ஹோண்டா ஆக்டிவா வாங்க விரும்புகிறீர்களா? வெவ்வேறு மாடல் வகைகள், ஹோண்டா ஆக்டிவா இன்சூரன்ஸ் பாலிசியில் உள்ள விஷயங்கள் போன்ற நீங்கள் அறிய விரும்பும் அல்லது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்துமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!
ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் பைக்/ஸ்கூட்டர்களில் அதிகமாக விற்பனையாகும் வாகனம் ஹோண்டா ஆக்டிவா ஆகும், அதாவது இந்தியாவின் டூ-வீலர் விற்பனையில் 14%-க்கும் மேல் ஹோண்டா ஆக்டிவா விற்பனையாகிறது. கட்டுப்படியாகும் விலை, கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அதிசயத்தக்க பயன்பாடு என்று ஒரு சராசரி இந்திய நுகர்வோரை கவர்வதற்கான அனைத்து அம்சங்களையும் ஆக்டிவா தன்னகத்தே கொண்டுள்ளது. (1)
தற்போது ஆக்டிவா மாடலை வாங்குவதென்று நீங்கள் தீர்மானித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அடுத்து ஆக்டிவா இன்சூரன்ஸ் வாங்குவது தான் சரியான அறிவுப்பூர்வமான முடிவாக இருக்க முடியும். ஆக்டிவாவின் எல்லா மாடல்களுமே பிஎஸ்-VI (BS-VI) அம்சத்திற்கு இணக்கமானதல்ல. எனினும், இந்த தனிக் குறிப்பீட்டினை உள்ளடக்கிய மாடல்களை மேலும் உருவாக்குவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இப்போது, சந்தைகளில் முக்கியத்துவம் பெறுகின்ற பற்பல அம்சங்களும் ஹோண்டாவில் நிறைந்திருந்தாலும், எந்தவொரு மற்ற டூ-வீலரையும் போலவே இதுவும் விபத்துகளும், பிற அபாயங்களும் ஏற்படக் கூடிய தன்மையது தான். இப்பேற்பட்ட சூழ்நிலையில் தான் டூ-வீலர் இன்சூரன்ஸ் வாங்குவதென்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
மேற்கொண்டு, மோட்டார் பொருத்தப்பட்ட எந்தவொரு டூ-வீலர் வாகனமும் இந்திய சாலைகளில் செல்லுவதற்கு தேர்டு பார்ட்டி லையபிலிட்டி (பொறுப்பு) இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது சட்டப்படி கட்டாயமாகும். உங்களிடம் இந்த பாலிசி இல்லையென்றால், மோட்டார் வாகன (திருத்த) சட்டம் 2019-இன் படி, உங்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படலாம். இதையே திரும்ப திரும்ப செய்யும் பட்சத்தில், ரூ.4000 அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசிக்களை பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்வதற்கு முன்பு, இதோ ஒரு நிமிடம் காத்திருக்கவும்!
ஆக்டிவா டூ-வீலர் இன்சூரன்ஸ் பாலிசியின் நன்மைகளை எவ்வாறு நீங்கள் மிகுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், மற்ற எந்த வேறுபட்ட மாடல்களுக்கு நீங்கள் இந்த பாலிசியை பெற முடியும் போன்ற ஹோண்டா ஆக்டிவா பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம்.