இன்டர்நேஷனல் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியை ஆன்லைனில் வாங்கவும்
Instant Policy, No Medical Check-ups

இந்தியாவிலிருந்து அயர்லாந்து டூரிஸ்ட் விசா

இந்தியாவிலிருந்து அயர்லாந்து டூரிஸ்ட் விசா பற்றி அனைத்தும்

வசீகரிக்கும் கோட்டைகள், ஏராளமான கதைகள் மற்றும் திருவிழாக்கள், புகழ்பெற்ற ஜி.ஓ.டி (GOT) இடங்கள் மற்றும் அழகான கடற்கரைகள். பல ஆண்டுகளாக, அயர்லாந்து மிகவும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. நீங்களும் விரைவில் ஹாலிடேக்காக அந்நாட்டிற்கு செல்ல பிளான் இருந்தால், முதலில் உங்களுக்கு டூரிஸ்ட் விசா தேவைப்படும். அதை எப்படிப் பெறுவது? உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் இங்கே இருக்கிறோம்.

அயர்லாந்து செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையா?

ஆம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அயர்லாந்து குடியரசை பார்வையிட ஐரிஷ் விசா தேவை. ஆனால் நீங்கள் வடக்கு அயர்லாந்து செல்ல பிளான் இருந்தால், இங்கிலாந்து விசா போதுமானது. 

சிறிது காலம் தங்குவதற்கு என்றாலும், அனைத்து இந்தியர்களுக்கும் அயர்லாந்து செல்ல டூரிஸ்ட் விசா தேவைப்படுகிறது. அவர்கள் அதிகபட்சம் 90 நாட்கள் தங்கலாம், இந்த விசாக்கள் 'சி' கேட்டகரி விசா என்று அழைக்கப்படுகின்றன. டூரிஸ்ட் விசா பார்வையாளர்களை அனுமதிக்காது என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்:

  • ஊதியம் அல்லது ஊதியம் இல்லாமல் எந்த வகையான வேலையையும் செய்யுங்கள்.
  • மருத்துவமனை போன்ற எந்த பொது வசதியையும் பயன்படுத்துங்கள்.

ஐரிஷ் டூரிஸ்ட் விசா அதிகபட்சம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்திய குடிமக்களுக்கு அயர்லாந்தில் ஆன் அரைவல் விசா உள்ளதா?

இல்லை, அயர்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு ஆன் அரைவல் விசா இல்லை. இருப்பினும், செல்லுபடியாகும் இங்கிலாந்து விசா உள்ளவர்கள் வடக்கு அயர்லாந்து செல்லலாம்.

இந்திய குடிமக்களுக்கான அயர்லாந்து விசா ஃபீ

விசா வகை ஃபீஸ் (சர்வீஸஸ் ஃபீ விலக்கப்பட்டுள்ளது)
சிங்கிள் எண்ட்ரி யு.எஸ்.டி (USD) 90.68 இ.யு.ஆர் 84 (EUR 84)
மல்டிபிள் எண்ட்ரி யு.எஸ்.டி (USD) 180.28 இ.யு.ஆர் 167 (EUR167)

பொறுப்புத்துறப்பு:எண்ட்ரி ஃபீஸ் மாற்றத்திற்கு உட்பட்டது.

அயர்லாந்து டூரிஸ்ட் விசாவுக்கு தேவையான ஆவணங்கள்

உங்களுக்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் பின்வருமாறு:

