ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ்

ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் வெறும் ₹752-இல் தொடங்குகிறது

Third-party premium has changed from 1st June. Renew now

ஆன்லைனில் ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸை வாங்கவும்/புதுப்பிக்கவும்

source

ஒருவேளை நீங்கள் ஹோண்டா ஷைனை வாங்கியிருந்தால், நீங்கள் அதற்கு டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். உங்கள் பைக்கிற்கு ஏற்படும் எந்த வகை சேதத்திலிருந்தும் நீங்கள் நிதி ரீதியாக பாதுகாக்க பட்டிருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய ஹோண்டா ஷைன் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே சுருக்கமாக எளிய நடையில் கொடுத்திருக்கிறோம்.

ஹோண்டா ஷைன் என்பது இந்தியாவிலிருக்கும் ஹோண்டா மோட்டார் நிறுவனம் உற்பத்தி செய்யும் மிக பிரபலமான டூ-வீலர் வாகனங்களில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த உறுதியான வாகனம், தினசரி போக்குவரத்துக்கு மக்கள் உபயோகிக்கும் பைக்கிற்கு மிக பொருத்தமாக இருக்கும். பங்களாதேஷ் ஹோண்டா பிரைவேட் லிமிடட் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஆகியவை ஒன்றிணைந்து ஹோண்டா ஷைனை உருவாக்கி இந்தியன் மார்க்கெட்களில் 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 

இப்போது நீங்கள் ஹோண்டா ஷைனை வாங்கும் நோக்கம் கொண்டிருந்தால், நீங்கள் மற்றுமொரு மிக முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும் - அது தான் ஒரு டூ வீலர் இன்சூரன்ஸை வாங்குவது ஆகும்.

ஒருவேளை உங்கள் பைக்கிற்கு விபத்து நேரிடும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சேதங்களை ஈடுகட்ட மற்றும் நீங்கள் நிதி செலவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க  ஹோண்டா ஷைன் டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசி என்பதே அத்தகைய முன்னெச்சரிக்ககைக்கான சிறந்தத் தேர்வாகும். மேலும், தேர்டு பார்ட்டி லயபிலிட்டி இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருக்கவேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டம் 1988 கீழ் கட்டாயமயமாக்கப்பட்டது. நீங்கள் ஹோண்டா ஷைன் ஒட்டிக்கொண்டிருக்கும் போது ஒருவேளை உங்களிடம் எந்த சரியான இன்சூரன்ஸ் பாலிசியும் இல்லையெனில், நீங்கள் டிராஃபிக் அபராதம் ரூபாய் 2000 கட்ட வேண்டியிருக்கும் (அதே மீண்டும் நடந்தால் ரூபாய் 4000 அபராதம்).

ஹோண்டா சிபி(CB) ஷைன் இன்சூரன்ஸில் காப்பீடு செய்யப்பட்டுள்ளவை

ஹோண்டா CB ஷைன் இன்சூரன்ஸை நீங்கள் ஏன் வாங்க வேண்டும்?

ஹோண்டா CB ஷைனின் இன்சூரன்ஸ் பிளான்களின் வகைகள்

தேர்டு பார்ட்டி காம்ப்ரிஹென்சிவ்

விபத்ததால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தீயினால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

இயற்கை சீற்றங்களால் சொந்த டூ-வீலருக்கு ஏற்படும் சேதங்கள்/இழப்புகள்

×

தேர்டு -பார்ட்டி வாகனங்களுக்கு ஏற்படும் சேதங்கள்

×

தேர்டு -பார்ட்டி சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்கள்

×

பர்சனல் ஆக்சிடென்ட் கவர்

×

தேர்டு -பார்ட்டி நபருக்கு ஏற்படும் காயங்கள்/இறப்பு

×

உங்கள் ஸ்கூட்டர் அல்லது பைக் திருட்டு

×

உங்கள் ஐடிவியை தனிப்பயனாக்கலாம்

×

தனிப்பயனாக்கப்பட்ட ஆட்-ஆன்-களுக்கான கூடுதல் பாதுகாப்பு

×
Get Quote Get Quote

காம்ப்ரிஹென்சிவ் மற்றும் தேர்டு பார்ட்டி டூ வீலர் இன்சூரன்ஸ்க்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை பற்றி மேலும் அறிந்துக்கொள்ளுங்கள்

