இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்
Instant Policy, No Medical Check-ups

இந்தியர்களுக்கான சிங்கப்பூர் டூரிஸ்ட் விசா

இந்திய குடிமக்களுக்கான சிங்கப்பூர் டூரிஸ்ட் விசா பற்றிய அனைத்தும்

காற்றில் மிதப்பது போன்ற அனுபவம், வேடிக்கையுடன் மகிழ்ச்சியையும் கொண்டுள்ள இடத்தை தேடுகிறீர்களா? அப்படியென்றால் அந்த இடம் சிங்கப்பூர்தான். நீங்கள் அந்த இடத்தை கட்டாயம் பரிசீலிக்கலாம்!

இரவு வாழ்க்கையுடன் கண்கவர் பசுமை விருந்து, பிரம்மாண்டங்களுக்கு பெயர் பெற்ற சிங்கப்பூரில் டூரிஸ்ட்கள் ஆராய்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும், மேலும் இது உலகெங்கிலும் உள்ள டூரிஸ்ட்கள் மற்றும் டிரான்சிட் டிராவலர்களை ஈர்க்கிறது.

குடும்பங்கள், தனிப்பயணிகள் மற்றும் இளம் பயணிகளை ஈர்க்கும் அற்புதமான இடம்தான் சிங்கப்பூர். சிங்கப்பூர் ஷாப்பிங் திருவிழா, இன்டோர் ஸ்கைடைவிங், ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிடீகளுக்கான உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கப்பாதை மற்றும் புகழ்பெற்ற மற்றும் கலை ஆர்வலர்களின் சொர்க்கமான தேசிய கலை அருங்காட்சியகம் ஆகியவை சிங்கப்பூரின் பிரபலமான இடங்களில் சில! சிங்கப்பூரின் பிற பிரபலமான இடங்கள் மற்றும் நீண்ட டிராவல் திட்டங்களை ஆராய்வததற்கு முன், மிக மிக முக்கியமான பகுதியான, விசாவுக்குச் செல்வோம்!

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்குச் செல்ல இந்திய குடிமக்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட விசா தேவை, அவற்றில் சிங்கப்பூரும் ஒன்று! 

சிங்கப்பூருக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையா?

ஆம், இந்தியர்களுக்கு சிங்கப்பூருக்கு செல்ல விசா தேவை. இருப்பினும், சிங்கப்பூருக்குச் செல்லும் டூரிஸ்ட்களின் விரைவான அதிகரிப்பு இந்த செயல்முறையை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆக்கியுள்ளது.

தூதரகத்தால் வழங்கப்பட்ட டூரிஸ்ட் விசா டூரிஸ்ட்களை அதிகபட்சமாக 30 நாட்கள் தங்க அனுமதிப்பதுடன் 2 ஆண்டுகள் செல்லுபடியாகும். இது மல்டிபிள் என்ட்ரி பெர்மிட் ஆகும், அதாவது ஒவ்வொரு முறையும் நீங்கள் சிங்கப்பூருக்குச் செல்லும்போது, நீங்கள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை!

விசா ஒப்புதல் சில அடிப்படை நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது:

  • சிங்கப்பூருக்கு வருகை தந்த நாளிலிருந்து இந்தியக் குடிமக்களுக்குச் சொந்தமான 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.

  • நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் வங்கிக் கணக்கில் போதுமான பணம்.

இந்திய குடிமக்களுக்கு சிங்கப்பூர் விசா ஆன் அரைவல் உள்ளதா?

இல்லை, சிங்கப்பூரில் விசா ஆன் அரைவல் விருப்பம் இந்திய குடிமக்களுக்கு பொருந்தாது. எனவே இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்கு செல்ல முன்னர் அங்கீகரிக்கப்பட்ட விசா தேவை. இருப்பினும், மூன்றாவது நாட்டிற்கு அல்லது அங்கிருந்து விமானத்தில் பயணம் செய்யும் இந்தியர்கள் 96 மணி நேர விசா ஃப்ரீ டிரான்சிட் ஃபெசிலிட்டிக்கு (வி.எஃப்.டி.எஃப்) தகுதி பெறுவார்கள்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான டூரிஸ்ட் விசாவுக்குத் தேவையான ஆவணங்கள்

விசா செயலாக்கத்திற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த விதிகள் உள்ளன. உங்கள் விசா விண்ணப்பத்திற்கான ஒப்புதலைப் பெற நற்சான்றிதழ்களை வழங்குவது கட்டாயமாகும். சிங்கப்பூரைப் பொறுத்தவரை, உங்களிடம் பின்வரும் ஆவணங்கள் இருக்க வேண்டும்:

  • இந்திய பாஸ்போர்ட், சிங்கப்பூருக்குள் நுழையும் எதிர்பார்க்கப்படும் தேதியிலிருந்து குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.

  • உங்களிடம் பழைய பாஸ்போர்ட் இருந்தால், அதையும் இணைக்கவும்.