  • பிரிண்டட் மற்றும் சைன் அப்ளிக்கேஷன் ஃபார்ம்: தேதிகள், இடங்கள் மற்றும் கால அளவு போன்ற பயணம் தொடர்பான டீடைல்ஸ்களைக் குறிப்பிடவும்.
  • பாஸ்போர்ட் அளவு கலர்டு போட்டோகிராஃப்ஸ். போட்டோகிராஃப் 35X45 மிமீ வெள்ளை பின்னணி மற்றும் மேட் ஃபினிஷ் உடன் இருக்க வேண்டும். 70-80% முகம் தெரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • குறைந்தபட்சம் ஒரு பிளாங்க் பேஜுடன் அசல் பாஸ்போர்ட் இருக்க வேண்டும். விசா ஸ்டிக்கரை இன்செர்ஷன் செய்வதற்கு இது அவசியம். பாஸ்போர்ட் 6 மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.
  • ஹோட்டல் முன்பதிவு போன்ற அயர்லாந்தில் தங்கப்போவதற்கான சான்றுகள்.
  • விமான டிக்கெட்டுகள் செல்வதற்கும் திரும்புவதற்கும். 
  • விண்ணப்பதாரர் அயர்லாந்தில் தங்கியிருக்கும் போது அவரது பயணத்திட்டம்.
  • உங்கள் டிராவல் இன்சூரன்ஸ் பாலிசியின் நகல்.
  • கடந்த 3 ஆண்டுகளுக்கான இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் நகல். 
  • விண்ணப்பதாரரின் சுமார் 6 மாத பேங்க் ஸ்டேட்மெண்ட்கள்.
  • தற்போதைய நிறுவனத்தின் கடைசி 3 மாதங்களுக்கான சாலரி ஸ்லிப் (பணியில் இருந்தால் அப்ளிகபிள்).
  • நீங்கள் ஒரு பிசினஸ் செய்கிறீர்கள் என்றால், பிசினஸ் ரெஜிஸ்டரேஷன் சான்றிதழ் தேவை.
  • மாணவர்கள் பயணம் செய்தால், அவர்கள் உண்மையான சான்றிதழ் அல்லது அடையாள ஆதாரத்தை (ID) சமர்ப்பிக்க வேண்டும்.
  • சோலோ பெண் அயர்லாந்துக்குச் சென்றால் கணவரிடமிருந்து என்.ஓ.சி (NOC) தேவை.

இந்தியாவில் இருந்து அயர்லாந்து டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

அயர்லாந்து டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் ஆன்லைனில் செயல்படுத்தப்படலாம். விண்ணப்பதாரர் இந்த ஸ்டெப்களைப் பின்பற்ற வேண்டும்:

  • http://www.inis.gov.ie என்ற வெப்சைட்டுக்குச் சென்று ஃபார்மை ஆன்லைனில் நிரப்பவும்.
  • எண்டர் செய்யப்பட்ட அனைத்து டீடைல்ஸ்களும் சரியானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • தகவல்களை இரண்டு முறை படித்த பிறகு ஃபார்மை கவனமாக சமர்ப்பிக்கவும்.
  • டூரிஸ்ட் விசாவுக்கு உரிய ஃபீஸை செலுத்த வேண்டும்.
  • அருகிலுள்ள அயர்லாந்து விசா அப்ளிக்கேஷன் மையத்தில் அப்பாயின்மெண்ட்டை திட்டமிடுங்கள்.

அப்ளிக்கேஷன் ப்ராசஸ் முடிந்து இன்டர்வியூ முடிந்ததும், ப்ராசஸிங்கை தூதரகம் பார்த்துக் கொள்ளும்.

அயர்லாந்து டூரிஸ்ட் விசா ப்ராசஸிங் நேரம்

அயர்லாந்து டூரிஸ்ட் விசாவை ப்ராசஸஸ் செய்ய பொதுவாக 10-15 வேலை நாட்கள் ஆகும்.

உங்களுக்கு விசா மற்றும் முன்பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அயர்லாந்தில் வெளிநாட்டு விடுமுறையை ரசிக்க நீங்கள் தயாராகுங்கள்.

நான் அயர்லாந்து டிராவல் இன்சூரன்ஸ் வாங்க வேண்டுமா?