ஹோண்டா சிபி(CB) ஷைன் - வேரியண்ட் & எக்ஸ் ஷோரூம் விலை

வேரியண்ட் எக்ஸ் ஷோரூம் விலை (நகரத்திற்கு ஏற்ப மாற்றமடையலாம்)
CB ஷைன் டிரம் பைக், 65 Kmpl, 124.73 cc ₹ 58,097
CB ஷைன் டிரம் சிபிஎஸ்- CBS, 65 Kmpl, 124.73 cc ₹ 58,967
CB ஷைன் லிமிடெட் எடிஷன் டிரம் சிபிஎஸ் CBS, 65 Kmpl, 124.73 cc ₹ 59,267
CB ஷைன் டிஸ்க் பிரேக், 65 Kmpl, 124.73 cc ₹ 60,410
CB ஷைன் டிஸ்க் சிபிஎஸ் CBS, 65 Kmpl, 124.73 cc ₹ 63,627
CB ஷைன் லிமிடெட் எடிஷன் டிஸ்க் சிபிஎஸ்-CBS, 65 Kmpl, 124.73 cc ₹ 63,927

ஒரு கிளைம் தாக்கல் செய்வது எப்படி?

எங்கள் டூ வீலர் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் வாங்கிய பிறகு அல்லது புதுப்பித்த பிறகு, நீங்கள் எவ்வித டென்க்ஷனும் இல்லாமல் இருக்கலாம். ஏன் தெரியுமா? வெறும் 3-படிகளில் முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை மூலம் கிளைம் செய்து கொள்ளலாம்!

படி 1

1800-258-5956 என்ற எண்ணில் அழைக்கவும். எந்த விதமான படிவத்தையும் நிரப்ப தேவையில்லை.

படி 2

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சுய பரிசோதனைக்கான இணைப்பைப் பெறுவீர்கள். முறைப்படுத்தப்பட்ட படிப்படியான செயல்முறை மூலம் உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதங்களை பதிவு செய்யலாம்.

படி 3

உங்களுக்கு விருப்பமான ரிப்பேர் செய்யும் முறையை தேர்வு செய்யவும் அதாவது, ரீஇம்பர்ஸ்மென்ட் அல்லது கேஷ்லெஸ் நெட்வொர்க் கேரேஜ்களை தேர்வு செய்யலாம்.

டிஜிட் இன்சூரன்ஸ் கிளைம்கள் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படுகின்றன? ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மற்றொன்றிற்கு மாறும்போது உங்கள் மனதில் எழும் முதல் கேள்வி இதுதான். இதனை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது! டிஜிட்-ன் கிளைம் ரிப்போர்ட் கார்டினை படிக்கவும்

ஹோண்டா ஷைன் – ஒரு குறுகிய வரலாறு

ஹோண்டா ஷைனை இந்தியாவின் பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் டூ வீலர்களில் ஒன்றாக மாற்றும் பல பண்புகள் உள்ளன. உதாரணமாக,

  • 2016 ஆம் ஆண்டில், மோஸ்ட் அப்பீலிங் எக்ஸிகியூட்டிவ் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் (Most Appealing Executive Motorcycle of the Year) J.D. பவர் விருதை இந்த பைக் பெற்றது.(1)

  • அடுத்த ஆண்டு, ஹோண்டா ஷைன் இந்தியாவில் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டிய முதல் 125சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெயரையும் பெற்றது. (2)

  • புதிய ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி, இந்தியாவில் பிஎஸ்-VI என்ஜின் அப்டேட்டைக் கொண்ட முதல் மோட்டார்சைக்கிள் ஆனது. இது மாசு உமிழ்வைக் கணிசமாகக் குறைக்க உதவி புரிந்தது.