  • 35 மிமீ X 45 மிமீ டைமென்க்ஷன் 2 சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 80% ஃபேஸ் குளோஸ் அப், மேட் ஃபினிஷ் மற்றும் ஒயிட் பேக்கிரவுண்டு. நீங்கள் அணியும் மேலாடையின் நிறம் வெள்ளை நிறமாக இருக்கக்கூடாது. பாஸ்போர்ட்டில் பசையுடன் ஒரு புகைப்படம் ஒட்டப்பட்டு கையெழுத்திட வேண்டும். இரண்டாவது புகைப்படம் விசா விண்ணப்ப படிவத்துடன் இருக்கவேண்டும்.

  • உள் மற்றும் வெளிப்புற பயணத்திற்கான விமான டிக்கெட்டுகள்.

  • கடந்த 3 மாத பேங்க் ஸ்டேட்மென்ட்.

  • விசா விண்ணப்பப் படிவம்-14 A.

  • உங்கள் சிங்கப்பூர் பயணத்தின் நோக்கம் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய கவர் லெட்டர்.

இந்திய குடிமக்களுக்கான சிங்கப்பூர் விசா கட்டணம்

இந்திய குடிமக்களுக்கான விசா செயலாக்க கட்டணம் ஒவ்வொரு நபருக்கும் 30 எஸ்.ஜி.டி (சிங்கப்பூர் டாலர்) ஆகும். இந்த கட்டணம் எந்த சூழ்நிலைகளிலும் திருப்பித் தரப்படாது. அத்துடன் நீங்கள் தூதரகம் வழியாகச் சென்றால் பொருந்தும். இது தவிர, உங்களுக்காக விசாவைப் பெறக்கூடிய சில முகவர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் அதற்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை எளிமையானது மற்றும் அது பின்வருமாறு:

சிங்கப்பூர் டூரிஸ்ட் விசா செயலாக்க காலம்

சிங்கப்பூர் டூரிஸ்ட் விசாவைப் பெற சுமார் 3-4 நாட்கள் ஆகும். செயலாக்க காலத்தில் நீங்கள் கவனத்துடன் இருக்கவேண்டும், மேற்கூறியவை அனைத்தும் வேலை நாட்கள், உங்கள் பயணத்திற்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்கவும்.

நீங்கள் ஒரு முகவர் மூலம் விண்ணப்பித்தால், விசா செயலாக்க நேரத்தை விரைவுபடுத்தலாம், ஆனால் அவர்கள் தங்கள் சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

சிங்கப்பூருக்கான டிராவல் இன்சூரன்ஸை நான் வாங்க வேண்டுமா?

நீங்கள் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது டிராவல் இன்சூரன்ஸை வாங்குவதற்கான கேள்வி மறுக்க முடியாததாக இருக்கும். நிச்சயமாக, நீங்கள் கொஞ்சம் ஃப்ரீயாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்கும்போது உங்களுக்கு ஒரு குழப்பமோ சிக்கலோ இருக்காது. நீங்கள் வாங்கும் சிங்கப்பூர் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசி, உங்களுக்கு சிக்கல் எழும் நேரத்திலும், உதவி தேவைப்படும் சூழ்நிலைகளிலும் உங்களைக் காப்பாற்றும். ஒரு டிராவல் பாலிசி உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான சிங்கப்பூர் டூரிஸ்ட் விசா செயல்முறை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மார்ச் 29-ம் தேதி சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளேன். விசாவிற்கு நான் எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு முன்னதாகவே நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் நிலைமையில், நீங்கள் பிப்ரவரி இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் இருக்கும்போது தற்செயலாக எனது பாஸ்போர்ட்டை இழந்தால் என்ன நடக்கும்?

அப்படி நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு புகார் செய்யவேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தல் செயல் முறைக்குப் பின்னர் உங்களிடம் கேட்கப்படும் லாஸ் ப்ராப்பர்டி ரிப்போர்ட்டின் ஒரு காப்பியைக் கேளுங்கள். உங்கள் பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கான கிளைம் ரீஇம்பர்ஸ்மென்ட்டின் போது இந்த ஆவணம் முக்கியமானது.

எனது விசா ஏற்கப்படவில்லை, ஆனால் நான் கட்டணத்தைச் செலுத்தியிருந்தால், நான் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

இல்லை, துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய விதிகளின்படி பணத்தைத் திரும்பப் பெற எந்த ஏற்பாடும் இல்லை. ஒரு முறை கட்டணம் செலுத்தி விட்டால், எக்காரணம் கொண்டும் அவர்கள் திருப்பிச் செலுத்தப்பட மாட்டார்கள்.

இந்தியர்களுக்கு சிங்கப்பூர் விசா ஆன் அரைவல் வழங்குகிறதா?

இல்லை, தற்போதைக்கு விசா ஆன் அரைவலுக்கு எந்த ஏற்பாடும் இல்லை. ஸ்டாண்டர்டு விசா அல்லது இ-விசாவிற்கு நீங்கள் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

நான் ஏன் சிங்கப்பூர் செல்ல விரும்புகிறேன் என்பதற்கான காரணங்களைக் அவர்களிடத்தில் காட்ட வேண்டுமா?

நீங்கள் ஏன் சிங்கப்பூருக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கான விவரங்கள் உட்பட, கவர் லெட்டர் இல்லாமல் உங்கள் விண்ணப்ப செயல்முறை முழுமையடையாது. அனைத்து செயல்முறையிலும் முறையாக இருங்கள்.