டோக்யோ ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் மற்றும் பைக் டிசைனர், கிலின் கேருடன் இணைந்து, பஜாஜ் நிறுவனம் பல்சரை உருவாக்கியிருக்கிறது.
சந்தையில் பல்சரை அறிமுகப்படுத்தியதற்கு முன்னர், இந்தியாவில் பைக் மார்க்கெட் பெரும்பாலும் எரிபொருள் சிக்கன பயன்பாட்டினில் மட்டுமே கவனம் செலுத்தியது. இது குறைந்த அளவு திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
பஜாஜ் பல்சர் மாடல்கள் 150சிசி மற்றும் 180சிசி வண்டிகளை கட்டுப்படியாகும் விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தி புரட்சி செய்தது. அப்போதிலிருந்து, இந்தியாவில் டூ-வீலர் பயனீட்டாளர்கள் அதிக ஆற்றல் மிக்க பைக்குகளை தங்கள் பட்ஜெட்-டுக்கு ஏற்ற மலிவான விலையில் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.
பல்சர் 200என்எஸ் போன்ற புதிய பல்சர் மாடல்கள், எண்ணற்ற மதிப்புமிக்க விருதுகளை வாங்கியுள்ளது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவிலேயே அதிக விருது பெற்ற பைக் என்று அறியப்படுகிறது. அவற்றுள் என்டிடிவி-யின் கார் அண்ட் பைக் அவார்டில், பைக் ஆஃப் தி யேர் விருது (Bike of the Year Award) மற்றும் எக்கனாமிக் டைம்ஸ்-இன் சிக்வீல்ஸ் பைக் ஆஃப் தி யேர் விருதும் அடங்கும்.
காற்று மாசினை கட்டுப்படுத்துவதன் பொருட்டு அரசாங்கத்தின் முன்னெடுப்பிற்கு தக்கவாறு, BS-VI-க்கு இணக்கமான பல்சர் மாடல்களை விரைவில் தயாரிக்க போவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இத்தகைய அனைத்து அம்சங்களும் மற்றும் பலவும் சேர்ந்து பஜாஜ் பல்சருக்கு இந்தியாவின் மிக பிரபலமான பைக்குகளில் ஒன்று என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதனால் தான், டிசம்பர் 2019-இல் மட்டும், பஜாஜ் நிறுவனம் 50,000 யூனிட்களுக்கும் மேலான வெவ்வேறு பல்சர் மாடல் வேரியன்ட்களை (வேறுபட்ட வடிவங்கள்) விற்பனை செய்துள்ளது. (1)
பல்சர் போன்ற பெரிய பைக்குகள் அதிக வேகத்தில் செல்லும் ஆற்றலுடையவை, வண்டி ஓட்டுபவர்களுக்கு இதுவே மகிழ்வூட்டும் விஷயமாக அமைகிறது.
எனினும், வேகமாக செல்லுவதினால் உங்கள் உயிருக்கும், பைக்கிற்கும் ஆபத்துண்டாக்கக் கூடிய கொடிய விபத்துகள் ஏற்படக் கூடும். இன்சூரன்ஸினால் விபத்துகளை தடுக்க முடியவில்லையென்றாலும் கூட, இது போன்ற சம்பவங்களின் போது ஏற்படும் பொருளாதார சிக்கலை தீர்த்து வைக்க உதவுகிறது.
மேலும், இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் போதுமான அளவு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு, நீங்கள் பெயர்பெற்ற இன்சூரன்ஸ் வழங்குநரிடமிருந்து உங்கள் பஜாஜ் பல்சருக்கு காம்ப்ரிஹென்சிவ் (முழுமையான) கவரை வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் டிஜிட் எப்படி உங்களுக்கு உதவ முடியும் என்பதை பார்க்கலாம்!