  • 2019 இல் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க ஹோண்டா சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் எஸ்பி ஆகியவை கூட்டு பிரேக்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த விதிமுறைகளின்படி, 125 சிசிக்குக் குறைவான எஞ்சின் நிலைமாற்றம் கொண்ட ஒவ்வொரு டூ வீலரும் சிபிஎஸ்-யைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

  • ஹோண்டா சிபி ஷைனின் எடிஷன்கள் அனைத்தும், அதன் பக்கவாட்டு எரிபொருள் டேங்கில் புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணக் குறியீடு செய்யப்பட்ட கிராப் ரெயில்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தகைய அம்சங்கள் மற்றும் பலவற்றுடன், ஹோண்டா ஷைன் ரேஞ்ச் உங்களின் அன்றாட பயணத்தைப் பொருத்தவரை நம்பகமான வாகனமாக இருப்பதை உறுதியளிக்கிறது. இதன் மலிவான விலையின் காரணமாக இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த பைக்குகளில் ஒன்றாகவும் அமைகிறது.

வழக்கமான ஏற்படும் தேய்மானம் மற்றும் கிழிமானத்தைத் தாங்கும் வகையில் ஷைன் ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்களை ஹோண்டா வடிவமைத்துள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் விபத்துகள் ஏற்படுவது சகஜம். இதுபோன்ற சாலை விபத்துகள் காரணமாக உங்கள் பைக் கடுமையாக சேதமாலாம். மேலும் வாகனத்தை பழுதுபார்க்கும் பொறுட்டு உங்கள் நிதி சார்ந்த லையபிலிட்டி அதிகரிக்கும். ஹோண்டா ஷைன் பைக் இன்சூரன்ஸ் திட்டம் இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து உங்கள் லையபிலிட்டியைக் குறைக்க உதவும்.

இப்பொழுது மீண்டும் இன்சூரன்ஸ் பற்றி பேசலாம் - சாலை விபத்துகள் காரணமாகவோ அல்லது வாகனத்திற்கு வேறு வகையான சேதம் ஏற்பட்டாலோ போதுமான நிதிப் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறந்த பாலிசி மற்றும் இன்சூரன்ஸ் வழங்குநரைப் தேர்வு செய்வது பற்றி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நுகர்வோரை மையமாகக் கொண்ட இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குவது மற்றும் உங்கள் ஹோண்டா ஷைன் பைக்கிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உங்கள் லையபிலிட்டியைக் குறைக்கும் சில இந்திய நிறுவனங்களில் டிஜிட்டும் ஒன்றாகும்.

ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஏன் டிஜிட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்?

பிற வழங்குநர்களைப் போலல்லாமல், டிஜிட்-ன் தயாரிப்புகள் குறிப்பாக பாலிசிதாரருக்கு டூ வீலர் இன்சூரன்ஸ் பெறுவதை  எளிதாகவும், தொந்தரவின்றியும் இருக்கும் வகையில்  உருவாக்கப்பட்டவை. பின்வரும் அம்சங்கள் கொண்ட டிஜிட் நிறுவனத்தின் பாலிசிகள் இதனை உங்கள் டூ வீலருக்கான சிறந்த தேர்வாக மாற்றுகிறது - 

  • பேப்பர்லெஸ் கிளைம் தாக்கல் மற்றும் அதிக கிளைம் செட்டில்மென்ட் - டிஜிட் ஆனது பாலிசிகளை ஆன்லைனில் கிடைக்க செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டங்களைக் கண்காணிப்பது, பராமரிப்பது மற்றும் புதுப்பிப்பது மிகவும் எளிதானது. மேலும், கிளைமகளை தாக்கல் செய்ய உங்கள் பாலிசிக்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்பது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. டிஜிட்டின் ஸ்மார்ட்ஃபோன்-இயக்கப்பட்ட சுய பரிசோதனை மூலம், டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிக்க்கான கிளைம் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டின் அதிக கிளைம் செட்டில்மென்ட் விகிதம் காரணமாக உங்கள் கிளைம் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் குறைவதால் இது ஒரு கூடுதல் நன்மையாக அமைகிறது. 