ஒரு விடுமுறையின் முழு நோக்கமும் ஓய்வு எடுப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் புத்துணர்ச்சி பெறுவது. உங்கள் பயணத்தை டிராவல் இன்சூரன்ஸ் செக்கியூர்டு செய்யும். எதிர்பாராத சூழ்நிலைகளில் கூட, நீங்கள் மன அழுத்தமோ அல்லது கவலையோ அடையவில்லை என்பதை டிராவல் இன்சூரன்ஸ் உறுதி செய்கிறது. உங்கள் அயர்லாந்து பயணத்திற்கான டிராவல் இன்சூரன்ஸில் சில நன்மைகள் பின்வருமாறு

  • அனைத்து சந்தர்ப்பங்களிலும் மருத்துவ எக்ஸ்பென்ஸ்களை கவர் செய்தல். நீங்கள் ஜெயண்ட்ஸ் காஸ்வே, கோ-ஐ அடைந்தபோது உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆன்ட்ரிம் உங்கள் கால்கள் ஒரு பாறையில் சிக்கி, உங்கள் கணுக்கால் இரத்த காயம் ஏற்பட்டுவிட்டது என்றால் சிகிச்சைக்கு மருத்துவ உதவி தேவைப்படும். உங்கள் டிராவல் பாலிசி மூலம், மருத்துவ எக்ஸ்பென்ஸ்களை கவர் செய்ய முடியும்.
  • நீங்கள் அயர்லாந்தின் நார்த் பாயிண்ட்டில் உள்ள மாலின் ஹெட்டில் இருந்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படியோ தெரியாமல் சறுக்கி பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவும் ஏற்பட்டுவிட்டது. இப்போது உங்களால் நகர முடியவில்லை, ஆனால் நீங்கள் மருத்துவமனையை அடைய வேண்டும். பாதுகாப்பான இடத்திற்கு அத்தகைய மருத்துவ வெளியேற்றம் டிராவல் பாலிசியில் கீழ் கவர் ஆகும்.
  • டிராவல் இன்சூரன்ஸ் கவர் உங்களுக்கு வேலை தரும் முதலாளி இறந்ததால் ஹோட்டல்கள் மற்றும் டிக்கெட்டுகளின் முன்பதிவு அமௌன்ட்கள் போன்ற உடனடி ரத்து செய்தல் மற்றும் உங்கள் அனைத்து விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்றாலும் டிராவல் இன்சூரன்ஸ் கவர் செய்யும்.
  • உங்கள் பாஸ்போர்ட் கொண்ட உங்கள் பேக்கை நீங்கள் தொலைத்துவிட்டாலோ, மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை தொலைத்துவிட்டாலோ டிராவல் இன்சூரன்ஸ் கவர் செய்யும். பாஸ்போர்ட் போன்ற எந்த எசென்ஷியல் ஆவணங்களும் இல்லாமல், எந்த வெளிநாட்டிலும் வாழ்வது சில சிரமங்களை ஏற்படுத்தும். ஆனால் உங்களிடம் ஒரு டிராவல் பாலிசி இருந்தால், அது அதையும் உங்களுக்கு கவர் செய்யும்.
  • ஒவ்வொரு முறையும் நாம் நமது செயல்களில் எச்சரிக்கையாக இருக்க முடியாது. நீங்கள் அடுத்தவரின் ப்ராபர்டிகளை டேமேஜ் செய்துவிட்டீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், இதுபோன்ற அனைத்து லையபிளிட்டிகளுக்கும் நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். 
  • உங்கள் எல்லா லக்கேஜுடன் ஒரு வண்டிக்காக நீங்கள் காத்திருந்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். யாரோ கண் இமைக்கும் நேரத்தில் உங்கள் உடமைகள் அனைத்தையும் எடுத்துச் சென்றனர். இதுபோன்ற அனைத்து இழப்புகளுக்கும் டிராவல் இன்சூரன்ஸ் உங்களுக்கு கவர் அளிக்கிறது.