரளவு அதிக பிரீமியம் செலுத்த வேண்டும். ஆட்-ஆன்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பது உங்கள் பிரீமியத்தை வரம்பிற்குள் வைத்திருக்க மட்டுமல்லாமல், உங்கள் பலன்களையும் அதிகரிக்கவும் உதவும்.

  • நோ கிளைம் போனஸ் பலன்களை சரிபார்க்கவும்- உங்கள் பஜாஜ் பைக்கை ஓட்டும் போது கவனமாக இருந்தால், டிஜிட்டிலிருந்து நோ கிளைம் போனஸின் பலன்களைப் பெறலாம். இந்த நன்மையின் கீழ், ஒவ்வொரு கிளைம் அல்லாத ஆண்டிலும், உங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியைப் புதுப்பித்தவுடன் அதற்கான பிரீமியத்தில் தள்ளுபடியைப் பெறலாம். பஜாஜ் பைக் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரீமியங்களில் அதிகபட்ச தள்ளுபடியைப் பெற, நோ-கிளைம் போனஸ் தொடர்பான உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரின் பாலிசிகளைச் சரிபார்க்கவும்.

  • வாலண்டரி டிடக்டபிள்ஸ்களைத் தேர்ந்தெடுக்கவும்- வாலண்டரி டிடக்டபிள்ஸ் பேமெண்ட்டைத் தேர்வுசெய்யவும். இதில் ரிப்பேர் அல்லது மாற்றுச் செலவுகளின் பகுதியளவு செலுத்துதலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். அத்தகைய டிடக்டபிள்ஸ்களை நீங்கள் செலுத்த  தேர்ந்தெடுப்பது, குறைவான பிரீமியங்களைச் செலுத்த உங்களை அனுமதிக்கிறது.

  • உங்கள் பாலிசியை நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கவும்- உங்கள் பைக் இன்சூரன்ஸ் பாலிசியை நேரடியாக இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து வாங்குவது விரும்பத்தக்கது. ஏனெனில் இது தேர்டு பார்ட்டி நபருக்கு செலுத்த  வேண்டிய கூடுதல் கட்டணத் தேவையை நீக்குகிறது.

இந்த சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை மனதில் வைத்திருப்பதன் மூலம் பொருத்தமான இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கான செலவை நீங்கள் குறைக்கலாம்.

இந்த தகவலுடன், வரவிருக்கும் நிதி இழப்புகளின் அபாயங்களிலிருந்து பாதுகாக்க உங்கள் பஜாஜ் பைக் இன்சூரன்ஸை இன்றே ஆன்லைனில் வாங்கவும். மேலும், அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் பாலிசி காலாவதியாகும் முன் அதனை புதுப்பிக்கவும்.