  • ஆன்லைனில் பாலிசி வாங்குதல் மற்றும் புதுப்பித்தல் - மேலே குறிப்பிட்டுள்ளபடி, டிஜிட்டிலிருந்து ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க நீங்கள் முகவர்கள் அல்லது தரகர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் டிஜிட் இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் உங்களுக்கான சரியான திட்டத்தை நீங்களே தேடிக் கொள்ளலாம். அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து, பாலிசியை வாங்க வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம். புதுப்பித்தல் செயல்முறையும் இதே போல தான், ஆனால் இன்னும் வேகமானது என்று சொல்லலாம். அதிக எண்ணிக்கையிலான ஆவணங்களின் தேவையின்றி முழு செயல்முறையையும் ஆன்லைனில் எளிதாக முடித்து விடலாம்.

  • அட்டகாசமான நோ-கிளைம் போனஸ் பலன்கள் - நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் ஒருவராக இருந்தால், ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டிலும் குறைவான கிளைம்களையே தாக்கல் செய்வீர்கள். கிளைம் இல்லாத ஆண்டானது, அடுத்தடுத்த வருடங்களுக்கான பிரீமியத்தில் அட்டகாசமான நோ-கிளைம் போனஸ் (என்சிபி) பலன்களைப் பெறுவதற்கு உங்களைத் தகுதிபெறச் செய்கிறது. கிளைம் இல்லாத போனஸ் பலன்கள் 20% முதல் 50% வரை இருக்கலாம். இதன் மூலம் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியை மலிவாக கிடைப்பதை சாத்தியமாக்குகிறது.

  • திறமையான 24x7மணி நேர வாடிக்கையாளர் ஆதரவு - நீங்கள் வேலை முடித்து வீடு திரும்ப தாமதமாகி உங்கள் பைக் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டதாக வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையின்போது நீங்கள் செய்ய வேண்டிய முதல் தர்க்கரீதியான படி விபத்து பற்றி உங்கள் இன்சூரருக்குத் தெரிவிப்பதாகும். இதன் மூலம் விபத்து காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு பணம் செலுத்த நிதி உதவி பெறலாம். டிஜிட்-ன் வாடிக்கையாளர் சேவை குழு பாலிசிதாரர்களிடமிருந்து இது போன்ற அழைப்புகளைப் பெற எப்போதும் தயாராக இருப்பார்கள். இரவு, பகல் எதுவாக இருந்தாலும் சரி, தேசிய விடுமுறை நாட்களிலும் கூட, நீங்கள் ஒரு அழைப்பு மட்டுமே செய்து உங்களுக்குத் தேவையான உதவியைப் பெறலாம்! கிளைம் தாக்கல் செயல்முறை குறித்து உங்களுக்கு உதவுவதைத் தவிர, உங்கள் பாலிசி தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் வாடிக்கையாளர் ஆதரவு குழுவிடம் அதனை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

  • உங்கள் ஐடிவி-யை தனிப்பயனாக்குங்கள்- உங்கள் பைக் திருடப்பட்டு விட்டால், இதற்கான இழப்பீட்டை உங்கள் இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது இன்சூரன்ஸ் அறிவிக்கப்பட்ட மதிப்பு என அறியப்படுகிறது. நீங்கள் ஹோண்டா ஷைன் பைக் இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறும்போது, உற்பத்தியாளரின் பட்டியலிடப்பட்ட பைக்கின் விலையில் இருந்து டிப்ரிஸியேஷன்‌ (தேய்மானம்)-யைக் கழித்து அதன் உங்கள் இன்சூரர் இந்த ஐடிவி மதிப்பைக் கணக்கிடுவார். எனவே, உங்கள் பைக் பழையதாக ஆக, ஐடிவி குறைகிறது. ஹோண்டா ஷைனின் ஐடிவியைத் தனிப்பயனாக்குவதன் நன்மையை டிஜிட் உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் வசிக்கும் இடத்தில அடிக்கடி திருட்டு நடைபெறுகிறது என்றால், முழுமையான நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதிக IDV கொண்ட பாலிசிகளை வாங்க வேண்டும்.

  • பல விதமான பாலிசிகளில் இருந்து தேர்வு செய்யலாம் - பலவிதமான பாலிசிகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரத்தையும் டிஜிட் உங்களுக்கு  வழங்குகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு விருப்பமும் பாலிசிதாரருக்கு பல்வேறு அளவிலான நிதி பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, வாங்குவதற்கு முன் கவனமாக சிந்தித்து செயல்படுங்கள்- 

  • a) தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – பெயர் குறிப்பிடுவது போல, விபத்தின்போது உங்கள் பைக் காரணமாக தேர்டு-பார்ட்டி தனிநபர், வாகனம் அல்லது சொத்துகளுக்கு சேதம் ஏற்படும் போது நிதி ரீதியாக உங்களுக்கு உதவும் ஒரு பாலிசியாகும். இருப்பினும், உங்கள் சொந்த வாகனத்தை ரிப்பேர் செய்வதற்கு உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.

  • b) காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி – விபத்துக்குள்ளான தேர்டு-பார்ட்டி நபருக்கும், பாலிசிதாரருக்கும் அனைத்து விதமான நிதி உதவியையும்  வழங்கக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசிகள் இவை. மேலும், உங்கள் பைக் தீ, பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் அல்லது கலவரங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் சேதம் அடைந்தால், இந்த பாலிசி மூலமாக நீங்கள் கிளைம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 2018க்குப் பிறகு தங்கள் பைக்கை வாங்கியவர்களும் டிஜிட்டில் இருந்து சொந்த டேமேஜ் கவர் - ஐப் பெறத் தகுதியுடையவர்கள். தேர்டு-பார்ட்டி லையபிலிட்டிகள் இல்லாமல் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) திட்டத்தின் அம்சங்களை இங்கே நீங்கள் பெறலாம். பாலிசியை வாங்குவது குறித்து முடிவெடுப்பதற்கு முன், இதிலிருந்து நீங்கள் பெறக்கூடிய அனைத்து அம்சங்களையும் கவனியுங்கள்.

ஆட்-ஆன் கவர் விருப்பங்கள் - ஒவ்வொரு பாலிசிதாரருக்கும் சில தனிப்பட்ட தேவைகள் மற்றும் அவசியங்கள் இருக்கலாம். டிஜிட் வழங்கும் அடிப்படை பாலிசிகள் இந்த நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்யாமல் போகலாம். இதனை சமாளிக்கும் விதமாக பாலிசிதாரர்கள் தங்கள் திட்டத்திற்காக வாங்கக்கூடிய பல ரைடர்கள் அல்லது ஆட்-ஆன்களையும் டிஜிட் வழங்குகிறது. இந்த ஆட்-ஆன்களில் சில பின்வருமாறு:

  • அதிக எண்ணிக்கையிலான நெட்வொர்க் கேரேஜ்கள் - ஒரு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கான முக்கியக் காரணம் எதிர்ப்பாராத செலவுகளை சமாளிக்க உதவவே ஆகும். இதைக் கருத்தில் கொண்டு, டிஜிட் நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட கேஷ்லெஸ் ரிப்பேர் செய்து கொள்ளக்கூடிய நெட்வொர்க் கேரேஜ்களை வழங்குகிறது. உங்கள் இன்சூரன்ஸ் பாலிசியை கிளைம் செய்து, உங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்வதைக் குறைக்க இந்த நெட்வொர்க் கேரேஜ்களில் ஒன்றைப் பார்வையிடவும்.

இத்தகைய நன்மைகளுடன், டிஜிட்டின் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசிகள் உங்கள் ஹோண்டா ஷைன் பைக்கிற்கு சிறந்த கவரேஜை வழங்குக்கின்றன.

அதன் இன்சூரன்ஸ் பாலிசி கவரேஜ்களுடன் சேர்த்து, டிஜிட் ஆனது பைக் மாடலைப் பொறுத்து சில திட்டங்களை வழங்குவதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

பிரபலமான ஹோண்டா ஷைன் மாடல்களுக்கான டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசி திட்டங்கள்

ஹோண்டா ஷைனில் மூன்று முதன்மை மாடல்கள் உள்ளன. அதாவது, ஹோண்டா சிபி ஷைன், ஹோண்டா ஷைன் மற்றும் ஹோண்டா ஷைன் எஸ்பி. இந்த மாடல்கள் ஒவ்வொன்றிற்கும் டிஜிட் தனிப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகிறது.

  • ஹோண்டா ஷைன் - ஹோண்டா ஷைன் என்பது பார்ப்பவரை ஈர்க்கக்கூடிய தரம் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள அடிப்படை மாடலாகும். 125சிசி திறன் கொண்ட எஞ்சின் நம்பகமான மற்றும் வலுமிகு செயல்திறனை வழங்க வல்லது.

  • ஹோண்டா சிபி ஷைன் - புதுப்பிக்கப்பட்ட பிஎஸ்-VI என்ஜினுடன் வரும் ஒரே ஷைன் தயாரிப்பு ஹோண்டா CB ஷைன் ஆகும். இது பெரும்பாலும் பிற ஷைன் மாடல்களின் அதே விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த பைக் ஆன்-ரோடு மைலேஜாக லிட்டருக்கு 65 கிமீ வழங்க வல்லது என்று ஹோண்டா கூறுகிறது. எனவே, இந்த வாகனத்தை வாங்குவது உங்கள் எரிபொருளை சிக்கனமாக்குவதுடன், சிறந்த மற்றும் நம்பகமான செயல்திறனை உறுதி செய்கிறது.

ஹோண்டா ஷைன் மாடலின் இந்த வகைகளுக்கு டிஜிட் வழங்கும் டூ வீலர் இன்சூரன்ஸ் பாலிசியுடன் நீங்கள் இன்சூர் செய்யலாம்.

இந்தியாவில் ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது ஹோண்டா ஷைன் செகண்ட் ஹேண்ட் பைக்கிற்கு சொந்த டேமேஜ் கவரை என்னால் வாங்க முடியுமா?

இல்லை. செப்டம்பர் 2018 க்குப் பிறகு வாங்கப்பட்ட புதிய பைக் மாடல்களுக்கு மட்டுமே சொந்த டேமேஜ் கவர் கிடைக்கும். அதற்குப் பதிலாக, ஹோண்டா ஷைன் செகண்ட் ஹேண்ட் பைக் உரிமையாளர்கள் தேர்டு-பார்ட்டி லையபிலிட்டி மற்றும் காம்ப்ரிஹென்சிவ் (விரிவான) பாலிசிகளைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.

பிரீமியத்தைக் குறைக்கும் பொருட்டு ஹோண்டா ஷைன் ஐடிவியை என்னால் குறைக்க முடியுமா?

ஆம், உங்களால் முடியும். இருப்பினும், இதை செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், குறைக்கப்பட்ட இன்சூரன்ஸ் அறிவிக்கப்பட்ட மதிப்பு இருந்தால், உங்கள் பைக் பழுதுபார்க்க முடியாததாக இருந்தாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ ஏற்படும் நிதி இழப்புக்கு நீங்கள் அதிகப் பொறுப்பாவீர்கள்.

எனது ஹோண்டா ஷைன் இன்சூரன்ஸ் திட்டம் காலாவதியானால் என்ன ஆகும்?

பாலிசியை அதன் காலாவதி தேதிக்கு முன் புதுப்பிக்கத் தவறினால், உங்கள் திட்டம் காலாவதியாகலாம். மேலும் இந்த பாலிசி உங்களுக்கு வழங்கும் கவரேஜை நீங்கள் இழக்க நேரிடும். தொடர்ந்து பாதுகாப்பை உறுதிசெய்ய நீங்கள் மீண்டும் ஒரு புதிய திட்டத்தை வாங்க வேண்டி இருக்கும்.